பகிர்தல் எப்போதும் திருப்திதான்... வைரலாகும் வடா பாவ் சாப்பிடும் ஜப்பான் இளைஞரின் வீடியோ
மகாராஷ்டிராவில் வடா பாவ் மிகவும் பிரபலமான சிற்றுண்டி என்பது பலருக்குத் தெரியும்.
![பகிர்தல் எப்போதும் திருப்திதான்... வைரலாகும் வடா பாவ் சாப்பிடும் ஜப்பான் இளைஞரின் வீடியோ Japan vlogger shares vada pav with old man in mumbai gets applause பகிர்தல் எப்போதும் திருப்திதான்... வைரலாகும் வடா பாவ் சாப்பிடும் ஜப்பான் இளைஞரின் வீடியோ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/840a73157e419c9539885e181875f66e1659548609_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ஒருவரின் முகத்தில் புன்னகையை வரவழைப்பதற்கான எளிதான வழி நம்மிடம் இருப்பதை அவருடன் பகிர்ந்துகொள்வதும் கவனிப்பதும்தான். சமீபத்தில், இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது, அதில் ஜப்பானிய உணவு வீடியோ ப்ளாக்கர் ஒருவரின் அன்பான செயல் இணைய உலகின் இருப்பவர்கள் மனதை வென்றுள்ளது. மகாராஷ்டிராவில் வடா பாவ் மிகவும் பிரபலமான சிற்றுண்டி என்பது பலருக்குத் தெரியும். எனவே, மும்பையில் உள்ள உணவுக் கூடத்தின் வழியாகச் செல்லும்போது, ஜப்பானைச் சேர்ந்த இந்த இளைஞர் ஒரு வீடியோ ப்ளாக் செய்து அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கமான ஷிஷி டெய்லியில் பகிர்ந்துள்ளார். முதியவர் ஒருவருக்கு "வடா பாவ்" வழங்கிய அவரது வீடியோ உடனடியாக வைரலானது. அந்த முதியவருடன் வீடியோ ப்ளாக்கர் தனது காலை உணவை எவ்வளவு அன்புடன் பகிர்ந்து கொண்டார் என்பதை நெட்டிசன்கள் பார்த்தவுடன், அனைவரும் அவரைத் தற்போது பாராட்டி வருகின்றனர்.
View this post on Instagram
வீடியோவில், ஜப்பானியர் ஸ்டாலில் இருந்து கூடுதல் வடா பாவ் ஒன்றைப் பெற்றுக்கொண்டு முதியவருக்கு உணவை வழங்குவதற்காக சாலையின் மறுபுறம் நடந்து செல்கிறார். அவரது கருணை முதியவரின் முகத்தில் உடனடி புன்னகையை வரவழைத்தது, அவர் அவருக்கு நன்றி தெரிவித்தார். இது தவிர அந்த ஜப்பானியர் பச்சை மிளகாயுடன் வடை பாவ் சாப்பிட்ட அனுபவத்தையும் அவர் மனதார ரசித்த அனுபவத்தையும் பார்க்கலாம். "ஒரு இனிய காலை, மகிழ்ச்சியான பகிர்வுடன் தொடங்குகிறது," என்று அதற்கு கேப்ஷன் செய்திருக்கிறார். வீடியோ ஏற்கனவே மில்லியன் கணக்கான பார்வைகளைப் பெற்றுள்ளது, கிட்டத்தட்ட ஆயிரம் கமெண்ட்கள் இடம்பெற்றுள்ளன. சமூக ஊடக பயனர்கள் அவரது மனிதநேயத்தைப் பாராட்டுகிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)