World Cup Points Table: இலங்கையின் தோல்வியால் பாகிஸ்தான் அணிக்கு நம்பிக்கை.. மீண்டும் முதலிடத்தில் இந்தியா.. புள்ளி பட்டியல் இதோ!
14 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்காவிடம் இருந்து நம்பர் 1 கிரீடத்தை பறித்துள்ளது.
உலகக் கோப்பை 2023ன் 33வது போட்டியில் இந்திய அணி 302 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி மீண்டும் முதலிடத்தை எட்டியதுடன், முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. உலகக் கோப்பையில் இந்தியா தொடர்ந்து ஏழாவது வெற்றியைப் பெற்றது. அதேநேரம், இலங்கையின் தோல்வி பாகிஸ்தானின் அரையிறுதி நம்பிக்கையை மேலும் அதிகரித்துள்ளது.
14 புள்ளிகளைப் பெற்றதன் மூலம் இந்திய அணி புள்ளிப்பட்டியலில் தென்னாப்பிரிக்காவிடம் இருந்து நம்பர் 1 கிரீடத்தை பறித்துள்ளது. 12 புள்ளிகளுடன் பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்கா இரண்டாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதுவரை எந்த ஒரு போட்டியிலும் தோல்வி அடையாத ஒரே அணியாக இந்தியா இந்த உலகக் கோப்பையில் இருந்து வருகிறது. அதே நேரத்தில், இலங்கை தனது ஏழாவது போட்டியில் விளையாடி ஐந்தாவது தோல்வியை சந்தித்தது. இது பாகிஸ்தானின் அரையிறுதிக்கு தகுதி பெறும் நம்பிக்கையை அதிகரித்தது. ஏனெனில் தற்போது தலா 7 போட்டிகள் முடிந்த நிலையில் பாகிஸ்தான் 3 வெற்றிகளையும், இலங்கை அணி 2 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
அப்படிப்பட்ட நிலையில், டாப்-4ல் கடைசி இடத்தில் இருக்கும் நியூசிலாந்தின் தோல்வியால் பாகிஸ்தான் அதிக பலன்களைப் பெற முடியும். மேலும் பாகிஸ்தான் அடுத்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக மட்டுமே விளையாடும். நியூசிலாந்தை தோற்கடித்தால், பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதிபெறும் வாய்ப்பு அதிகரிக்கும்.
எவ்வாறாயினும், இதற்கிடையில், அரையிறுதிக்கு வருவதற்கு பாகிஸ்தானை விட அதிக வாய்ப்புகளைக் கொண்ட ஆப்கானிஸ்தானை நாம் மறந்துவிடக் கூடாது. ஏனெனில் ஆப்கானிஸ்தான் அணி இதுவரை 6 ஆட்டங்களில் 3-ல் வெற்றி பெற்றுள்ளதால், அந்த அணி இந்த உலகக் கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக வெற்றியை பெற்று மற்ற அணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி அடுத்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று டாப்-4ல் இருக்க வேண்டும். தற்போது, முதல் 4 இடங்களில் நியூசிலாந்தை விட ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்தில் உள்ளது.
டாப்-4 தவிர மற்ற அணிகளின் நிலை என்ன..?
முதல் 4 இடங்களில் பாகிஸ்தான் 6 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 6 புள்ளிகளுடன் 6வது இடத்திலும் உள்ளன. ஆப்கானிஸ்தான் அணியை விட பாகிஸ்தானின் நிகர ரன் ரேட் சிறப்பாக உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, இலங்கை 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் நெகட்டிவ் -1.162 உடன் ஏழாவது இடத்திலும், நெதர்லாந்து 4 புள்ளிகள் மற்றும் நிகர ரன் ரேட் எதிர்மறை -1.277 உடன் எட்டாவது இடத்திலும், வெளியேற்றப்பட்ட வங்கதேசம் ஒன்பதாவது இடத்திலும் நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்து 2 புள்ளிகளுடன் 10வது இடத்தில் உள்ளது.
2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக ரன்கள்:
- குயின்டன் டி காக் (தென்னாப்பிரிக்கா) - 7 இன்னிங்ஸ்களில் 545 ரன்கள்
- விராட் கோலி (இந்தியா) - 7 இன்னிங்ஸில் 442 ரன்கள்
- ரச்சின் ரவீந்திரா (நியூசிலாந்து) - 7 இன்னிங்சில் 415 ரன்கள்
- டேவிட் வார்னர் (ஆஸ்திரேலியா) - 6 இன்னிங்சில் 413 ரன்கள்
- ரோஹித் சர்மா (இந்தியா) - 7 இன்னிங்சில் 402 ரன்கள் 2023
2023 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள்:
- தில்ஷன் மதுஷங்க (இலங்கை) - 18 விக்கெட்டுகள்
- ஷஹீன் ஷா அப்ரிடி (பாகிஸ்தான்) - 16 விக்கெட்டுகள்
- மார்கோ ஜான்சன் (தென்னாப்பிரிக்கா) - 16 விக்கெட்கள்
- ஆடம் ஜம்பா (ஆஸ்திரேலியா) - 16 விக்கெட்
- ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா) - 15 விக்கெட்