கொட்டிக்கிடக்கும் சத்துகள்! உடலுக்கு ஆரோக்கியம் தரும் பிரண்டை தோசை! செய்வது எப்படி ?
தென் தமிழகத்தில் பிரண்டை கொடியை பயன்படுத்தி செய்யப்படும் பல உணவுகள் பிரபலம் .
பிரண்டை துவையல் , பிரண்டை குழம்பு வரிசையில் பிரண்டை தோசை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள் ! அதை எப்படி செய்வது என்பதைத்தான் இந்த தொகுப்பில் பார்க்கவிருக்கிறோம். பிரண்டை தோசை செய்முறையை பார்ப்பதற்கு முன்னால் அதில் இருக்கும் சத்துக்கள் குறித்து தெரிந்துக்கொள்ளலாம் .பிரண்டையில் அதிக அளவு இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் நிறைந்திருக்கிறது. பிரசவத்திற்கு பிறகு பெண்களின் ஆரோக்கியத்தில் பிரண்டை முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள் .
View this post on Instagram
பிரண்டை தோசை செய்ய தேவையான பொருள் :
பச்சை அரிசி - 2 கப்
புழுங்கல் அரிசி - 2 கப்
உளுந்து - 3/4 கப்
மென்மையான பிரண்டை (வெல்ட் திராட்சை) துண்டுகள் - 1/2 கப்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
உப்பு- தேவையான அளவு
எண்ணெய் / நெய் - தேவையான அளவு
செய்முறை :
உளுத்தம்பருப்பு ,வெந்தயம், அரிசி மூன்றையும் சேர்த்து மூன்று மணி நேரம் ஊறவைத்து அரைத்து மாவு பதத்திற்கு எடுக்கவும்.பாதி அரைத்தவுடன் பிரண்டை துண்டுகள் மற்றும் உப்பு சேர்த்து மாவை எட்டு-10 மணி நேரம் புளிக்க வைக்கவும்.இப்போது மாவு தயார். நீங்கள் நெய் ஊற்றி மொறு மொறுவென பிரண்டை தோசையை சுட்டெடுத்து பரிமாறலாம்.
பிரண்டை தோசைக்கு வேர்கடலை சட்னி பிரமாதமாக இருக்கும் . அதையும் எப்படி செய்வதென்று பார்த்து விடலாம்.
View this post on Instagram
வேர்கடலை சட்னி செய்வதற்கு தேவையான பொருள் :
வேர்க்கடலை - 1 கப்
சிவப்பு மிளகாய் - 4-5
பூண்டு பல் - 2
புளி, பளிங்கு அளவு - 1
தேங்காய் (விரும்பினால்) - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு
எண்ணெய் - 1/2 டீஸ்பூன் (தாளிக்க)
கடுகு விதைகள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை :
வேர்க்கடலையை வறுத்து தோலை நீக்கவும். கடாயில் எண்ணெயை சூடாக்கி சிவப்பு மிளகாயை வறுக்கவும். பூண்டை ஒரு நிமிடம் வறுத்து தேங்காய் சேர்க்கவும். தீயை அணைத்து ஆறவிடவும்.இதை வறுத்த வேர்க்கடலை மற்றும் புளியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்தால் சிறிது கரடுமுரடான பேஸ்ட் கிடைக்கும்.ஒரு சிறிய கடாயில் எண்ணெயை சூடாக்கி, கடுகு மற்றும் கறிவேப்பிலை போட்டு, அது வதங்கியதும் சட்னியில் சேர்க்கவும். இப்போது பிரண்டை தோசைக்கான அட்டகாசமான காம்போ தயார்!