செம டேஸ்டியான அவகேடா -செவ்வாழை ஸ்மூத்தி...! எப்படி செய்யுறதுனு பார்க்கலாமா...!
அவகேடா, செவ்வாழை ஸ்மூத்தி எப்படி செய்வதென்று பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
1 அவகேடோ
1 செவ்வாழை
1 கப் பால்
தேன் தேவையான அளவு
செய்முறை
முதலில் அவகேடோ பழத்தினை இரண்டாக வெட்டி, சதைப்பகுதியை கரண்டி கொண்டு எடுத்து, மிக்ஸியில் போட்டுக் கொள்ள வேண்டும்.( பழத்தை கையில் எடுத்து குலுக்கிப் பார்த்தால் அதனுள் விதை ஷேக் ஆக வேண்டும். அப்போது தான் அது பழம் என்று அர்த்தம்)
பின்னர் அதில் வாழைப்பழத்தை துண்டுகளாக்கிப் போட்டு, அத்துடன் பால், சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இனிப்பு சுவைக்காக தேன் சேர்த்துக்கொள்ளலாம். சுவை நன்றாக இருக்கும்.
பின்னர் ஒரு டம்ப்ளரில் ஊற்றி சிகிது நேரம் பிரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாக குடிக்க சுவையான அவகேடோ வாழைப்பழ ஸ்மூத்தி தயார்.
நாம் நம் உணவில் தினந்தோறும் ஒரு பழத்தை சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். அதுவும் அவகேடா செவ்வாழை ஆகிய பழங்களில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.
அவகேடாவின் நன்மைகள்
அவகேடா பழம், குடல்களை சுத்தப்படுத்தி, கழிவுகளை வெளியேற்றிவிடுவதால் வாய் துர்நாற்றம் சரியாகும் என கூறப்படுகிறது. வெளிநாட்டில் சத்து பானமாகவும், நட்சத்திர ஓட்டல்களில் சப்பாத்தி மென்மையாக தயாரிக்க வெண்ணெய்க்கு பதிலாக இப்பழம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க,
இந்திய சட்டங்களுக்கு இந்தியில் பெயரா? மொழி சர்வாதிகாரம் என கொதித்தெழுந்த முதலமைச்சர் ஸ்டாலின்