வைட்டமின் A ட்ராப்ஸை மூக்கில் விடணுமா? வைரலாகும் அட்வைஸ்.. என்ன சொல்கிறார்கள் நிபுணர்கள்?
கொரோனாவால் இழந்த வாசனைத் திறனை வைட்டமின் ஏ ட்ராப்ஸைப் பயன்படுத்துவதால் மீட்டெடுக்கலாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
கொரோனாவால் இழந்த வாசனைத் திறனை வைட்டமின் ஏ ட்ராப்ஸைப் பயன்படுத்துவதால் மீட்டெடுக்கலாம் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
கொரோனா அறிகுறிகளில் மிக முக்கியமானதாக குறிப்பிடுவது வாசனைத் திறனை இழப்பது. ஊதுபத்தியை மூக்குக்கு பக்கத்தில் வைத்தும் வாசனை தெரியலைன்னா கொரோனா டெஸ்ட் மேற்கொள்வது சிறந்தது. ஏனென்றால் கொரோனா இன்னும் ஓய்ந்தபாடில்லை. கடந்த 24 மணி நேரத்தில் கூட இந்தியா முழுவதும் 26,727 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இநிலையில் கொரோனாவால் இழக்கும் முகர்தல் சக்தியை விரைவில் மீட்டெடுக்க வைட்டமின் ஏ உதவு என்று கண்டறியப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள யுனிவர்சிட்டி ஆஃப் ஈஸ்ட் ஆங்லியா, இதற்கான ஆய்வை மேற்கொண்டது. அதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டு வாசனைத் திறன் இழந்தவர்களுக்கு வைட்டமின் ஏ நேசல் ட்ராப்ஸ் வழங்கப்பட்டது. அதில் அவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது உறுதியாகியுள்ளது.
வைட்டமின் ஏ அல்லது ரெட்டினால் எனப்படுவதில் தோல், எலும்பு, கண்பார்வை ஆகியனவற்றுக்கு வலு சேர்க்கும் சக்தி உள்ளது. அதேபோல் வைட்டமின் ஏவுக்கு ஆல்ஃபாக்டரி சென்ஸ் என்று மருத்துவத்தில் கூறப்படும் முகர்த்தல் சக்தியையும் மீட்டெடுக்கும் திறனும் இருக்கிறது.
பாட்டியா மருத்துவமனையின் ஊட்டச்சத்து நிபுணர் ஷகினா திவான் கூறுகையில், வைட்டமின் ஏவை முகர்தல் சக்தியை மீட்டெடுக்கப் பயன்படுத்துவதில் சிறிய மெக்கானிஸம் தான் இருக்கிறது. மூக்கில் உள்ள எபித்தீலியல் செல்களின் செயல்பாட்டை வைட்டமின் ஏ தூண்டும். இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மூக்குவழியாக வைட்டமின் ஏ ட்ராப்ஸ் கொடுப்பது, உணவில் வைட்டமின் ஏயை அதிகரிப்பது பலன் தரும்.
பாலாடைக் கட்டி, முட்டை, எண்ணெய் சத்து நிரம்பிய மீன், பால், யோக்ஹர்ட், ஈரல் வகைகள் ஆகியனவற்றில் வைட்டமின் ஏ நிறைவாக உள்ளது. மேலும் உடலில் சேரும் பீட்டா கரோட்டீனும் கூட வைட்டமின் ஏவாகத் தான் மாற்றப்படுகிறது. பீட்டா கரோட்டீன் மஞ்சள், சிவப்பு மற்றும் பச்சை காய்கறிகள், கீரை, சர்க்கரைவல்லிக் கிழங்கு, மாம்பழம், பப்பாளி, ஆப்ரிகாட் ஆகியனவற்றில் இருக்கிறது.
கொரோனாவால் வாசனைத் திறனை இழப்பது குறித்து ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூல் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனோஸ்மியா எனப்படும் முகர்தல் சக்தியை இழப்பதுதான் கொரோனா தாக்கத்தைக் கண்டறிவதில் சிறந்த அறிகுறியாகக் கருதப்படுகிறது. ஆனால், எதனால் இது ஏற்படுகிறது என்பது குறித்து தெளிவான முடிவுகள் ஏதும் இல்லை. இந்த நிலையில் வைட்டமின் ஏ ட்ராப்ஸ் இதற்குத் தீர்வாக இருக்கலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா நோயாளிகளுக்குக் கொடுக்க வைட்டமின் ஏ ட்ராப்ஸ் தயார் நிலையில் இருக்கின்றன. ஆனால், அதன் இறுதிகட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகி அரசு ஒப்புதல் அளித்தவுடன் இதனைப் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )