மேலும் அறிய

சுட்டெரிக்கப்போகும் கோடையில் செல்லப் பிராணி நாய்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி? அறிகுறிகளும் அறிவுரைகளும்!

கோடையின் வெப்பத்தை சமாளிக்க நாம் குளிர்ச்சியான உணவு வகைகள், ஆடைகள் என நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம்.

கோடையின் வெப்பத்தை சமாளிக்க நாம் குளிர்ச்சியான உணவு வகைகள், ஆடைகள் என நம்மை நாமே தற்காத்துக் கொள்வோம். ஆனால் செல்லப்பிராணிகள் அதுவும் குறிப்பாக நாய்கள் கோடையில் பல்வேறு நோய்களுக்கும் ஆளாக வாய்ப்பு அதிகம். கோடை வெப்பத்தால் நாய்களுக்கும் ஹீட் ஸ்ட்ரோக், நீரிழப்பு, சன்பர்ன் உள்பட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். அதனால் கோடையில் நாய்களுக்கு விதைகள் நீக்கிய தர்ப்பூசணி, வெள்ளரிப் பிஞ்சுகள், செலரி ஆகியனவற்றை உண்ணத் தரலாம். அதேபோல் நாய்கள் மொட்டை வெயிலில் விடாமல் வெப்பம் தாக்கம் குறைவாக இருக்கும் இடங்களுக்கு மாற்றலாம்.

கோடையில் நாய்களை எப்படிப் பராமரிப்பது என்பது குறித்து கால்நடை அதிகாரி டாக்டர் ஆர்.ஐஸ்வர்யா தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
 
1. நீர்ச்சத்து குறைபாடு (Dehydration): கோடையில் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க நாய்களுக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்படக்கூடும். அதனால் நாய்கள் சோம்பல், உலர்ந்த ஈறுப் பிரச்சனை, சோர்வான கண்கள் போன்ற இடையூறுகளுக்கு ஆளாகலாம். அதனால் உங்கள் நாய்களுக்கு நிறைய நன்னீர் கிடைக்கச் செய்யுங்கள். அதேபோல் வெப்பம் நிலவும் பகுதிகளில் நடக்க வைக்காதீர்கள்.

2. ஹீட் ஸ்ட்ரோக் (Heatstroke): ஹீட் ஸ்ட்ரோக் என்பது நாய்களுக்கு உயிர் பறிக்கும் நோயாக மாறலாம். ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டால் நாய்கள் மிக மோசமாக மூச்சுத்திணறலில் சிக்கும். வாயில் நுரை ஊறுதல், மயக்கம், வாந்தி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். நாய்களை வெப்பமான நேரங்களில் காரில் அழைத்துச் செல்லாதீர்கள். நாய்களை நிழலில் இருக்குமாறு செய்யுங்கள். நிறைய தண்ணீர் கொடுங்கள். உடற்பயிற்சிகளை வெப்பம் அதிகமான நேரத்தில் தவிர்த்து காலை நேரம் அல்லது மாலை நேரங்களில் செய்ய வைக்கலாம்.

3. சன் பர்ன் (Sunburn): ரோமம் அதிகமாக உள்ள நாய்கள் என்றால் கோடை காலத்தில் அவற்றின் நிறம் மங்கும், காது, மூக்கில் வறட்சி ஏற்படும். அதனால் வெயில் காலத்தில் செல்லப் பிராணிகளுக்கு உகந்த சன் ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்தலாம்.

4. உன்னி (Fleas and ticks): வெப்பமான சூழலில் தான் உன்னி, பூச்சிகள் வளரும். அதனால் கோடை காலங்களில் நாய்களுக்கு உன்னி ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம். அதனால் கோடையில் உன்னி தடுப்பு மருந்துகள் பயன்படுத்தலாம். உன்னி பரவும் பகுதிகளில் உங்கள் நாய்களை நடைப்பயிற்சி அழைத்துச் செல்வதைத் தவிர்க்கலாம்.

5. அலர்ஜி (Allergies): கோடை வந்துவிட்டால் நாய்களுக்கு விதவிதமான அலர்ஜிகள் ஏற்பட வாய்ப்பு அதிகம். மகரந்த துகள்கள், புல், பூச்சிக்கடி என அலர்ஜிக்கள் ஏற்படலாம்.அதுதவிர அரிப்பு, தோல் சிவந்து போதல் ஆகிய தொந்தரவுகளும் ஏற்படலாம். ஒவ்வொரு நாய்க்கும் சிகிச்சை வேறுபடும் என்பதால் அலர்ஜி ஏற்பட்டால் மருத்துவரை நாடி உரிய சிகிச்சை கொடுக்கவும்.
 
6. காதில் தொற்றுநோய் (Ear infections): ஏரிகளில், ஆறுகளில், நீச்சல் குளங்களில் என நீர்நிலைகளில் நீந்துவது என்பது நாய்களுக்கு காதில் தொற்றுநோய் உண்டாக்கும். அதனால் நாய்களை நீச்சலுக்கு அழைத்துச் சென்றால் முடிந்தவுடன் அவற்றின் காதை சுத்தப்படுத்துங்கள்.

முடிவாக கோடை உண்மையில் செல்லப் பிராணிகளுக்கு குதூகலமாக இருக்கும் எப்போதென்றால் நீங்கள் அவற்றை வெப்ப நோய்களில் இருந்து தற்காத்தீர்கள் என்றால் போதும். செல்லப்பிராணிகளைப் பேணுவோம்.
  
தலைப்பு செய்திகள்

ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Araghchi Vs Trump: “பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
“பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா கெஞ்சுகிறது“; ட்ரம்ப்புக்கு நெத்தியடி பதில் கொடுத்த அப்பாஸ் அராக்சி
Skoda Comeback Cars: ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
ஸ்கெட்ச் போடும் ஸ்கோடா.! சூப்பர்ப் மாடலில் மீண்டும் டீசல் எஞ்சின்; கம்பேக் கொடுக்கும் ஆக்டேவியா; பிளான் என்ன.?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
TNPSC Free Coaching: தேர்வர்களே.. டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி; பங்கேற்பது எப்படி?
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Maruti Baleno: குறைந்த பட்ஜெட்டில் பிரீமியம் கார்: ரூ.50,000 முன்பணத்தில் மாருதி பலேனோ- EMI திட்டம்!
Embed widget