Carrot Sago Payasam: கேரட் ஜவ்வரிசி பாயாசம்! இப்படி செய்தால் சுவை அசத்தலாக இருக்கும்!
சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பெரிய கேரட் - ஒன்று, ஜவ்வரிசி - 2 டேபிள் ஸ்பூன், நெய் - ஒரு டேபிள் ஸ்பூன், முந்திரி பருப்பு - 10, உலர் திராட்சை - தேவையான அளவு, பால் – 2 டம்ளர், ஏலக்காய் தூள் – கால் டீஸ்பூன், சர்க்கரை – அரை கப்.
செய்முறை
கேரட்டை தோல் நீக்கி கழுவி எடுத்து, அதை துருவல் கொண்டு துருவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
வெள்ளை ஜவ்வரிசியை நன்கு கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
இதில் தேவையான அளவிற்கு தண்ணீர் சேர்த்து வேக விட வேண்டும்.
ஜவ்வரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து இதை அப்படியே வைத்துக் கொள்ள வேண்டும்.
அடுப்பில் ஒரு pan வைத்து அதில் நெய் சேர்த்து சூடானதும், மிதமான தீயில் வைத்து, அதில் முந்திரி பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
மீதம் இருக்கும் நெய்யில் உலர் திராட்சைகளை சேர்த்து வறுத்து எடுத்து தனியாக வைத்து விட வேண்டும். அதே நெய்யில் துருவிய கேரட்டை சேர்த்து நன்கு வதக்கி கொள்ள வேண்டும்.
பின் இரண்டு டம்ளர் அளவிற்கு கெட்டியான பால் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.
கேரட் நன்கு வெந்து பால் கெட்டியான பதத்திற்கு வரும். பின் வேக வைத்த ஜவ்வரிசியை இதனுடன் சேர்த்து கலந்து விட வேண்டும்.
பாயாசம் எந்த அளவிற்கு கெட்டியாக உங்களுக்கு தேவையோ, அந்த அளவிற்கு இப்போது தண்ணீர் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாயாசம் கொதித்ததும், அரைக்கப் அளவிற்கு சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து விட வேண்டும்.
பிறகு ஃப்ளேவருக்கு கால் டீஸ்பூன் அளவிற்கு ஏலக்காயை தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பாயாசம் நன்கு கெட்டியானதும் வறுத்து வைத்துள்ள முந்திரி மற்றும் திராட்சைகளையும் சேர்த்துக், மிதமான சூட்டிலேயே நன்கு கலந்து விட்டு அடுப்பில் இருந்து பாயாசத்தை இறக்கி கொள்ளலாம். அவ்வளவுதான் சுவையான கேரட் ஜவ்வரிசி பாயாசம் தயார்.
இதை சூடாகவும் பறிமாறலாம். அல்லது ஃப்ரிட்ஜில் குளிர வைத்தும் சாப்பிடலாம்.