News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

அண்ணே "அரைவேக்காடு ஒண்ணு"... விழுப்புரம் போனா சாப்பிட்டு பாருங்க...!

பரோட்டாவிற்கு சால்னா இல்லாமல் இந்த அரைவேக்காடு சேர்த்து சாப்பிட்டால், அந்த சுவைக்கு வார்த்தைகளே இல்லை.

FOLLOW US: 
Share:

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு உணவு பேமஸ் உணவு இருக்கும், அதே போலதான் விழுப்புரதிற்கு ஃபேமஸ் அரைவேக்காடு உணவு. அரைவேக்காடு என்று பலரை திட்டித்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், விழுப்புரத்தில் அந்த பெயரில் பேமஸ் உணவு இருக்கிறது.  

விழுப்புரம் ரயில் நிலையம் வெளியே பல உணவுக் கடைகளில், விழுப்புரத்தில் ஸ்பெஷலான அரைவேக்காடு உணவு தயாரிக்கப்படுகிறது. போக்குவரத்து அதிகம் கொண்ட விழுப்புரம் மாநகரத்தில், பேருந்துகளில் சத்தம் ஓயாமல் செவிகளில் கேட்டுக்கொண்டிருக்கும். 

அதே சமயத்தில் ‘அரைவேக்காடு ஒண்ணு’… ‘அரைவேக்காடு பார்சல்’ என ஒரு சத்தமும் நம் காதில் விழுந்தது. என்னவென்று திரும்பிப் பார்த்தால், உணவகத்தில் அரைவேக்காடு எனும் உணவு தயாராகி கொண்டிருந்தது. அரைவேக்காடு அப்படின்னா என்ன? தெரிந்து கொள்ளலாம் என சென்றபோது தான், இப்படியொரு  சுவையான உணவுபற்றிய தகவல் நமக்கு  கிடைத்தது.

அரைவேக்காடு உணவை தயார் செய்யும் மாஸ்டரிடம் இதுகுறித்து நாம்  கேட்டபோது, “முதலில் கல்லை நன்றாக  ஆவி பறக்க சூடு ஏற்றி, அதில் எண்ணெய் தடவ வேண்டும்.  அதன், பின் சிறிதளவு வெங்காயம், தேவையான அளவு உப்பு, மிளகாய்த்தூள், மிளகு தூள்  ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். அதன்பின், தக்காளியைப் போட்டு மறுபடியும் நன்றாக மசிக்க வேண்டும்.  கருவேப்பிலை, இரண்டு முட்டை போட்டு நன்றாக கிளறி விட்டு  சிறிது நேரம் காத்திருந்தால் போது சுவையான அரைவேக்காடு தயாராகி விடும்” என்றார். அதை பார்க்கும்போதே நமக்கு நாக்கில் எச்சில் ஊரும்.

அரைவேக்காட்டை ரசித்து ருசித்து சாப்பிடும் வாலிபரிடம் நாம் கேட்டபோது,  “இந்த உணவகம் தலைமுறை தலைமுறையாக இருக்கிறது.  இந்த அரைவேக்காடு பரோட்டா மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.  ஒவ்வொரு ஊருக்கும் ஒரு உணவு வகை சிறப்பு போல விழுப்புரம் மாவட்டத்தில் அரைவேக்காடு பேமஸ். நீங்கள் ஒருமுறை சுவைத்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். இரவு நேரங்களில் ஜங்ஷன் பக்கம் எங்கு பார்த்தாலும், நிறையபேர் வீட்டிற்கு பார்சலும், உணவகங்களில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார்கள். இரவு நேரங்களில் நண்பர்களுடன் கூட்டமாக வந்து இளைஞர்கள் இந்த உணவை தான் சாப்பிட்டு போவார்கள்.

பரோட்டாவிற்கு சால்னா இல்லாமல் இந்த அரைவேக்காடு சேர்த்து சாப்பிட்டால், அந்த சுவைக்கு வார்த்தைகளே இல்லை”  என கூறிவிட்டு அரைவேக்காட்டு உணவை சுவைப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். நீங்களும் விழுப்புரம் வந்தால் ஒரு முறை அரைவேக்காடு வாங்கி சுவைத்து பாருங்கள்.

Published at : 27 Apr 2024 06:40 PM (IST) Tags: @food Villupuram district Villupuram district special aravekkadu food special aravekkadu food Villupuram special aravekkadu food aravekkadu food aravekkadu

தொடர்புடைய செய்திகள்

Mushroom Broccoli Rice: ஹெல்தி காளான் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Mushroom Broccoli Rice: ஹெல்தி காளான் ப்ரோக்கோலி ரைஸ் பவுல் - ரெசிபி இதோ!

Wheat Aappam: சாப்பாட்டு பிரியர்களே! மிருதுவான கோதுமை ஆப்பம்.. இப்படி செய்து அசத்துங்க!

Wheat Aappam: சாப்பாட்டு பிரியர்களே! மிருதுவான கோதுமை ஆப்பம்.. இப்படி செய்து அசத்துங்க!

Moong Dal Fry: மொறு மொறு பாசி பருப்பு ஸ்நாக்ஸ்! இப்படி செய்து அசத்துங்க!

Moong Dal Fry: மொறு மொறு பாசி பருப்பு ஸ்நாக்ஸ்! இப்படி செய்து அசத்துங்க!

Cold Coffee: கோல்ட் காபி.. வெயிலுக்கு இதமா இப்படி செய்து குடிங்க! செம்மையா இருக்கும்!

Cold Coffee: கோல்ட் காபி.. வெயிலுக்கு இதமா இப்படி செய்து குடிங்க! செம்மையா இருக்கும்!

”வெயிலின் தாக்கம்  110டிகிரி வரை அதிகரிக்கும்”: 10 வழிகாட்டுதல்களை கடைபிடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

”வெயிலின் தாக்கம்  110டிகிரி வரை அதிகரிக்கும்”: 10 வழிகாட்டுதல்களை கடைபிடிக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

டாப் நியூஸ்

MK Stalin: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” - திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு!

MK Stalin: “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்னும் நான்” - திமுக ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு!

Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு - மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்பு

Lok Sabha Election 2024 LIVE: மக்களவை தேர்தலின் 3ஆம் கட்ட வாக்குப்பதிவு - மேற்கு வங்கத்தில் பலத்த பாதுகாப்பு

PM Modi: ”நமக்கு கடமை தான் முக்கியம்” - அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

PM Modi: ”நமக்கு கடமை தான் முக்கியம்” - அகமதாபாத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

Kurangu Pedal Movie Review: நாஸ்டால்ஜியாவை தூண்டும் சிவகார்த்திகேயன் படம்... குரங்கு பெடல் திரை விமர்சனம்!

Kurangu Pedal Movie Review: நாஸ்டால்ஜியாவை தூண்டும் சிவகார்த்திகேயன் படம்... குரங்கு பெடல் திரை விமர்சனம்!