மேலும் அறிய
Advertisement
Sindhi-Style Aloo Tikki: மழை நேரத்திற்கு ஏற்ற ஸ்நாக் ரெசிபி! சுவையான உருளைக்கிழங்கு டிக்கி செய்முறை பார்க்கலாம்!
மழை நேரத்தில் சூடான ஸ்நாக்ஸ் சாப்பிட தோனுதா? அப்போ இந்த சுவையான சிந்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு டிக்கியை ட்ரை பண்ணுங்க.
உருளைக்கிழங்கில் என்ன ரெசிபி செய்தாலும் சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு ரெசிபிகளை நம்மில் பெரும்பாலானோர் விரும்பி சாப்பிடுவோம். இப்போது உருளைக்கிழங்கு, ப்ரெட் மற்றும் மசாலாக்களைக் கொண்டு சுவையான டிக்கி எப்படி செய்வது என்று தான் பார்க்க போகின்றோம். இந்த டிக்கிகள் மாலை நேரத்திற்கு ஏற்றவை மற்றும் மழை நேரத்தில் சூடாக சாப்பிட நன்றாக இருக்கும். இந்த ரெசிபியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர். வாங்க சிந்தி ஸ்டைல் உருளைக்கிழங்கு டிக்கி எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 3 உருளைக்கிழங்கு, வேகவைத்து மசிக்கவும்
- 3 ரொட்டி துண்டுகள்
- 1 டீஸ்பூன் சோள மாவு
- 2 டீஸ்பூன் எண்ணெய்
- 1 அங்குல இஞ்சி, நறுக்கியது
- 2 பச்சை மிளகாய், நறுக்கியது
- 1 வெங்காயம், நறுக்கியது
- ¼ கப் கடலைப் பருப்பு வேகவைத்தது
- 1 கரம் மசாலா
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு சுவைக்கேற்ப
- ஒரு கைப்பிடி கொத்தமல்லி இலை
செய்முறை
1. முதலில் உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
1.இந்த டிக்கிகளை செய்ய, ஒரு பாத்திரத்தில், பிரட் துண்டுகளின் ஓரங்களை நீக்கி சிறிது தண்ணீர் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் ஊற வைக்கவும்.
2.இப்போது, மசித்த உருளைக்கிழங்கை கார்ன்ஃப்ளார் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து தனியாக வைக்க வேண்டும்.
3.ஒரு கடாயில் சிறிது எண்ணெயை மிதமான தீயில் வைத்து சூடாக்க வேண்டும். நறுக்கிய இஞ்சி, சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் வதங்கும் வரை வதக்க வேண்டும்.
4. அடுத்து கடலைப் பருப்பு, கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கலந்து விட்டு 2-3 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கலந்து விட்டு தீயை அணைத்து விட வேண்டும்.
5. தயாரிக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் ரொட்டி கலவையை சம பாகங்களாக பிரிக்கவும். ஒவ்வொன்றையும் கடலைப் பருப்பு கலவையுடன் நிரப்பி டிக்கிகளாக வடிவமைக்கவும்.
6. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, டிக்கிகளை மெதுவாக எண்ணெயில் போட்டு பொன்னிறமாகவும் மிருதுவாகவும் மாறும் வரை நன்றாக வறுத்தெடுக்க வேண்டும். இப்போது சூடான டிக்கிகளை கெட்செப் அல்லது புதினா சட்னி உடன் வைத்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மேலும் படிக்க
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion