தூங்குவதற்கு முன்பாக பாடல் கேட்பவரா நீங்கள்?- அப்போ இந்த செய்தி உங்களுக்குத்தான்!
தினமும் இரவு தூங்குவதற்கு முன்பாக பாடல் கேட்பதை சிலர் வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
நமது வாழ்வில் தினமும் அனைவருக்கும் முக்கியமான ஒன்று என்றால் அது தூக்கம் தான். ஏனென்றால் அது நமக்கு மட்டுமல்லாமல் நம்முடைய உடல் உறுப்புகளுக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. ஆகவே தூக்கத்தில் நாம் சில மாற்றங்களை செய்தால் அது விரைவாக நம்முடைய உடலில் சில பாதிப்புகளை வெளிப்படையாக ஏற்படுத்தும். அந்தவகையில் தூக்கத்தை பெற சிலர் தினமும் பாடல் கேட்டுக் கொண்டு தூங்குவது உண்டு. அப்படி ஒருவராக நீங்கள் இருந்தால் அதனால் ஏற்படும் விளைவுகள் நல்லதா கேட்டதா என்பதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்.
இரவில் பாடல் கேட்கும் போது மனதிற்கு சற்று லேசாக இருக்கும். அதிலும் நமக்கு பிடித்த மெல்லிசை பாடலை கேட்டால் மனதில் இருக்கும் கவலைகள் நாம் எளிதாக மறக்க நேரிடும். இப்படி சில நல்ல விஷயங்கள் தூங்குவதற்கு முன்பாக பாடல் கேட்பதில் இருந்தாலும் அதில் சில கேடுதல் தரும் விளைவுகளும் நமக்கு ஏற்படும். இவை குறித்து நடத்தப்பட்ட ஆய்வில் சில தகவல் வெளியாகியுள்ளன. அவை என்னென்ன?
இரவில் ஹெட்செட் மாட்டி கொண்டு தூங்குவதற்கு முன்பாக பாடலை கேட்டுக் கொண்டு தூங்கும் பட்சத்தில் அது உங்களுடைய உடலின் தூக்க தரத்தை நிச்சயம் பாதிக்கும். ஏனென்றால் நம்முடைய உடலுக்கு என்று ஒரு சர்காடியின் ரிதம் (தூக்கம்-எழுச்சி) நேரம் உண்டு. அதை நாம் இசையின் மூலம் மாற்ற முயற்சி செய்யும் போது அது நம்முடைய தூக்கத்தின் தரத்தை முற்றிலும் பாதிக்கும் வகையில் அமைந்துவிடும்.
அதேபோல் இரவு நேரத்தில் மொபைல் போனை பக்கத்தில் வைத்து பாட்டு கேட்பதால் நம்முடைய மூளை எப்போதும் செயல்பட்டு கொண்டு இருக்கும் சூழல் ஏற்படும். அதாவது நீங்கள் உடல் அளவில் தூங்கினாலும் பாட்டு கேட்டுக் கொண்டு இருக்கும் போது மூளையின் ஒரு பகுதி எப்போதும் செயல்பட்டு கொண்டு இருக்கும். அந்தப் பகுதிக்கு போதிய ஓய்வு கிடைக்காத நிலை ஏற்படும். அதுவும் நமக்கு ஒரு கேட்ட விளைவாக அமைகிறது.
இவற்றுடன் சேர்ந்து நீங்கள் அதிக நேரம் உங்கள் காதுகளில் ஹெட்செட் மாட்டிக் கொண்டு இருப்பதால் காது பகுதியில் அதிக அழுத்தம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அது நம்முடைய காதுகளில் சில கோளாறு ஏற்படுத்தவும் வாய்ப்பு உண்டு. மேலும் அடுத்த நாளை காலை எழுந்தவுடன் நம்முடைய காதுகளில் ஒருவித சத்தம் ஒலித்து கொண்டே இருக்கும் வாய்ப்பும் உள்ளது.
ஆகவே இரவு நேரத்தில் முற்றிலும் பாடல் கேட்பது தவறா?
அப்படி முற்றிலும் தவறு என்று கூற முடியாது. அதாவது நீங்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையானவர் என்றால் உங்களுடைய மொபைல் போனை படுக்கையில் இருந்து தள்ளி வைத்து பாட்டை கேட்கலாம். அத்துடன் ஹெட் செட் அணியாமல் பாட்டை கேட்கலாம். மிகவும் குறைந்த ஒலியில் பாட்டுகளை கேட்கலாம்.
என்னதான் பாடல்களை கேட்டு தூக்கத்தை வர வைத்தாலும் இயற்கையாக தூக்கம் வருவதை விட நல்லது வேறு ஒன்றும் இல்லை. உங்களுடைய தூக்கம் சரியாக இருக்கும் பட்சத்தில் உடலில் ரத்த அழுத்தம் குறையும். அத்துடன் இதய துடிப்பும் சீறாக இருக்கும். தூக்கம் சரியாக வராதவர்கள் குறைந்தபட்சம் நல்ல உடற்பயிற்சி மற்றும் யோகா ஆகியவற்றை தொடர்ந்து செய்து வந்தால் ஒரு சில மாற்றத்தை காணமுடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க: ’மச்சி ஒரு டிரிப் போலாமா?’ (11) – ஆர்ப்பரித்துக் கொட்டும் கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி பயண அனுபவம்..!