முகப்பரு வராமல் இருக்க விளக்கெண்ணெய்.. எப்படி பயன்படுத்தவேண்டும்?
இது பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. உடல் வெப்பத்தை குறைப்பதில் இருந்து சரும பராமரிப்பு வரை பல்வேறு குணங்களை கொண்டுள்ளது.
பாரம்பரிய மருத்துவ முறைகளான சித்தா , ஆயுர்வேதம் ஆகியவற்றில் விளக்கெண்ணெய் மிக முக்கியமாக பயன்படுத்தபட்டது. இது பல்வேறு நன்மைகளை கொண்டுள்ளது. உடல் வெப்பத்தை குறைப்பதில் இருந்து சரும பராமரிப்பு வரை பல்வேறு குணங்களை கொண்டுள்ளது.
தினம் முகத்தில் விளக்கெண்ணெய் தடவி மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவேண்டும். இதை தினம் கூட செய்யலாம். இது மாதிரி செய்வதால் சருமத்திற்கு என்ன நன்மைகள் கிடைக்கும் என தெரிந்து கொள்வோம்.
சருமம் ஈரப்பதமாக வைப்பதற்கு - சிலருக்கு பொதுவாகவே வறட்சியான சருமமாக இருக்கும். இதனால், தோல் வறட்சி , தோல் பொலிவு இழந்து சோர்வாக இருப்பவர்கள் இது போன்று முகத்தில் விளக்கெண்ணெய் தடவி ஊறவைத்து கழுவுவதன் மூலம், சரும வறட்சி மாறும். மேலும், நீர்சத்து குறைபாடு இருந்தாலும், இது போன்று சரும வறட்சி பிரச்னை வரும். அவர்கள், ஒரு நாளைக்கு போதுமான தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் உணவில் பழங்களை சேர்த்து கொள்வது சரும ஆரோக்கியத்திற்கு மேம்படுத்தும்
முகப்பரு வராமல் தடுக்கும் - விளக்கெண்ணெய் ஆன்டி பாக்டீரியா தன்மை கொண்டு இருக்கிறது. அதனால் பாக்டீரியா தொற்று பிரச்சனையால் வரும் முகப்பரு வராமல் பாதுகாக்கும். முகப்பரு, கருப்பு புள்ளிகள், சரும நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகளுக்கு விளக்கெண்ணெய் சிறந்த மருந்தாக இருக்கும். விளக்கெண்ணெய் புரத சத்துகளைக் கொண்டுள்ளது.
பூஞ்சை தொற்று - சருமத்தில் பூஞ்சை தொற்று ஏற்பட்டால், முகத்தில் அரிப்பு, தோல் நிறம் மாறுதல், சிவந்து போதல், தடிப்பு போன்ற பிரச்சனைகளை ஆரம்ப நிலையிலேயே தடுக்கும். மேலும் பரவாமல் தடுக்கும்.
சரும ஒவ்வாமை பிரச்சனைகள் - விளக்கெண்ணெய் ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்களுக்கு வெளிப்புறமாக தடவுவதன் மூலம், சரியாகி விடும். விளக்கெண்ணெய் ஆண்டி பாக்டீரியல் தன்மை மற்றும் பூஞ்சைகளுக்கு எதிராக செயல்படும் தன்மை இருக்கிறது. அதனால் சரும ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு இது சிறந்த தீர்வாக அமையும். இது தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகிறது.
சிலருக்கு வெயிலில் சென்று வந்தால் தோலின் தன்மை மாறும் - வெயில் ஒவ்வாமை பிரச்னை இருப்பவர்களுக்கு விளக்கெண்ணெய் தடவி கொள்வதன் மூலம் இந்த பிரச்னை சரியாகி விடும். விளக்கெண்ணெய் ஈரப்பதமூட்டும் பண்புகள் கொண்டுள்ளதால்,வெயில் நேரத்தில் ஏற்படும் சரும வறட்சிக்கு இது சிறந்த மருந்தாகும். மேலும் விளக்கெண்ணெய் பயன்படுத்துவதன் மூலம், வெயில் நேரத்தில் வரும் எரிச்சல், தோலின் நிறம் மாறுதல் போன்ற பிரச்சனைகளில் இருந்து சிறந்த தீர்வாக அமையும்.
விளக்கெண்ணையை எப்படி பயன்படுத்தலாம்? விளக்கெண்ணையை பஞ்சில் ஊறவைத்து எடுத்து சருமத்தின் மீது தடவிக் கொள்ளலாம். இது இயற்கையாகவே அடர்த்தியாக இருப்பதால், பிசுபிசுப்பு தன்மை அதிகமாக இருக்கும். அதனால் 20 நிமிடங்கள் கழித்து, ஃபேஸ்வாஷ் கொண்டு இதை கழுவுவது நல்லது.