News
News
abp shortsABP ஷார்ட்ஸ்வீடியோ விளையாட்டுகள்
X

Aloo Palak Pakoda: மொறு மொறுன்னு சுவையான பாலக்கீரை பகோடா ரெசிபி - ட்ரை பண்ணுங்க!

Aloo Palak Pakoda: உருளை கிழங்கு, பாலக்கீரை பக்கோடா செய்முறை பற்றிய விவரம்.

FOLLOW US: 
Share:

உருளை கிழங்கு என்றால் யாருக்குப் பிடிக்காமல் போகும்? அதோடு கீரை சேர்த்து ஒரு மொறு மொறு ஸ்நாக். கீரையும் அவ்வளவாக பிடிக்காதவர்களும் இருப்பார்கள் இல்லையா. குளிர்கால மாலை நேரத்தில் ஏதாவது சூடாக ஸ்நாக் சாப்பிட வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது நல்ல தேர்வாக இருக்கும். ஆலு பாலக்கீரை பக்கோடா எப்படி செய்வதுன்னு பார்க்கலாம்.

உருளை கிழங்கு பாலக்கீரை பக்கோடா

என்னென்ன தேவை?

பொடியாக நறுக்கிய கீரை - ஒரு கப்

துருவிய உருளைக்கிழங்கு - ஒரு கப்

பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு

கடலை மாவு - அரை கப்

அரிசி மாவு - ஒரு டேபிள் ஸ்பூன்

மிளகாய் பொடி - ஒரு ஸ்பூன்

சீரக தூள் - ஒரு ஸ்பூன்

துருவிய இஞ்சி - ஒரு துண்டு

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2

உப்பு - தேவையான அளவு

துருவிய தேங்காய் -அரை கப்

வெள்ளை எள் - ஒரு டீ ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, துருவிய உருளைக் கிழங்கு, கீரை, மிளகாய், சீரக தூள், இஞ்சி, உப்பு, அரிசி மாவு, வெள்ளை எள், துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும். பக்கோடா பதத்திற்கு மாவு தயார் செய்ய வேண்டும். அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடாக்கவும். பின்னர், மிதனமான தீயில், உருளை கிழங்கு, கீரை கலவையை பக்கோடாவாக போட்டு பொரித்தெடுக்கவும். சூடாக சட்னியுடன் சாப்பிடலாம்.

பாலக்கீரை பிரியர்களுக்கு ஹெல்தி ரைஸ்

கொண்டைக்கடலை, பாலக்கீரை இரண்டையும் சேர்த்து புலாவ் செய்வது எப்படி என்று பார்க்காலம். உணவில் தினமும் கீரை இடம்பெற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏதாவது ஒரு தானிய வகையும் இருந்தால் நல்லது, 

என்னென்ன தேவை?

வேகவைத்த கொண்டைக்கடலை - ஒரு கப்

அரைத்தெடுத்த பாலக்கீரை விழுது - ஒரு கப்

ஊற வைத்த அரிசி - ஒரு கப்

பச்சை மிளகாய் - 2

வெங்காயம் - 2

எண்ணெய்- தேவையான அளவு

கரம் மசாலா - அரை டீ ஸ்பூன்

பிரியாணி இலை - 1 

பச்சை ஏலக்காய் - 2

கிராம்பு - 1

கொத்தமல்லி தூள் - 1 ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

இஞ்சி - பூண்டு விழுது - அரை டீ ஸ்பூன்

எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை

இரவு ஊறவைத்த கொண்டைக்கடலையை நன்றாக வேகவைத்து தனியே வைக்கவும். சுத்தம் செய்யப்பட்ட பாலக்கீரையை மிக்ஸியில் கொஞ்சம் அரைத்தெடுக்கவும். 

குக்கர் அல்லது பாத்திரம் பயன்படுத்தலாம். அடுப்பில் மிதமான தீயில், குக்கரை வைத்து எண்ணெய் அல்லது நெய் 4 டேபிள் ஸ்பூன் ஊற்றவும். நெய் சூடானதும் அதில், பச்சை ஏலக்காய், பிரியாணி இலை, கிராம்பு, சீரகம், பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். 

வெங்காயம் நன்றாக வதங்கியதும், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பாலக்கீரை விழுதை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும். பாலக்கீரை கொஞ்ச்ம நிறம் மாறியதும் வேகவைத்த கொண்டைக்கடலையை சேர்த்து, கரம் மசாலா, உப்பு சேர்த்து கலக்கவும். இதோடு, ஊற வைத்த அரிசியை சேர்த்து குக்கரை மூடி 3 விசில் வர விடவும். இந்த முறையில் செய்ய கொண்டைக்கடலை வேக வைக்காமலும் சேர்க்கலாம். புலாவ் மாதிரி செய்யும் முறை. ரைஸ் மாதிரி செய்ய வேண்டும் என்றால் அரிசியை வேக வைத்து எடுக்கவும். 

பாத்திரத்தில் செய்வதானால், 20-30 நிமிடங்கள் வரை வெந்ததும் கொண்டைக்கடலை பாலக்கீரை சாதம் ரெடி.

இதே செய்முறையில் மற்ற கீரை வகைகளை பயன்படுத்தலாம். கொண்டைக்கடலைக்கு பதில், ராஜ்மா, பச்சை பயறு உள்ளிட்டவற்றையும் பயன்படுத்தினால் சுவையுடன் ஆரோக்கியமான உணவாக இருக்கும்.

Published at : 04 Jan 2024 09:11 PM (IST) Tags: @food Chana Palak Rice Recipe Chana Palak Rice Palak Rice Aloo Palak Pakoda

தொடர்புடைய செய்திகள்

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Green Dal Tadka: புரதச்சத்து நிறைந்த லன்ச் பாக்ஸ் ரெசிபி! பச்சை பயறு க்ரேவி செய்வது எப்படி?

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Vijay Birthday: வாயில்லா ஜீவன்களுக்கு உணவளித்த த.வெ.க.வினர் ; விஜய் பிறந்தநாளில் மதுரையில் நெகிழ்ச்சி

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Raw Mango Dal: மகாராஷ்டிரா ஸ்டைல் மாங்காய் பருப்பு - இதோ ரெசிபி!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Murungai Keerai Podi: ஊட்டச்சத்தி நிறைந்த முருங்கைக்கீரை கறிவேப்பிலை பொடி - ரெசிபி இதோ!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

Aamras: உலக அளவில் ட்ரெண்டான ஆம்ரஸ்! எப்படி செய்வது? தெரிஞ்சிக்கோங்க!

டாப் நியூஸ்

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?

ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து