Hibiscus Kombucha : கொம்புச்சா பற்றி கேள்விப்பட்டிருக்கீங்களா? செம்பருத்தி கொம்புச்சாவுல இத்தனை நன்மைகளா?
ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த தேநீர் பானம் சீனாவில் தோன்றியதாக கூறப்படுகிறது.
கொம்புச்சா :
கொம்புச்சா பானம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா! இது ஒருவகை தேநீர்தான். புளிப்பு சுவையுடன் இருக்கும். இதனை அதிகம் குடல் பிரச்சனைகளின் தீர்விற்காக பயன்படுத்துகின்றனர். ஆயிரம் வருடங்கள் பழமையான இந்த தேநீர் பானம் சீனாவில் தோன்றியதாக கூறப்படுகிறது. கொம்புச்சா பானத்தின் ஒரு வகைதான் செம்பருத்தி கொம்புச்சா.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவராக இருந்தாலோ அல்லது உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதற்கான வழிகளைத் தேடுபவராக இருந்தாலோ இந்த செம்பருத்தி கொம்புச்சா பரிந்துரைக்கப்படுகிறது.ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பாத்ரா என்பவரும் கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதன் நன்மைகள் குறித்து பகிர்ந்திருக்கிறார்.
View this post on Instagram
நன்மைகள்:
இரத்தத்தின் சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும் :
கொம்புச்சாவில் அசிட்டிக் அமிலம் உள்ளது, இது நீரிழிவு நோயாளியின் இரத்த சர்க்கரை அளவையும் இன்சுலின் அளவையும் வெற்றிகரமாக குறைக்க பயனுள்ளதாக இருக்கும்.
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது:
கொம்புச்சாவின் எபிகல்லோகேடசின்-3-கேலேட் (EGCG) இருக்கிறது. இதன் மூலம் ஒருவரின் வளர்சிதை மாற்றத்தை ஓரளவு அதிகரிக்க முடியும் என்று ஒரு ஆய்வு கட்டுரை தெரிவிக்கிறது. மேலும் இந்த டீயில் அதிகமான எடை குறைப்பு நன்மைகள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் திறன் அதிகமாக இருக்கிறது என்று லவ்நீட் குறிப்பிட்டுள்ளார்.
ப்ரோபயாடிக்ஸ் :
நொதித்தல் செயல்முறையின் காரணமாக, கொம்புச்சாவில் இயற்கையாகவே பல்வேறு நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, அவை புரோபயாடிக்ஸாக செயல்படும். இதனால் செரிமானம் வேகமாகும், ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் , குடல் அசௌகரியத்தை சரி செய்யும் , குடல் நோய்களை எதிர்த்தல் உள்ளிட்ட குடல் ஆரோக்கியத்தின் பல்வேறு அம்சங்களுக்கும் இது பயனளிக்கும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை:
Hibiscus kombucha என அழைக்கப்படும் செம்பருத்து கொம்புச்சா அதிக ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. குறிப்பாக பாலிஃபீனால்கள் அதிகம், அவை செல்களுக்கு தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி நடுநிலையாக்குகின்றன. ஃப்ரீ ரேடிக்கல்ஸ் வீக்கத்தை ஏற்படுத்தி , உடலுக்கு தீங்கு விளைக்கக்கூடியவை.