Moong Dal Pakoda : பாசிப்பயிறு பக்கோடா கேள்விப்பட்டிருக்கீங்களா? இதுதான் இப்போ ட்ரெண்ட்
மஞ்சள் பாசிப் பருப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் இந்த சுவையான சிற்றுண்டி மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது.
ஒருநாளின் தேநீர் இடைவேளையை விட பெரிய எதிர்பார்ப்பு நமக்கு வேறு எதுவும் இல்லை. வேலையில் உழைத்து களைப்பிற்குப் பிறகு நமக்குத் தேவையெல்லாம் ஒரு கப் தேநீருடன் சில நறுக் தீணி மட்டுமே. தேநீருடன் அருந்த எத்தனையோ ஸ்நாக்ஸ் இருந்தாலும் அதற்கு பொருத்தமானது பக்கோடா மட்டுமே. அது வெங்காய பக்கோடா, பிரெட் பக்கோடா, பனீர் பக்கோடா அல்லது மிளகாய் பஜ்ஜி என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதனுடன் மற்றொரு பிரபலமான பக்கோடா பாசிப்பருப்பு பக்கோடா. மஞ்சள் பாசிப் பருப்பு மற்றும் மசாலாப் பொருட்களுடன் தயாரிக்கப்படும் இந்த சுவையான சிற்றுண்டி மகாராஷ்டிராவில் மிகவும் பிரபலமானது. இந்த பாசிப் பருப்பு பக்கோடாவின் குர்குரே வெர்ஷன் இதோ உங்களுக்காக, அது இன்னும் மொறுமொறுப்பானது மற்றும் கூடுதல் சுவை உடையது...
முதலில், பச்சை பயிரை (பருப்பு) சுமார் 3-4 மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும். (இதற்கு பச்சை அல்லது மஞ்சள் என எந்த வகையையும் பயன்படுத்தலாம்). தண்ணீரை வடிகட்டி, ஊறவைத்த பருப்பை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும். அதில் அரை கப் மாவை எடுத்து தனியாக வைக்கவும். மாவுடன் இஞ்சி, பூண்டு கிராம்பு ஆகியவற்றை விழுதாக அரைத்து சேர்க்கவும். பின்னர் அதனை நன்கு கலக்க மாவு மிருதுவாக மாறும். மசாலா செய்ய, ஒரு கடாயில் கொத்தமல்லி விதைகள், பெருஞ்சீரகம், மிளகு மற்றும் சீரகம் சேர்த்து குறைந்த தீயில் வறுக்கவும்.
தீயை அணைத்து, 1/4 தேக்கரண்டி எண்ணெய் சேர்க்கவும். அதை ஆறவைத்து, மசாலாக்களை மிக்சியில் சேர்த்து கரடுமுரடாக அரைக்கவும். இதனுடன் தனியாக வைக்கப்பட்ட மாவு மற்றும் இஞ்சி பூண்டு விழுந்து கலந்த மாவு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும். இவற்றுடன் நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், கொத்தமல்லி தழை மற்றும் உப்பு சேர்க்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக கலக்கவும்.
கலவையின் ஒரு சிறிய பகுதியை எடுத்துக் கொள்ளுங்கள் அதனை கைகளால் நன்கு உருட்டிக் கொள்ளவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டுவது நல்லது. ஒரு வாணலியில் எண்ணெய் காயவைத்து அதில் இந்த உருண்டைகளை வறுக்கவும். உருண்டைகள் பொன்னிறமாக மாறும் வரை பொறிக்கவும். பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை ஆழமாக வறுக்கவும். குர்குரே மூங் டால் பக்கோடா தயார்!