ஒரு ஜிலேபியின் எடை 2 கிலோ! - மாநிலம் தாண்டி கவனம் பெரும் பாரம்பரிய ‘ ஜம்போ ஜிலேபி ‘
ஒரு காலத்தில் ஜம்போ ஜிலேபிக்கு பெயர் போன கெஞ்சகுரா கிராமத்தில் கடைக்காரர்களுக்குள்ளேயே போட்டியாக இருக்குமாம். அதாவது தங்களில் யார் மிகப்பெரிய ஜிலேபியை தயாரிக்கிறார்கள் என்று
இனிப்பு பிரியர்கள் யாருக்குதான் ஜிலேபி பிடிக்காது! நம்மூர் கிராமங்களில் ஜிலேபியை ஜாங்கிரி என அழைப்பதும் உண்டு. வட இந்தியர்களா இருந்தாலும் சரி! தென்னிந்தியர்களாக இருந்தாலும் சரி ! ஜிலேபி எல்லோருக்கும் பரீட்சியமான ஒரு இனிப்பு பலகாரம்தான். ஆனால் ஜம்போ ஜிலேபி பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா! ? ஆம் ! ஒரு ஜிலேபி மட்டுமே ஒரு கிலோ இருக்குமாம் ! இதனையும் இந்தியாவில்தான் தயாரிக்கிறார்கள் .
மேற்கு வங்கம் மாநிலம், பாங்குராவில் உள்ள துவாரகேஷ்வர் ஆற்றின் கரையில் உள்ள பழமையான நகரங்களில் ஒன்று கெஞ்சகுரா. இந்த ஊரில் இன்றும் பழமை மாறாமல் கைத்தரி ஆடைகள் , கைவிணைப்பொருட்கள் என அனைத்தையும் செய்து வருகின்றனர். அந்த வரிசையில் ஜம்போ ஜிலேபியும் ஒன்று. மேற்கு வங்கத்தில் , குறிப்பாக கெஞ்சகுராவில் விஸ்வகர்மா மற்றும் பாதுபூஜை பழமையான பண்டிகைகளுள் ஒன்று. இந்த பண்டிகைக்காக பிரத்யேகமாக ஜிலேபி வைத்து பூஜை செய்யப்படுகிறது. அதுவும் ஜம்போ ஜிலேபி. ஒரு ஜிலேபி மட்டுமே அரை கிலோ முதல் 2 கிலோ வரை இருக்குமாம். இதனை பாரம்பரியமாக செய்து வருகிறார்கள் இப்பகுதி இனிப்பு கடை விற்பனையாளர்கள். இந்த பகுதியில் விற்பனையாகும் ஒரு கிலோ ஜிலேபியின் விலை 150 ரூபாய். விஸ்வகர்மா மற்றும் பாதுபூஜை தவிர பெங்காலி புத்தாண்டு சமயத்திலும் ஜம்போ ஜிலேபியை பலரும் வாங்கிச்செல்கின்றனர்.
ஒரு காலத்தில் ஜம்போ ஜிலேபிக்கு பெயர் போன கெஞ்சகுரா கிராமத்தில் கடைக்காரர்களுக்குள்ளேயே போட்டியாக இருக்குமாம். அதாவது தங்களில் யார் மிகப்பெரிய ஜிலேபியை தயாரிக்கிறார்கள் என்று. அந்த கால ஜிலேபி ஒவ்வொன்றும் 3 முதல் 4 கிலோ வரை இருந்ததாக கூறும் கடைக்காரர்கள் . இப்போது அதிகபட்ச எடையே 1.5 அல்லது 2 கிலோதான் என்கிறார். இந்த ஜம்போ ஜிலேபியை வாங்கி செல்லும் வாடிக்கையாளர்கள் விஸ்வகர்மா மற்றும் பாதுபூஜையின் போது தங்களது உறவினர்களுக்கு பரிசாக இந்த ஜிலேபியை வழங்குவார்களாம். காலம் கடந்தாலும் இப்போது ஜம்போ ஜிலேபிக்கு தங்கள் ஊரில் மவுசு அதிகம்தான் என்கிறனர் அப்பகுதி கடைக்காரர்கள். இப்போது மேற்கு வங்கம் மட்டுமல்ல அனைத்து மாநில ஸ்வீட் பிரியர்கள் மத்தியிலும் ஜம்போ ஜிலேபி கவனத்தை பெற்றிருக்கிறது. நீங்கள் மேற்கு வங்கம் பகுதிக்கு விசிட் அடிக்கும் ஐடியாவில் இருந்தால் ..நிச்சயம் இந்த ஜம்போ ஜிலேபியை சுவைத்து பார்க்க மறக்காதீங்க!
மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற