மேலும் அறிய
Advertisement
Diwali Special Sweet: தீபாவளிக்கு இந்த புது இனிப்பை செய்து அசத்துங்க! அத்தி முந்திரி ரோல் எப்படி செய்வது?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுவையான அத்தி முந்திரி ரோல் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- 300 கிராம் உலர்ந்த அத்திப்பழம்
- 200 கிராம் முந்திரி பருப்பு
- 100 கிராம் பிஸ்தா
- 400 கிராம் சர்க்கரை
- 50 கிராம் பேரிச்சம்பழம்
- 1 கிராம் குங்குமப்பூ
- 50 கிராம் நெய்
- 50 கிராம் கசகசா (பாப்பி விதைகள்)
செய்முறை
1. முந்திரியை 2 மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி எடுத்து நன்றாக கெட்டியான பேஸ்டாக அரைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.
2. நான்ஸ்டிக் கடாயை சூடாக்கி, அதில் நெய் சேர்த்து இந்த சர்க்கரை முந்திரி கலவையை மெதுவான தீயில் 15 நிமிடங்கள் வேக வைக்க வேண்டும். கெட்டியான பின் கலவையை ஆற வைக்க வேண்டும்.
3. அத்திப்பழத்தை 1 மணிநேரம் ஊறவைத்து, கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
4.அதே நான்-ஸ்டிக் கடாயில், மீதமுள்ள நெய்யை சூடாக்கி, அத்தி பேஸ்ட்டை சேர்க்கவும். கலவை மென்மையான மாவைப் போல் மாறும் வரை 10-12 நிமிடங்கள் வரை லேசான அல்லது மிதமான தீயில் வேக வைக்க வேண்டும். பின் இதையும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற வைக்க வேண்டும்.
5.பிஸ்தாவை உலர்த்தி பொடி செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
6.இப்போது முந்திரி மாவை இரண்டாகப் பிரிக்கவும். ஒரு பாதியில் பிஸ்தா பொடியைச் சேர்த்து நன்கு கலக்கவும், இதை ஸ்டஃபிங் செய்ய தயாரித்துள்ளோம்.
7.குங்குமப்பூவை 1 டீஸ்பூன் வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கவும். மீதமுள்ள முந்திரி மாவுடன் குங்குமப்பூ கலவையை சேர்த்து கலந்துக்கொள்ள வேண்டும்.
8.இனிப்பை அசெம்பிள் செய்ய, உருட்டுவதற்கு ஒரு பலகையை எடுத்துக் கொண்டு அதன் மீது நெய் தடவ வேண்டும்.
9.முந்திரி மற்றும் குங்குமப்பூ கலந்த மாவை எடுத்து பலகையின் மீது வைத்து நீளமான உருளை வடிவில் உருட்ட வேண்டும்.
10.இப்போது அஞ்சீர் கலவை மாவை எடுத்து பலக்கையின் மீது வைத்து ரொட்டி போல் உருட்டவும். அஞ்சீர் தாளின் மேல் பிஸ்தா முந்திரி மாவை மீண்டும் வைக்கவும். கடைசியாக தாளின் ஒரு ஓரத்தில் குங்குமப்பூ முந்திரி கலவையை வைத்து உருட்டவும். இப்போது இதௌ உருளை வடிவில் உருட்டிக் கொள்ள வேண்டும்.
11.இப்போது பாப்பி விதையை பலகையின் மீது பரப்பி, அத்தி உருளையை அதன் மீது உருட்ட வேண்டும். இப்போது அஞ்சீர் உருளைக்கு ஒரு கோட்டிங் கிடைக்கும். இந்த இனிப்பை ஃப்ரீசரில் வைக்க வேண்டும்.
12. பின் வெளியே எடுத்து, இனிப்புகளை வட்டங்களாக வெட்டி எடுத்துக் கொண்டு, நறுக்கிய பிஸ்தா அல்லது பாதாம் கொண்டு அலங்கரிக்கவும். இப்போது இனிப்பு சுவைக்க தயாராகி விட்டது. இந்த ஸ்வீட் மிகவும் சுவையாக இருக்கும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion