Sweets and Health: இனிப்பு சாப்பிடுவதை குறைக்க நினைப்பவரா? நிபுணர்கள் சொல்லும் டிப்ஸ்!
Balancing Sweets and Health: இனிப்பு சாப்பிடுவதிலும் உங்களால் முயன்ற அளவிற்கான இலக்கை நிர்ணயிக்கலாம்.
பண்டிகை காலம், பிறந்தநாள் விழா, பார்ட்டி உள்ளிட்ட நல்ல நாள் என்றால் இனிப்புகளை பகிர்ந்துகொள்வது வழக்கம். ஆனால், அதிகமாக இனிப்பு சாப்பிடுவது நல்லதல்ல என்கிறார்கள் மருத்துவர்கள். சிலர் ஸ்வீட் டூத்-ஆக இருப்பார்கள். இனிப்பு பிரியர்கள் வாரத்தில் ஒருமுறையாவது இனிப்பு சாப்பிட்டுவிட வேண்டும் என்றிருப்பார்கள். ஆனால், இனிப்பு சாப்பிடுவதை முறைப்படுத்த வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர் மேக்னா பாசி என்று அறிவுறுத்துகிறார்.
இனிப்பு பிரியராக இருப்பவர்களாக இருந்தாலும் உடல்நலனை கருத்தில்கொண்டு அதை கட்டுப்படுத்த வேண்டும் என்கிறார் மேக்னா. அவர் சொல்லும் அறிவுரைகளை காணலாம்.
நோக்கம் முக்கியம்
’இனி சர்க்கரையே சாப்பிட கூடாது.’ என்ற இலக்கை நிர்ணயிக்காமல் உங்களால் என்ன முடியுமோ அதை செய்யலாம். ஏனெனில், சர்க்கரை சாப்பிடுவதை விட முடியவில்லை என்றாலும் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து விடுபடலாம். இனிப்பு சாப்பிடுவதிலும் உங்களால் முயன்ற அளவிற்கான இலக்கை நிர்ணயிக்கலாம்.
வீட்டில் செய்த இனிப்புக்கு முன்னுரிமை
ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் எனில் அதற்கு முதலில் அவசியமானது ஆரோக்கியமான சமையல் முறை. வீட்டில் செய்யும் இனிப்புகளை சாப்பிடலாம். மைதா, வெள்ளை சர்க்கரை உள்ளிட்டவற்றை தவிர்த்துவிடலாம். சிறுதானிய வகைகள் கொண்டு இனிப்புகளை செய்யலாம்.
ஊட்டச்சத்திற்கு முன்னுரிமை
பண்டிகை காலம் என்றாலும் ஊட்டச்சத்து மிகுந்த இனிப்புகளுக்கு முன்னுரிமை அளிப்பது நல்லது. காய்கறி, இறைச்சி என சத்தான உணவுகளையும் உடற்பயிற்சியும் உடல்நலனை ஆரோக்கியத்துடன் பாதுகாக்க உதவும்.
கண்காணிப்பது
நீங்கள் எவ்வளவு இனிப்பு சாப்பிடுகிறீர்கள் என்பதை கண்காணிக்க தவற வேண்டாம். அதுவும் முக்கியம்.
ஹெல்தி ஸ்வீட்
இனிப்பு சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் பழங்களை சாப்பிடலாம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். பழங்கள், யோகர்ட், டார்க் சாக்லேட் உள்ளிட்டவற்றை சாப்பிடலாம். ஸ்மூத்தி தயாரிக்கும்போது பேரீட்ச்சை பழம் உள்ளிட்ட இயற்கையாக இனிப்பு சுவை தர கூடியதை சேர்க்கலாம்.
உங்கள் உடல் என்ன சொல்கிறது என்பதை கவனித்து கேளுங்கள். என்ன சாப்பிடுகிறோம் என்பதை கண்காணிக்க வேண்டும். சாப்பிடும்போது ஸ்மார்ட்ஃபோன் பார்க்காமல், எதை பற்றியும் சிந்தனையும் இல்லாமல் தட்டில் என்ன இருக்கிறது என்ன சாப்பிடுகிறோம், என்ன சுவையில் இருக்கிறது என்பதை கவனித்து சாப்பிட வேண்டும். ஆரோக்கியமற்ற உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பசி உணர்வுக்கு மரியாதை
பசி ஏற்படும் சாப்பிட்டு விடுங்க.. அதை புறக்கணிக்க வேண்டும் என்றில்லை. ’கொஞ்ச நேரம் முன்னதானே சாப்பிட்டோம். அதுக்குள்ள எதாச்சும் சாப்பிட வேண்டும் போல இருக்கே’-ன்னு தோணும்போது உங்கள் உடல் சொல்வதை காது கொடுத்து கேளுங்கள்.. ஏற்கனவே சாப்பிட்டதில் குறைவான ஊட்டச்சத்துகள் இருந்திருக்கலாம். உடலுக்கு எனர்ஜி போதுமான அளவு கிடைக்கவில்லை என்று பொருள். எனவே, பசிக்கும்போது தண்ணீர், ஜூஸ் என ஏதாவது அருந்தலாம். நேரத்திற்கு சாப்பிடுவதை கடைப்பிடிக்க வேண்டும். சாப்பிட நேரமாகிவிட்டால் நட்ஸ், பழங்கள் என ஏதாவது சாப்பிடலாம். நொறுக் நொறுக் என திங்க வேண்டும் போல இருந்தால் பாப் கார்ன், மக்கானா, வீட்டிலேயே செய்த முறுக்கு, மிக்சர் கடையில் வாங்கியது என்றாலும் அளவாக எடுத்துகொள்ளலாம்.
உணவோடு போராடாதீர்கள்
சில உணவுகள் உங்களுக்கு பிடிக்கும் என்றாலும் அதை தவிர்க்கிறீர்கள் என்று வைத்துகொள்வோம். அதனால் மனசோர்வு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. உதாரணமாக, வெள்ளை சோறு பிடிக்கும் எனில் அதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றில்லை. வெள்ளை சோறு சாப்பிடுவதை மகிழ்ச்சியோடு தவிர்ப்பவர்கள் தாராளமாக அதை பின்பற்றலாம். ஆனால், வெள்ளைச் சோறு விரும்பி சாப்பிடுபவர்கள் அதை அளவோடு சாப்பிடலாம். அப்போதுதான் ‘அய்யோ என்னால சாப்பிட முடியலையே’ -ங்கிற உணர்விலிருந்து விடுபட முடியும்.