மேலும் அறிய

Ayudha Pooja at Home: ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முக்கியத்துவம் என்ன? வழிபடும் முறைகள் பற்றிய விவரம்!

Ayudha Pooja Celebration at Home in Tamil: ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம்.

நவராத்திரி விழாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக கருதப்படுவது ஆயுத பூஜையும் விஜய தசமியும்தான். அப்படியென்ன சிறப்பு என்றால் தொழிலுக்கும் கல்வியையும் கொண்டாடும் வழிபடும் சிறப்பு நாள்.

சிறப்பு பூஜை

கல்விக்கு அதிபதியாக இருப்பவர் சரஸ்வதி என்று நம்பப்படுகிறது. விஜய தசமி நாளில்  சரஸ்வதியை வழிபட்டு முதன்முதலில் படிப்பை தொடங்கும் ‘வித்யாரம்பம்’ நிகழ்வுகள் நடைபெறும். முந்தைய நாள் ஆயுத பூஜை. ‘செய்யும் தொழிலே தெய்வம்’ என்ற சொல்லாடல் இருக்கிறது இல்லையா. ஆம். தொன்மையான விசயங்களில் ஒன்று தொழில் செய்வதற்கு, உயிர் வாழ்வதற்கு ஆதாரமாக இருக்கும் ஆயுதங்களை பூஜித்து வழிபடுவது. இது பழங்காலத்தில் இருந்தே வழக்கமாக உள்ளது. 

சிறப்பு பூஜைக்கு நல்ல நேரம் 

23-ம் தேதி திங்கள்கிழமையும் மறுநாள் (24.10.2023) விஜய தசமியும் கொண்டாடப்படுகிறது. 23-ம் தேதி அன்று காலை 9 மணி முதல் 10.30 மணி வரையிலும் மதியம் 12க்கு மேல் 1.30 க்குள் பூஜை செய்ய நல்ல நேரம் என ஜோதிட நிபுணர்கள் சொல்கின்றனர். 

மாலையில் 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் பூஜை செய்யலாம். அதனை தொடர்ந்து இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை பூஜை செய்து இறைவனை வணங்க நல்ல நேரம் ஆகும்.ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவிக்கும், பார்வதி தேவிக்கும், லக்‌ஷ்மி தேவிக்கும் தான் முக்கியத்துவம்.

 இந்தியா முழுவதும் நவராத்திரியின் ஒன்பது நாட்களில், துர்கா தேவியின் ஒன்பது அவதாரங்கள் வழிபடுவதைச் முதன்மைப்படுத்துகிறது. தசரா அன்று ராவணனை ராமர் வென்றதைக் கொண்டாடுவதன் மூலம் முடிவடைகிறது. மறுபுறம், துர்கா தேவி அரக்கன் மகிஷாசுரனை வென்றதை, துர்கா பூஜையாக  கொண்டாடப்படுகிறது. துர்கா தேவியின் முதல் அவதாரமான ஷைல்புத்ரியை வழிபடுவதன் மூலம், நவராத்திரி தொடங்குகிறது, அதே சமயம் துர்கா மற்றும் மகிஷாசுரனுக்கு இடையே போர் தொடங்கிய நாளான ,மகாளயபட்சம் அன்று துர்கா பூஜை தொடங்குகிறது.

தசரா அன்று ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பதன் மூலம் நவராத்திரி கொண்டாட்டம் முடிவடையும். துர்கா பூஜை சிந்தூர் விளையாட்டுடன் முடிவடைகிறது. அங்கு திருமணமான பெண்கள் சிலைகளை மூழ்கடிப்பதற்கு முன்பு, ஒருவருக்கொருவர் சிந்தூர் என்று சொல்லப்படும், குங்குமத்தைக் கொண்டு விளையாடுகிறார்கள். நவராத்திரி கொண்டாட்டத்தின் போது, ​​துர்கா தேவியின் பக்தர்கள் ஒன்பது நாட்களுக்கு இறைச்சி, முட்டை, வெங்காயம் மற்றும் பூண்டு போன்ற உணவுகளை சாப்பிடாமல் பக்தியுடன் விரதம் இருக்கிறார்கள். 

வழிபடும் முறை

பண்டிகை நாளில் வீட்டை நன்றாக சுத்தம் செய்து அலங்கரிக்க வேண்டும். ஆயுத பூஜையன்று நம் தொழிலுக்கான ஆயுதங்கள், நாம் அன்றாட வாழ்வை எதிர்கொள்ள அவசியமாக இருக்கும் கருவிகளையும்,  கல்விக்கான ஆயுதங்களை அன்னையின் முன் வைக்க வேண்டும். மஞ்சள் மற்றும் சந்தனம் கலந்து அவற்றின் பொட்டு வைத்து அதன் மீது குங்குமம் வைக்க வேண்டும். மாணவர்கள் தங்கள் புத்தகங்களில் படிப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களில் திலகமிடுவது பரிந்துரைக்கப்படுகிறது.  துர்க்கை அன்னை முன் எல்லாவற்றையும் படைத்து விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும். நவராத்திரியின் முதல் 3 நாட்கள் துர்க்கை, அடுத்த 3 நாட்கள் லட்சுமி, கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை முதன்மைபடுத்தி வழிபடுகிறோம். ஆனால் ஆயுத பூஜையன்று சரஸ்வதி தேவி, பார்வதி தேவி, லக்‌ஷ்மி தேவி, ஆகிய மூவருக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நவராத்திரி நாள்களில் விரதம் இருக்க முடியாமல் போனால், இந்த இரண்டு நாள்கள் மட்டும் விரதம் இருந்தாலும் நன்மை கிட்டும் என்று சொல்லப்படுகிறது. 

வீடுகளில் விளக்கேற்றி விரதம் இருந்து வழிபட்டால் நினைத்தவைகள் நடக்கும் என்று கூறப்படுகிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget