![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Creamy Mushroom Toastie: சுவையான மாலை நேர உணவு - க்ரீமி காளான் டோஸ்ட் ரெசிபி இதோ!
Creamy Juicy Mushroom Toastie: க்ரீமி ப்ரெட் டோஸ்ட் செய்வது எப்படி என்று காணலாம்.
![Creamy Mushroom Toastie: சுவையான மாலை நேர உணவு - க்ரீமி காளான் டோஸ்ட் ரெசிபி இதோ! Creamy & Juicy Mushroom Toastie Check out the Snack delicious and Easy Making Creamy Mushroom Toastie: சுவையான மாலை நேர உணவு - க்ரீமி காளான் டோஸ்ட் ரெசிபி இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/21/3a142631bb78f8a06773c3e822c4634b1724240310433333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரெட் டோஸ்ட், பிரெட்ல சாண்ட்விட் சாப்பிடணும்னு தோணும்போது அதை ஆரோக்கியமானதாக மாற்ற விருப்பமா? குழந்தைகளுக்கும் பிரெட் பிடிக்கும். மைதா மாவு வைத்து செய்யப்படும் பிரெட் தவிர்க்க வேண்டும் என்பவர்கள் கோதுமை பிரெட் பயன்படுத்தலாம். இருப்பினும், அடிக்கடி பிரெட் சாப்பிட வேண்டாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மாலை நேர உணவாக கூட பிரெட் பயன்படுத்தி ஏதாவது குழந்தைகளுக்கு செய்து கொடுக்கலாம்.
என்னென்ன தேவை?
பிரெட் - தேவையான அளவு
காளான் - ஒரு கப்
ப்ரெஷ் க்ரீம் - ஒரு கப் (250 கிராம்)
வெண்ணெய் - தேவையான அளவு
வெங்காயம் - 1
சோயா சாஸ், Schezwan sauce - 1 டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் - ஒரு ஸ்பூன்
மிக்ஸ்ட் ஹெர்ப்ஸ் - ஒரு ஸ்பூன்
தண்ணீர்- சிறிதளவு
செய்முறை
முதலில் வெண்ணெய் சிறிதளவு ஊற்றி அதில் நறுக்கிய காளானை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து வைக்கவும். கிரெவி தயார் செய்ய வேண்டும். அதற்கு கடாயில் வெண்ணெய் சேர்த்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை நன்றாக வதக்க வேண்டும். இதோடு சோயா சாஸ்,Schezwan சாஸ் சேர்த்து வதக்க வேண்டும். இதோடு சில்லி ஃப்ளேக்ஸ் சேர்க்க வேண்டும். உப்பும் சேர்த்து அதில் ஃப்ரெஷ் க்ரீம் சேர்க்க வேண்டும்.இது நன்றாக கொதித்ததும், காளான் சேர்த்து 3 நிமிடங்களுக்குப் பின் அடுப்பிலிருந்து இறக்கவும். ஸ்டஃபிங்க் ரெடி.
அடுத்து பிரெட்களை வெண்ணெயில் டோஸ்ட் செய்து எடுத்துகொள்ளவும். இப்போது சூடான பிரெட் மீது வதக்கிய காளான் வைத்து கொத்தமல்லி தூவினால் க்ரீமி பனீர் டோஸ்ட் ரெடி.
பிரெட் வைத்து ஏராளமான உணவுகளை செய்யலாம். ஃப்ரெஞ்ச் டோஸ்ட், ப்ரெட் ஆம்லெட் உள்ளிட்டவைகளையும் செய்து கொடுக்கலாம்.
இதே செய்முறையில் பூண்டு, முட்டை உடல் பாஸ்தாவிற்கு பயன்படுத்தும் ஒயிட் சாஸ் சேர்த்து பிரெட் டோஸ்ட் செய்யலாம். அதற்கு ஒரு கப் அளவிற்கு பூண்டை சில்லி ஃப்ளேக்ஸ் உடன் சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். மைக்ரோவேவ் அவன் இருந்தால் அதில் பேக் செய்தும் பயன்படுத்தலாம். இதற்கு ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தினால் நன்றாக இருக்கும். பூண்டு சில்லி ஃப்ளேக்ஸ் கலவை தயாரானதும் ஆம்லெட் தயாரிக்க வேண்டும். பின்னர், பிரெட் டோஸ்ட் செய்து அதன் மீது பூண்டை மசித்து கொள்ளவும். அதோடு ஆம்லெட் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
மேலும் வாசிக்க..
Avocado Strawberry MilkShake:மாலை நேர ஸ்நாக்ஸ்; ஆரோக்கியம் நிறைந்த மில்க்ஷேக் ரெசிபி இதோ!
Oats Mango Smoothie: ஆரோக்கியமான ஓட்ஸ் - மாம்பழ ஸ்மூத்தி ரெசிபி இதோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)