Watch Video: இங்கிலாந்து இளைஞரின் சுட சுட மிளகாய் பஜ்ஜி! - வைரலாகும் வீடியோ
புகழ்பெற்ற ஸ்டேஜ் ஷோ காமெடியனான ட்ரெவர் நோவா கூட அண்மையில் தனது நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு இந்திய உணவுகள் எத்தனைப் பிடித்தம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார்

இந்திய உணவுகள் அனைத்து சர்வதேச நாடுகளிலும் பிரபலம். புகழ்பெற்ற ஸ்டேஜ் ஷோ காமெடியனான ட்ரெவர் நோவா கூட அண்மையில் தனது நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு இந்திய உணவுகள் எத்தனைப் பிடித்தம் என்பதைப் பற்றிக் குறிப்பிட்டிருப்பார். அந்த அளவுக்கு வெளிநாட்டவர்க்கு இந்திய உணவுகள் பிடித்தம்.
அண்மையில் இங்கிலாந்தை சேர்ந்த இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்ஸர் ஒருவர் தனது பக்கத்தில் மிளகாய் பஜ்ஜி செய்து அசத்தியது வைரலாகி உள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த ஜேக் ட்ரயான் என்னும் அந்த நபர் தனது பக்கத்தில் சுவையான மிளகாய் பஜ்ஜியை செய்து அசத்தியுள்ளார். அதற்கான வீடியோ..கீழே..
View this post on Instagram
பொதுவாகவே இந்திய உணவுகளை செய்து பதிவேற்றும் அந்த நபர் இந்த வாரம் கூடுதலாக தமிழ்நாடு வாரம் என தமிழ்நாட்டுச் சமையல்களைச் செய்து அசத்தியுள்ளார். அதில் மோர்க்குழம்பு, அடை, தயிர் சாதம், பீன்ஸ் பொரியல் என பல சைவ உணவுகளைச் சமைத்து அசத்தியுள்ளார்.
View this post on Instagram






















