News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Navratri Recipe : நவராத்திரி ஸ்பெஷல் : ஆப்பிள் பன்னீர் பாயசம், ரங்கோலி சுண்டல், ஃப்ரூட் கேசரி எப்படி செய்யணும்?

Navratri 2023:

நவராத்திரி நெருங்குகிற நிலையில், நவராத்திரி ரெசிபிகளான, ஆப்பிள் பன்னீர் பாயசம், ரங்கோலி சுண்டல், ஃப்ரூட் கேசரி ஆகிவற்றை எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.

FOLLOW US: 
Share:

ஆப்பிள் பன்னீர் பாயசம்

ஆப்பிள்- ஒன்று, காய்ச்சி ஆற வைத்த பால் - கால் லிட்டர், சர்க்கரை – கால் கப், பன்னீர் - 6 துளிகள், நெய் – சிறிதளவு, முந்திரி -5, திராட்சை - 5. 

செய்முறை

நெய்யில் முந்திரி, திராட்சையை வறுத்துக் கொள்ளவும். ஆப்பிளை தோல் நீக்கி துண்டுகளாக்கி, சிறிதளவு காய்ச்சிய பால் சேர்த்து, மைய அரைத்து எடுத்துக் கொள்ளவும். மீதமுள்ள பாலை மிதமான தீயில் பாதியாக சுண்டும் வரை காய்ச்ச வேண்டும்.  இதனுடன் சர்க்கரை, அரைத்த ஆப்பிள் விழுது, ஏலக்காய்த்தூள், சேர்த்து, கொதிக்கவிட்டு இறக்கவும் . இப்போது இதனுடன்  பன்னீர் துளிகள், முந்திரி, திராட்சை சேர்த்துப் பருகலாம். 

ஃப்ரூட்ஸ் கேசரி

தேவையான பொருட்கள்:

ரவை- ஒரு கப், சர்க்கரை - ஒரு கப், நெய் -அரை கப், கேசரி கலர் பொடி – ஒரு சிட்டிகை, பொடியாக நறுக்கிய விருப்பமான பழத் துண்டுகள் – அரை கப், முந்திரி, திராட்சை – அலங்கரிக்க தேவையான அளவு.

செய்முறை:

ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரி, திராட்சையை வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நெய்யில் ரவையை வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடிகனமான பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் விட்டு, கேசரி கலர் பொடி சேர்த்துக் கொதிக்கவிட வேண்டும். பின்  இதனுடன் ரவையை சேர்த்துக் கிளற வேண்டும்.  முக்கால் பங்கு வெந்த பின் சர்க்கரை, நெய், பழ வகைகள் சேர்த்துக் கிளறி இறக்க வேண்டும்.  இப்போது இதில் முந்திரி திராட்சையை அலங்கரித்து பரிமாறலாம். 

ரங்கோலி சுண்டல்

தேவையான பொருட்கள்:

வெள்ளை கொண்டைக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை, கறுப்பு கொண்டைக்கடலை, ராஜ்மா – தலா ஒரு சிறிய கப், கடுகு, பெருங்காயம் – தாளிக்க தேவையான அளவு, தேங்காய் துருவல் - ஒரு கப், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

பொடி செய்வதற்கு:

கடலைப்பருப்பு - 2 டீஸ்பூன், தனியா –-ஒரு டீஸ்பூன், மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, 

செய்முறை:

பொடி செய்ய கொடுத்துள்ளவற்றை வறுத்து மிக்ஸியில் பொடித்துக்கொள்ள வேண்டும். கடலை வகைகளை முதல் நாள் இரவே ஊற வைத்து, மறு நாள் வேக வைக்க வேண்டும். கடாயில் எண்ணெயை காயவிட்டு கடுகு, பெருங்காயம் தாளித்து,  வேக வைத்த கடலை வகைகள், மிக்ஸியில் அரைத்து வைத்த பொடி, தேங்காய் துருவல், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கினால்,  கலர்ஃபுல்லான ரங்கோலி சுண்டல் தயார். 

மேலும் படிக்க 

Fried Poha : இட்லி, தோசை சாப்பிட்டு போரடிச்சு போச்சா? வறுத்த அவல் ரெசிப்பியில் கலக்குங்க..

Published at : 01 Oct 2023 08:08 PM (IST) Tags: apple paneer payasam fruit kesari rangoli sundal navaratri recipe

தொடர்புடைய செய்திகள்

Maggi Biryani: ராத்திரி தூக்கம் கலைஞ்சு பசிக்குதா? மேகி பிரியாணி செய்து அசத்துங்க - ரெசிபி!

Maggi Biryani: ராத்திரி தூக்கம் கலைஞ்சு பசிக்குதா? மேகி பிரியாணி செய்து அசத்துங்க - ரெசிபி!

Beetroot Carrot Soup: சுவையான பீட்ரூட் - கேரட் சூப் செய்வது எப்படி?இதோ ரெசிபி!

Beetroot Carrot Soup: சுவையான பீட்ரூட் - கேரட் சூப் செய்வது எப்படி?இதோ ரெசிபி!

Travel With ABP: ஆட்டையாம்பட்டி டூ அமெரிக்கா... இது ஒரு முறுக்கின் கதை!!! சேலம் வந்தா மிஸ் பண்ணிடாதீங்க.

Travel With ABP: ஆட்டையாம்பட்டி டூ அமெரிக்கா... இது ஒரு முறுக்கின் கதை!!! சேலம் வந்தா மிஸ் பண்ணிடாதீங்க.

Summer Veg Pasta Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க;பாஸ்தா இப்படி செய்து பாருங்க!

Summer Veg Pasta Recipe: குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க;பாஸ்தா இப்படி செய்து பாருங்க!

Mango Phirni: ஸ்வீட் க்ரேவிங்ஸ் - இதோ மாம்பழ பிர்னி செய்து சாப்பிடுங்க! ரெசிபி!

Mango Phirni: ஸ்வீட் க்ரேவிங்ஸ் - இதோ மாம்பழ பிர்னி செய்து சாப்பிடுங்க! ரெசிபி!

டாப் நியூஸ்

Sunapha Yogam: சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

Sunapha Yogam: சாமானிய மக்களையும் கோடீஸ்வரனாக்கும் சுனபா யோகம் - எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

S.Ve.Shekher: வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!

S.Ve.Shekher: வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல அண்ணாமலையால் மட்டுமே முடியும்.. எஸ்.வி.சேகர் கடும் விமர்சனம்!

RBI On Repo: முடிந்தது தேர்தல்..! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ஆர்பிஐ வங்கி அறிவிப்பு

RBI On Repo: முடிந்தது தேர்தல்..! ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமா? - ஆர்பிஐ வங்கி அறிவிப்பு

Latest Gold Silver Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து விற்பனை..

Latest Gold Silver Rate: விண்ணை முட்டும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 320 அதிகரித்து விற்பனை..