Rice Water Facial : உங்க சருமம் கருமை நீங்கி பளபளக்கணுமா? சாதம் வடிச்ச கஞ்சியை இப்படி யூஸ் பண்ணுங்க..
நம் வீட்டின் சமையலறையில் பல்வேறு பொருட்கள் சருமப் பராமரிப்புக்கு உதவும். அந்த வகையில் வடிதண்ணீர் அல்லது வடிகஞ்சி என்றழைக்கப்படும் சோறு வடித்த கஞ்சி சருமப் பாதுகாப்பில் உதவும்.
நம் வீட்டின் சமையலறையில் பல்வேறு பொருட்கள் சருமப் பராமரிப்புக்கு உதவும். அந்த வகையில் வடிதண்ணீர் அல்லது வடிகஞ்சி என்றழைக்கப்படும் சோறு வடித்த கஞ்சி சருமப் பாதுகாப்பில் உதவும்.
இதில் வைட்டமின் இ மற்றும் வைட்டமின் பி நிறைவாக இருப்பதாலும், பல்வேறு ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதாலும் இது உங்கள் சருமத்தைப் பொலிவுடன் வைக்கும் என்று கூறுகின்றனர்.
அதனால் வாரத்தில் 2 முதல் 3 நாட்களுக்கு அரிசி வடிகஞ்சியை பயன்படுத்தினால் அது உங்கள் சருமத்திற்கு நல்லதொரு பொலிவைத் தரும் எனக் கூறுகின்றனர். இது சருமத்தை சுற்றுச்சூழல் மாசுவிலிருந்து காப்பதோடு, சருமத்தின் யுவி கதிர்களின் பாதிப்பு ஏற்படாமலும் காப்பாற்றுகிறது.
அதைவிட முக்கியமானது அரிசி வடிகஞ்சி சருமத்தில் ஈரப்பதத்தை தருகிறது. ஒரு குவளை வடிகஞ்சியில் மாவுச் சத்து, அமினோ அமிலங்கள் உள்ளன. இவை சருமத்தை ஈரப்பதத்தோடு பாதுகாப்பதோடு அதனை மிருதுவாக்குகிறது. வறண்ட சருமம் உள்ளவர்கள் இது நல்லதொரு நிவாரணி.
மேலும் அரிசி வடிகஞ்சியில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால் அது சருமத்தை ஃப்ரீ ரேடிகல்ஸிடமிருந்து காப்பாற்றுகிறது. ஃப்ரீ ரேடிக்கல்ஸ் என்றால் அது செல்களை அளிக்கும் தன்மை கொண்டவையாகும். சருமத்தின் செல்கள் அழிந்தால் சீக்கிரமே வயதான தோற்றம் வரும். அரிசி வடிகஞ்சி சுற்றுச்சூழல் நச்சிலிருந்து நம் சருமத்தைக் காப்பாற்றும்.
அதுமட்டுமல்லாமல் சருமத்திற்கு கூடுதல் நிறப்பொலிவைத் தரும். கரும் புள்ளிகள், ஹைபர் பிக்மென்டேஷன் ஆகியன இதனால் சீராகும். இதுவே சருமத்திற்கு ஒட்டுமொத்தமாக ஒரு புதிய பொலிவைத் தரும்.
இதை சருமப் பராமரிப்புக்கு மட்டுமல்லாமல் கேசப் பராமரிப்புக்கும் பயன்படுத்தலாம். அதனால்தான் அக்காலத்தில் சீகக்காய் தூளை வடிகஞ்சியில் கரைத்து தலையில் பூசிக் குளிப்பார்கள்.
ரைஸ்வாட்டர் பேஸ் க்ரீம் ரெஸிபி:
இதுமட்டுமல்லாமல் ரைஸ் வாட்டர் வைத்து வீட்டிலேயே எளிதாக பேஸ் ஜெல் செய்யலாம். அதற்குத் தேவையான பொருட்கள்
1. ஊறவைத்து வடிகட்டிய அரிசி தண்ணீர் 2 ஸ்பூர்ன்
2. கற்றாழை கூழ் 2 ஸ்பூன்
3. எசன்ஷியல் ஆயில் இரண்டு துளிகள்
எல்லாவற்றையும் ஒரு பவுலில் சேர்த்து அதனை நன்றாக கலந்து ஒரு ஆயின்மெண்ட் பதத்திற்கு வந்தவுடம் தேவையான அளவு முகத்தில் பூசினால் முகப்பொலிவு கூடும். சந்தையில் விற்கும் காஸ்மெடிக் பொருட்களைவிட செலவு குறைவு. ஆனால் பலன் அதிகம். பாதுகாப்பு நூறு சதவீதம் உறுதி. குறிப்பு முகத்தில் பூசக்கூடிய எவ்வித க்ரீமாக இருந்தாலும் அதை கையில் பூசி பரிசோதித்துவிட்டு பயன்படுத்துவது நலம். சிலருக்கு இயற்கை பொருட்களே கூட அழற்சியை ஏற்படுத்தும். அதனால் முறையாக பரிசோதித்துவிட்டு பயன்படுத்தலாம்.
View this post on Instagram