மேலும் அறிய

Ulundhu Laddu : புரதச்சத்து நிறைந்த உளுந்து லட்டு.. இப்படி செய்தால் சுவை சூப்பரா இருக்கும்!

ஊட்டச்சத்து நிறைந்த உளுந்து லட்டு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

கருப்பு உளுந்து – 1 கப், அரிசி – 1/4 கப் ( பச்சரிசி அல்லது புழுங்கல் அரிசி), வேர்க்கடலை – 1/2 கப், பொட்டுக்கடலை - 1/2 கப், வெல்லம் முக்கால் 3/4 கப், நெய் – 3 ஸ்பூன், ஏலக்காய் – 2, பச்சரிசி புழுங்கல் அரிசி எதை வேண்டும் என்றாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். வெல்லத்திற்கு பதிலாக கருப்பட்டியையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

செய்முறை 

முதலில் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அது நன்றாக சூடானதும், கருப்பு உளுந்தை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். உளுந்தை கைவிடாமல் வறுக்க வேண்டும்.  இதனை ஒரு தட்டுக்கு மாற்றிக்கொள்ள வேண்டும்.   

அடுத்தது அரிசியை நன்றாக வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அடுத்தபடியாக பொட்டுக்கடலை, வேர்க்கடலை,  ஏலக்காய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக கடாயில் சேர்த்து சிவக்கும் அளவிற்கு வறுத்து, ஒரு தட்டில் கொட்டி  ஆறவைக்க வேண்டும். அடுத்து வறுத்த உளுந்து வேர்க்கடலை அரிசி பொட்டுக்கடலை ஏலக்காய் ஆகிய அனைத்துப் பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் வெல்லத்தை மிக்ஸியில் சேர்த்து இரண்டு சுற்று சுற்றிக் கொள்ள வேண்டும். 

இந்த கலவையை ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். 3 ஸ்பூன் நெய்யை ஒரு கரண்டி அல்லது கிண்ணத்தில் ஊற்றி உருக்கி அதை லட்டு மாவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ( நட்ஸ் பிடிக்கும் என்றால் முந்திரி பாதாம் உள்ளிட்டவற்றை நெய்யில் சேர்த்து வறுத்து லட்டு மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்) 

தாங்கும் அளவு சூடு வந்தவுடன் இந்த கலவையை உருண்டைகளாக பிடித்துக்கொள்ள வேண்டும்.

இதை உலர்ந்த டப்பாவில் போட்டு காற்றுப்புகாமல் மூடி வைத்தால் ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்.

அவ்வளவுதான் சுவையான உளுந்து லட்டு தயார். 

உளுந்தின் நன்மைகள் 

உளுந்தில் அனைத்து அத்தியாவசிய அமினோ அமிலங்களும் இருப்பதால், இதில் காணப்படும் புரதம் உயர் தரமாக கருதப்படுகிறது.

அத்தியாவசியமற்ற அமினோ அமிலங்களில் ஒன்றான குளுட்டாமிக் மற்றும் அஸ்பார்டிக் அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன.

உளுந்தில் வைட்டமின் பி9 அல்லது ஃ போலேட் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி5 வைட்டமின் கே, வைட்டமின் ஈ, வைட்டமின் ஏ ஆகிய வைட்டமின்கள் அடங்கியுள்ளன.

மேலும் படிக்க 

Ragi Dosa :இன்ஸ்டன்டன்ட் ராகி தோசை: இப்படி செய்தால் மொறு மொறுவென சூப்பரா இருக்கும்!

Ulundhu Kali:பெண்களின் ஆரோக்கியத்திற்கும் எலும்புகளுக்கும் நன்மை பயக்கும் உளுந்து களி... செய்முறை இதோ!

தலைப்பு செய்திகள்

TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
இனி ஆபீஸில் உட்கார முடியாது... காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம் – அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
இனி ஆபீஸில் உட்கார முடியாது! காட்டிற்குள் 7 நாட்கள் கட்டாய முகாம்! அதிகாரிகளுக்கு வனத்துறை செக்!
"வாக்குறுதி என்ன ஆச்சு?" - 110 விதியில் அறிவிப்பு வருமா? முதல்வருக்குப் பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை!
Embed widget