மேலும் அறிய

நாய்க்கு பிரம்மாண்டமாக கல்யாணம்.. இணையவாசிகள் ரியாக்ஷன் இதுதான்

தங்களின் செல்லப்பிராணிக்கு பிரம்மாண்டமாக கல்யாணம் செய்துவைத்த குடும்பத்திற்கு இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

தங்களின் செல்லப்பிராணிக்கு பிரம்மாண்டமாக கல்யாணம் செய்துவைத்த குடும்பத்திற்கு இணையவாசிகள் கலவையான விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

இந்தியக் குடும்பங்களில் செல்லப் பிராணிகளுக்கு அதுவும் குறிப்பாக நாய்க்குட்டிகளுக்கு தனி இடம் உண்டு.நாய்களுக்கு பிறந்தநாள் கொண்டாடுவது, வளைகாப்பு நடத்துவது என்றெல்லாம் நிறைய கொண்டாட்டங்கள் உண்டு. இந்நிலையில் ஹத்தீந்தர் சிங் என்ற நபர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் உள்ள காட்சிகள்..

ஒரு எலக்ட்ரிக் டாய் காரில் ஆண் நாய் அலங்கார தலைப்பாகை சூட்டி அழைத்து வரப்படுகிறது. பின்னர் பெண் நாய் சிவப்பு நிற துப்பட்டா தலையில் அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறது. எலக்ட்ரிக் காரில் முன்னால் ஒரு ஹார்ட் ஒட்டப்பட்டு அதில் ரியோ, ரியா என எழுதப்பட்டிருந்தது. அதுதான் நாய்களின் பெயர்கள். பின்னர் திருமணம் நடத்திவைக்கப்பட்டு மணமக்கள் டோலியில் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மாலை மாற்றும் வைபவம் கோலாகலமாக நடந்தது. ஆட்டம், பாட்டம், புகைப்பட செஷன், பரிசு வழங்கும் நிகழ்வு, அறுசுவை விருந்து என எதற்கும் குறைவில்லாமல் நடந்து முடிந்துள்ளது இந்தத் திருமணம். பார்க்க பார்க்கப் பரவசம் ஊட்டிய இந்தத் திருமணம் தேசிய ஊடகங்களிலும் செய்தியாகத் தவறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நம்மூரில் மழை பெய்யாவிட்டால் கழுதைகளுக்கு, தவளைகளுக்கு திருமணம் செய்து வைக்கப்படும். அது தொடர்பான செய்திகள் வெளியாகி அவ்வப்போது கவனம் ஈர்க்கும். நாய்க்கு வளைகாப்பு செய்து வைக்கும் வீடியோக்களை அவ்வப்போது பார்த்திருப்போம். ஆனால் இதுபோன்ற கலகலப்பான கலாட்டா திருமண வீடியோ இணையவாசிகளுக்கு கொஞ்சம் புதிதுதான். எப்படியும் இந்த திருமணத்திற்கு சில பல ஆயிரங்கள் செலவாகி இருக்கும் என்பதில் ஐயமில்லை. அதனாலேயே இந்தத் திருமணம் விமர்சனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது. இந்தக் காசை வேறு நல்ல காரியங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என்று கூறுகின்றனர் நெட்டிசன்கள் சிலர்.

இந்த வீடியோவை ஷேர் செய்தது முதல் இதுவரை 18 ஆயிரம் பார்வைகளைக் கடந்துள்ளது. அந்த வீடியோவுக்கு  "They Had An Indian Wedding For Their Dogs" என்று தலைப்பிடப்பட்டுள்ளது. 

அதன் கீழ் ஒருவர், இதில் எந்தத் தவறையும் காண முடியவில்லை. ஒரு செல்லப்பிராணி வளர்ப்பவராக நான் இந்த திருமணத்தை ரசிக்கிறேன். அவர்களின் அன்பை மதிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு இணையவாசி காசிருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று பதிவிட்டுள்ளார்.

வேறொரு ட்விட்டராட்டி இது ரொம்ப க்யூட்டாக உள்ளது என்று பதிவிட்டுள்ளார்.

இவ்வாறு பலரும் பலவாறு கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

வீடியோவைக் காண:

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
ரூ. 2,700 கோடி! பிரம்மிக்க வைக்கும் இசட் வடிவ சுரங்கப்பாதை! திறந்து வைத்த பிரதமர் மோடி!
"நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் சங்கமம்" மகா கும்பமேளா குறித்து பூரித்து போன பிரதமர் மோடி
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
இன்று 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: பட்டியல் இதோ.!
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Happy Pongal 2025 Wishes: பொங்கல் வாழ்த்துகள் சொல்லிட்டிங்களா.! உங்களுக்காக டாப் 8 வாழ்த்து புகைப்படங்கள்...
Embed widget