News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Chicken Salna : ஹோட்டல் சிக்கன் சால்னா ரொம்ப பிடிக்குமா? சப்பாத்தி, பரோட்டா, இட்லி எல்லாத்துக்கும் இதோ ரெசிப்பி..

தமிழ்நாடு ஸ்டைல் சிக்கன் சால்னா , மதிய உணவு ,அல்லது இரவு உணவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்த சிக்கன் சால்னா பரோட்டா, சப்பாத்தி ,ரொட்டி போன்றவற்றுக்கு பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.

FOLLOW US: 
Share:
மிகவும் சுவையான மசாலா கலவையில்,   மென்மையான கோழி இறைச்சியை கொண்டு  சமைக்கப்படும்,  இந்த கறி ஒரு தனித்துவமான சுவையைத் தருகின்றன. இந்த தமிழ்நாடு ஸ்டைல் சிக்கன் சால்னா , மதிய உணவு ,அல்லது இரவு உணவாக எடுத்துக் கொள்ளப்படுகிறது.இந்த சிக்கன் சால்னா    பரோட்டா, சப்பாத்தி ,ரொட்டி போன்றவற்றுக்கு பரிமாறினால் மிகவும் சுவையாக இருக்கும்.
 
சிக்கன் சால்னா செய்ய தேவையான பொருட்கள்:
 
கோழி இறைச்சி துண்டுகள்- 500 கிராம்
 
நறுக்கிய வெங்காயம் - 2
 
தக்காளி -2
 
1 அங்குல இஞ்சி
 
4-5 பூண்டு கிராம்பு
 
10-12 கறிவேப்பிலை
 
1 தேக்கரண்டி கரம் மசாலா 
 
உப்பு சுவைக்கேற்றவாறு
 
சால்னா பேஸ்ட் செய்ய தேவையான பொருட்கள் :
 
2 தேக்கரண்டி பெருஞ்சீரகம்
 
1 தேக்கரண்டி கருப்பு மிளகுத்தூள்
 
1/4 கப் தேங்காய் துருவல் 
 
1 நட்சத்திர சோம்பு
 
4-5 கிராம்பு
 
2 டீஸ்பூன் கடலை எண்ணெய்
 
தமிழ்நாடு ஸ்டைலில் சிக்கன் சால்னா செய்வது எப்படி ?
 
1. முதலில் நாம் சால்னா பேஸ்ட் செய்ய வேண்டும்.

 இதற்கு, ஒரு பெரிய பாத்திரத்தில் கடலை எண்ணெயை சூடாக்கி, பெருஞ்சீரகம் விதைகள், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை, கிராம்பு மற்றும் நட்சத்திர சோம்பு சேர்த்து, அவற்றை போடவும்.
 
2.வதங்கியதும், தேங்காய் துருவலை சேர்த்து,  சிறிது பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். இந்த வறுத்த செயல்முறைக்கு சுமார் 5-7 நிமிடங்கள் வரை எடுக்கும். பின்னர் தீயை அணைத்து, ஆற வைக்கவும்.
 
3.ஆறியதும் வறுத்த மசாலாவை மிக்ஸி ஜாரில் மாற்றி சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைக்கவும். கொஞ்சம் கட்டியாக அரைக்க வேண்டும், அதிக தண்ணீர் சேர்க்க கூடாது.
 
4.அதே பாத்திரத்தில், மிதமான தீயில் சிறிது எண்ணெயை  சூடாக்கி, கோழி துண்டுகள், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி, கோழியை அதிகமாக வேகவைக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
 
5.கோழி துண்டுகளை வெளியே எடுத்து  எண்ணெய் வடிய ஒரு பேப்பரில் போடவும். பின்னர் கடாயில்  கறிவேப்பிலை ,வெங்காயம்  சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.பின்னர் இஞ்சி, பூண்டு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வரை வதக்கவும். 
 
அடுத்து தக்காளியை சேர்த்து சிறிது உப்பு தூவி, தக்காளி மென்மையாகவும், மிருதுவாகவும் மாறும் வரை வதக்கவும்.
 
6. இறுதியாக கரம் மசாலா, சிவப்பு மிளகாய் தூள் மற்றும் மஞ்சள் தூள் அனைத்து மசாலா தூள்களுடன் சேர்த்து பாத்திரத்தில் அரைத்த மசாலா பேஸ்ட்டை சேர்க்கவும். நன்கு கிளறி, மசாலாப் பொடிகளின் பச்சை வாசனை போகும் வரை சமைக்கவும்.
 
7. அடுத்து, கிரேவியில் சிக்கன் துண்டுகளைச் சேர்த்து, சுமார் 1/2 கப் தண்ணீர், சுவைக்கு உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் கொதிக்க விடவும்.  இப்போது உங்கள் சிக்கன் சால்னா தயார்!
Published at : 28 Jul 2022 09:29 AM (IST) Tags: Tamil Nadu chicken salna Chicken Salna Recipe chicken salna

தொடர்புடைய செய்திகள்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

அச்சச்சோ! செட்டிநாடு சிக்கன் சாப்பிட்ட இளைஞர் திடீர் மரணம்! மதுரையில் சோகம்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

டாப் நியூஸ்

Breaking News LIVE: "நீக்கப்பட்ட உரையை அவைக் குறிப்பில் சேர்த்திடுக” - சபாநாயகருக்கு ராகுல் கடிதம்

Breaking News LIVE:

TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்

TNGASA Admission 2024: மிஸ் பண்ணிடாதீங்க; அரசு கலை கல்லூரிகளில் சேர மீண்டும் விண்ணப்பிக்கலாம்- விவரம்

PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

PM Modi: ”ராகுல் காந்தி மாதிரி நடந்துக்காதிங்க” - பாஜக கூட்டணி எம்.பிக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?

ITR Filing: ஐடிஆர் தாக்கல் : அவகாசமே முடிந்தாலும் அபராதம் கிடையாது - யாருக்கெல்லாம் இந்த சலுகை தெரியுமா?