மேலும் அறிய
Pimples Cure Tips: முகமெல்லாம் பருவா...? இதை செய்தால் பரு உரு தெரியாமல் போகும்!
Pimples Cure Tips: முகப்பரு பிரச்சனை இருப்பவர்கள் அதை உடைத்து விடுவது, அதை கிள்ளி விடுவது போன்ற பழக்கங்கள் இருக்கும்
![Pimples Cure Tips: முகமெல்லாம் பருவா...? இதை செய்தால் பரு உரு தெரியாமல் போகும்! How to get rid of pimples, Check here the Tips, Natural Ways to Remove Pimples Pimples Cure Tips: முகமெல்லாம் பருவா...? இதை செய்தால் பரு உரு தெரியாமல் போகும்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/02/df883b75512e34922724a38f9c338c6a_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தோல் பராமரிப்பு
முகப்பரு பிரச்சனை இருப்பவர்கள் அதை உடைத்து விடுவது, அதை கிள்ளி விடுவது போன்ற பழக்கங்கள் இருக்கும். இது வலி மிகுந்ததாக இருக்கும். மேலும், முகப்பருவை கிள்ளி விட்டால், அந்த இடத்தில் கருப்பாக மாறிவிடும்.இது போன்று முகப்பரு வந்த பிறகு தோலில் எந்த மாறுதலும் நடக்காமல் இருக்க சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
- நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் குடிப்பதால், இருக்கும் கழிவுகள் வெளியேறும். மற்றும் தோல் நீரேற்றத்துடன் இருக்கவும் உதவும்.
- ஒரு நாளைக்கு 3-5 முறை தண்ணீரால் முகத்தை கழுவ வேண்டும். இது சருமத்தை சுத்தமாக வைக்க உதவும்.
- உங்கள் சருமத்திற்கு ஏற்ற பேஷ் வாஷ் பயன்படுத்துங்கள். இது முகத்தில் இருக்கும் முகப்பரு குறையும்.
- பன்னீர் வாட்டர் கொண்டு முகத்தை கழுவலாம் .அல்லது பன்னீரை ஒரு காட்டனில் நனைத்து முகத்தில் சுத்தமாக துடைத்து எடுக்கலாம். இது குளிர்ச்சியை தரும்.
- வெயில் நேரத்தில் வெளியில் செல்லும் போது வெயில் நேரடியாக சருமத்தில் படாமல் கவனித்து கொள்ளுங்கள்.
- கற்றாழை முகத்தில் தடவலாம். கற்றாழை ஜெல் பயன்படுத்துவதால், முகப்பரு மீண்டும் மீண்டும் வராமல் தடுத்து கொள்ளும்.
- அதிகம் பழங்களை உணவில் சேர்த்து கொள்ளுங்கள். பழங்கள் பழ சாறுகள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும்.
- பழ தோல்களை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்யலாம்.
- வேப்பிலை உடன் மஞ்சள் இவை இரண்டையும் அரைத்து, அதனுடன் வெந்தயம் தண்ணீரை சேர்த்து முகத்தில் தடவினால், முகப்பருவை கட்டுப்படுத்தும்
- தினம் உடற்பயிற்சி செய்யவும். இது உடலில் இருக்கும் ஹார்மோன் குறைபாடுகளை சரி செய்யும். முகப்பரு வருவதற்கு மூல காரணமாக இருக்கும் ஹார்மோன்களை சரி செய்யும்.
- முகத்தில் அடிக்கடி கை வைத்து தேய்ப்பது,முகப்பருவை கிள்ளி விடுவது போன்ற வற்றை தவிர்க்க வேண்டும்.
- மருத்துவரால் பரிந்துரைக்க பட்ட கிரீம்களை மட்டும் முகத்திற்கு பயன்படுத்துங்கள். மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து கிரீம்களும் மருத்துவரால் நிரூபிக்க படவில்லை. அனைத்தையும் பயன்படுத்தாதீர்கள்.
- சிலருக்கு பேசியல் செய்வது கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். அதற்கு பயன்படுத்தும் கிரீம்கள் ஒவ்வாமை பிரச்சனையை தரும். அதனால் பேசியல் போன்றவற்றை தவிர்த்திடுங்கள். அல்லது இயற்கையாக பழங்களை கொண்டு பேசியல் செய்து கொள்ளுங்கள்.
இது போன்ற விஷயங்கள் முகப்பரு வருபவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். இளம் வயதில் அனைவர்க்கும் இது போன்ற பிரச்சனைகள் வரும். இதே தொடர்ந்து இருந்தால், ஹார்மோன் குறைபாடு காரணமாக இருக்கும். அதனால் தொடர்ந்து இருந்தால், தோல் சிகிச்சை மருத்துவரை அணுகவும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion