மேலும் அறிய

ரம்ஜான் ஸ்பெஷல்: அரேபியன் ஸ்டைல் சிக்கன் நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி?

ரம்ஜான் நோன்பு காலத்தில் சாதி, மதம் கடைந்து அனைவரும் ரசித்து, ருசிக்கும் உணவு நோன்பு கஞ்சி. அந்தக் கஞ்சியை அரேபிய ஸ்டைலில் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

ரம்ஜான் நோன்பு காலத்தில் சாதி, மதம் கடைந்து அனைவரும் ரசித்து, ருசிக்கும் உணவு நோன்பு கஞ்சி. அந்தக் கஞ்சியை அரேபிய ஸ்டைலில் செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் என்னென்ன?
சிக்கன் பிரெஸ்ட் 200 கிராம். அதுதான் எலும்பில்லாததாக இருக்கும். மட்டன் மசாலா பொடி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு. இரண்டு பெரிய வெங்காயம், 3 தக்காளி, 4 பச்சை மிளகாய், தேவையான அளவு புதினா, மல்லி. இவற்றுடன் ஒரு பெரிய டம்ப்ளர் பச்சரிசி. அந்த டம்ளர் அளவிலேயே பாசிப் பருப்பு எடுத்துக் கொள்வோம். 

செய்வது எப்படி?

முதலில் ஒரு பாத்திரத்தில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி அதை நன்றாக கொதிக்க விட்டு அதில் சிக்கன் ப்ரெஸ்ட்டை போட்டு 15 நிமிடங்கள் வேகவைக்கவும். பின்னர் அதை ஆறவிடவும். ஆறிய பின்னர் அதை சிறு சிறு துண்டுகளாக பிய்த்துக் கொள்ளவும்.

இதற்கிடையில் ஒரு 5 லிட்டர் குக்கரில் பாதி அளவு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். அரிசி, பருப்பை நன்றாக கழுவி வைத்துக் கொள்ளவும். பின்னர் குக்கரில் அரிசி, பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், புதினா, மல்லி, மசாலா பொருட்கள், வேக வைத்து பிய்த்து எடுத்த கோழி இறைச்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். பின்னர் குக்கரை மூடி ஆவி வந்ததும் வெயிட்டை வைத்து 5 விசில் வரும் வரை விடவும். குக்கரை ஆஃப் செய்துவிடவும்.

இதற்கிடையில் ஒரு மூடி தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி ஒரு கப் முதல் பால் எடுத்துக் கொள்ளவும்.குக்கரை திறந்து மேஷர் வைத்து கஞ்சியை நன்றாக மசித்து விடவும். பின்னர் தேங்காய் பாலை கஞ்சியில் சேர்த்துக் கொள்ளவும். அடுத்ததாக தாளிதம் தான்.

தாளிப்பதற்கு ஒரு பேன் வைத்து அதில் 3 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அதில் பட்டை, லவங்கை, கிராம்பு, ஏலக்காய், ரம்பை இலை ஆகியனவற்றை சேர்க்கவும். அத்துடன் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கிக் கொண்டே இருக்கவும். இந்த தாளிதம் நன்றாக பச்சை வாசனை போய் வதங்கிய நிலையில் தாளிதத்தை நோன்பு கஞ்சியில் சேர்த்துவிடவும். பின்னர் அதை ஒரு கொதி வரும் வரை பொறுத்து அடுப்பை அனைத்துவிடவும்.

ரம்ஜான் ஸ்பெஷல்: அரேபியன் ஸ்டைல் சிக்கன் நோன்பு கஞ்சி தயாரிப்பது எப்படி?

ரம்ஜான் நோன்பு கஞ்சியின் சிறப்பு.. 
ரம்ஜான் நோன்பு கஞ்சியின் சிறப்பு நோன்பு இருப்பவர்களுக்குத் தான் நன்றாக தெரியும் என்கிறார்கள் விவரம் தெரிந்தவர்கள். பகல் முழுவதும் பட்டினியுடன் இருந்துவிட்டு மாலை வேளையில் நோன்பை துறக்கும் போது தண்ணீராகவும் இல்லாமல், திட உணவாகவும் இல்லாமல் இந்தக் கஞ்சியை சாப்பிடுவது அவ்வளவு இதமாக இருக்கும் எனக் கூறுகின்றனர்.
இந்த நோன்பு கஞ்சியை காய்கறிகள் போட்டும் செய்யலாம், மட்டன் கீமா போட்டும் செய்யலாம். ஆனால், செய்முறை ஒன்று தான்.

தலைப்பு செய்திகள்

சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
சரக்கு அடிக்கும் போது 'சைடு டிஷ்' விஷயத்தில் உஷார்! இந்த 8 உணவுகளை மறந்தும் தொடாதீங்க! உயிருக்கே ஆபத்து....
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
இட்லியிலும் ஒரு ‘கோல்’! - புதுச்சேரியில் கலக்கும் கால்பந்து இட்லி: நேரில் படையெடுக்கும் மக்கள்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
தேங்காய்க்குள் தண்ணீர் எப்படி வருகிறது? மர்மம் அல்ல... இயற்கையின் அற்புதமான அறிவியல்!
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை
தலைமுறைகள் கடந்தும் மக்களின் உன்னத உணவாக திகழும் தஞ்சாவூர் உரப்பு அடை

வீடியோ

CM Vijay Meets DK Shivakumar : நானே களத்துல இறங்குறேன்! காவிரி விவகாரம்.. கர்நாடகா செல்லும் CM விஜய்!
Senthil Balaji Entry : ஒரு மாதம் தலைமறைவு.. STATION-ல வந்து SIGN போடணும்! ஆஜரான செந்தில் பாலாஜி
அரசு நிகழ்ச்சியில் ரீல்ஸ் தவெக-வினர் அலப்பறை கண்டுகொள்ளாத அருண்ராஜ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK:
DMK: "சுயநலக் கோழைகள்.." காவிரி நீர் விவகாரத்தில் தவெக அரசை விமர்சித்த திமுக!
Heatwave: உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
உஷார் மக்களே! இந்த 8 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் கொடுத்த வார்னிங்
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
ஏமாற்றத்தில் 1.5 லட்சம் இளைஞர்கள்; எப்போ அரசு வேலை? தமிழக அரசுக்கு அன்புமணி கேள்வி!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
Honda ZR-V Review: செம மைலேஜ், இன்ஜின், இட வசதி..ஹோண்டா ZR-V ஹைப்ரிட் SUV பிளஸ், மைனஸ் என்ன? முழு ரிவ்யூ!
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
மணல் குவாரிகளில் முறைகேடு தடுக்க டிரோன் கண்காணிப்பு: அதிரடி உத்தரவு - அமைச்சர் தகவல் !
TN Govt: 17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
17ம் நூற்றாண்டு பில்டிங்கிற்கு டாடா, சென்னைக்கு வெளியே புதிய தலைமை செயலகம்? CM விஜய் ப்ளான்
Best Anti-Theft Cars : ’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ உங்களிடம் இந்த கார்கள் இருக்கிறதா..?
’திருடர்கள் கை வைக்க அஞ்சும் டாப் 10 கார்கள்’ இதுதான் பயத்திற்கு காரணம்..!
Explained | ‘தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் நடந்தால் என்ன ஆகும்?’ விசாரணை எப்படி நடக்கும்?
’லாக்கப் மரண வழக்குகளில் விசாரணை’ நடைபெறும் முறை இதுதான்..!
Embed widget