மேலும் அறிய
Advertisement
Amritsari Masala Pyaz: சப்பாத்திக்கு நல்ல காம்போ - அமிர்தசரஸ் ஸ்டைல் வெங்காய மசாலா ரெசிபி!
Amritsari Masala Pyaz: சுவையான அம்ரித்சரி வெங்காய மசாலா எப்படி செய்வது பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.
வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் செய்ய மாட்டேன் என்பவர்களுக்கு இந்த அமிர்தரசஸ் ஸ்டைலில் உள்ள வெங்காய மசாலா மிகவும் பிடித்துப்போகும்.
என்னென்ன தேவை?
- வெங்காயம் - 8
- கடலை மாவு - 20 கிராம்
- தயிர் - ஒரு கப்
- எலுமிச்சை சாறு - 2 ஸ்பூன்
- தனியா - 2 ஸ்பூன்
- எண்ணெய் - தேவையான அளவு
- சிவப்பு மிளகாய் - 3
- சீரகம் - 1 டீஸ்பூன்
- ஏலக்காய் - 1
- பச்சை மிளகாய் - 1
- பூண்டு விழுது - ஒரு ஸ்பூன்
- மேத்தி இலைகள் - 1 டீஸ்பூன்
- தக்காளி - 5
- மஞ்சள்தூள் - 1/4 ஸ்பூன்
- கொத்தமல்லி தூள் - ஸ்பூன்
- சீரகப் பொடி - 1/2 ஸ்பூன்
- தண்ணீர் - தேவையான அளவு
- உப்பு - தேவையான அளவு
- கரம் மசாலா - 1 ஸ்பூன்
- கொத்தமல்லி இலைகள் - தேவையான அளவு
செய்முறை:
- இதை பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் இரண்டிலும் செய்யலாம். 5-7 வெங்காயங்களை மெலிதாக நறுக்கி தனியே வைக்கவும். தாளிக்க தக்காளி ,வெங்காயத்தை பொடியாக நறுக்கி எடுக்கவும்.
- இதற்கு க்ரேவி பதத்தை கொடுக்க ஒரு பாத்திரத்தில் 12 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, ஒரு கப் தயிர் சேர்த்து நன்றாக கலக்கவும். தேவையெனில் சிறிதளவு உப்பு சேர்க்கவும். காரத்திற்கு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஒரு டீஸ்பூன் மிளகாய் தூள் சேர்த்து வதங்கியதும் அதை கடலை மாவு கலவையில் சேர்க்கவும். இதோடு சிறிதளவு எலுமிச்சைச் சாறு சேர்க்கலாம்.
- இப்போது கடாயை மிதமான தீயில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், பூண்டு விழுது, இஞ்சி சேர்த்து நன்றாக வதக்கவும். இதோடு, பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். 5 நிமிடங்கள் வதங்கியதும், இதில் கடலை மாவு, தயிர் கலவையைச் சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி 5-8 நிமிடங்கள் நன்றாக கொதிக்க விடவும்.
- இப்போது, மெலிதாக நறுக்கிய வெங்காயத்தை இதில் சேர்த்து நன்றாக கிளறவும். வெங்காயம் இந்த மசாலாவில் வேக வேண்டும். இந்த வெங்காயத்தை வதக்க வேண்டிய அவசியம் இல்லை. அரை கப் தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்கும் வரை மூடிப் போட்டு மூடவிட வேண்டும்.
- 8 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க வைக்க விட வேண்டும். வெங்காயம் மசாலாவில் நன்றாக வெந்துவிடும். இப்போது, ஒரு டீஸ்பூன் கரம் மசாலா, நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலக்கவும். அம்ரிஸ்த்ரி வெங்காய மசாலா தயார்.
இதில் கடலை மாவு சேர்க்காமல் செய்தால் வெங்காயம் தொக்காக பயன்படுத்தலாம். இதை ஒரு வாரம் கூட வைத்திருக்கலாம். இதற்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்துவது நல்லது. அதிலுள்ள நல்ல கொழுப்புகள் உணவிலுள்ள சத்துக்கள் உறிஞ்ச உதவும்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
பொழுதுபோக்கு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion