Post-Covid Diet | கொரோனாவில் இருந்து மீண்டவர்களே.. சத்தான உணவே முக்கியம்; என்ன சாப்பிடலாம்?
கொரோனாவில் இருந்து மீண்டாலும் உடல் சோர்வடைந்திருக்கக் கூடும். உடலை மீண்டும் பழைய உற்சாகத்துக்கு கொண்டு வர நாம் என்ன சாப்பிடலாம்?
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பின் இரண்டாவது அலை கடந்த ஒரு மாதமாக மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. அந்தவகையில் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டின் தொற்று பாதிப்பு 30ஆயிரத்தை கடந்து பதிவாகி வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 16,99,225 பேர் கொரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
இவர்களில் இதுவரை 14,26,915 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று ஒரேநாளில் 23,863 பேர் தொற்று பாதிப்பிலிருந்து குணம் அடைந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் நம் உடலுக்கு தேவையான சத்துகளை நாம் தொடர்ந்து கொடுக்க வேண்டும். கொரோனாவில் இருந்து மீண்டாலும் உடல் சோர்வடைந்திருக்கக் கூடும். உடலை மீண்டும் பழைய உற்சாகத்துக்கு கொண்டு வர நாம் என்ன சாப்பிடலாம்?
- குறைந்த அளவிலான ஆரோக்கியமான உணவை இடைவெளி விட்டு அடிக்கடி எடுத்துக்கொள்ள வேண்டும். நாள் முழுவதும் இடைவெளியுடன் ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வதால் கலோரிகளை நம் உடல் சரியாக பிரித்து எடுத்துக்கொள்ளும்
- பன்னீர், முட்டை போன்ற புரோட்டின் அதிகம் உள்ள உணவுப்பொருட்களை வைத்து சிற்றுண்டிகளை உண்ணலாம். பழங்களையும் சேர்த்து சாப்பிடலாம்.
- உணவுக்கு பிறகு மாத்திரைகளை உட்கொண்டால் வயிறு முட்ட நீரைக் குடிக்க வேண்டும்.
- உங்களுக்கு நீர்ச்சத்து மிக முக்கியம். அதற்காக அடிக்கடி நீர் அருந்தலாம். தண்ணீர் மட்டுமின்றி பழச்சாறுகள், மோர் போன்ற நீராகாரமும் குடிக்கலாம்
- தானிய வகைகள், கடலைகள் போன்ற ஊட்டச்சத்து உணவுகளையும் அடிக்கடி சாப்பிடலாம்
- உங்களது உடல் எடையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை உங்களது எடை குறைந்தால் உடனடியாக உங்களது ஊட்டச்சத்தில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது ஊட்டச்சத்து நிபுணரை அணுக வேண்டும்
புரதம்:
புரதச்சத்து நம் உடலுக்குஅதிகம் தேவை என்பதால் முட்டை, பன்னீரை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம். பருப்பு, சிக்கன் போன்ற உணவுகளை மதிய உணவாக எடுத்துக்கொள்ளலாம். பழவகைகளுடன் கூடிய தானிய வகைகளை சிற்றுண்டியாக உட்கொள்ளலாம். பால், தயிர் போன்ற ஆகாரம் சிறந்த புரோட்டின். ஒரு நாளைக்கு 600மிலி வரை பால் உட்கொள்ளலாம்.
விட்டமின் சி:
விட்டமின் சி நுரையீரலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் உணவு. பழவகைகளான பப்பாளி, கிவி, தக்காளி, மாம்பழம், ஸ்டாபெரி, நெல்லிக்காய் போன்றவைகளில் விட்டமின் சி அதிகம். சிங்க் சத்தும் மிக முக்கியமானது. கொண்டைகடலை, சிக்கன், பால், வெண்ணெய் ஆகியவற்றில் சிங்க் சத்து அதிகம்.
விட்டமின் டி:
கொரோனாவில் இருந்து மீண்டு வரவும், மீண்டவர்கள் மீண்டும் பழைய புத்துணர்ச்சியை பெறவும் விட்டமின் டி முக்கியமாகிறது. விட்டமின் டி பெற சூரியக்கதிர்களே போதுமானது. காலை மாலை நேரங்களில் 20 நிமிடங்கள் சூரிய வெளிச்சம் உடம்பில் படும்படி இருந்தாலே விட்டமின் டி பெறலாம்.
வேலைப்பளுவால் ஒரே வருடத்தில் 7.45 லட்சம் பேர் உயிரிழப்பு; எச்சரிக்கும் WHO!