இதுவல்லவா அன்பு! இணையத்தில் வைரலாகும் ஹஸ்கி நாய்க்குட்டி வீடியோ!
இணையக்கடையை விரித்தால் விதவிதமான வீடியோக்கள் நம் டைம்லைனில் வந்துவிழும். அப்படி வந்துவிழுந்த வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
இணையக்கடையை விரித்தால் விதவிதமான வீடியோக்கள் நம் டைம்லைனில் வந்துவிழும். அப்படி வந்துவிழுந்த வீடியோ ஒன்று இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.
ஒரு சின்னஞ்சிறு சிறுவனும் அவனுடைய செல்ல நாய்க்கும் இடையேயான பாசத்தின் சாட்சி அந்த வீடியோ. ஹஸ்கி வகை நாய்க்குட்டி அது. அதன் அருகில் சிறுவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது சிறுவனை யாரோ தூக்கத்தில் இருந்து எழுப்ப முயல்கிறார்கள். அநேகமாக சிறுவனின் தந்தையாக இருக்க வேண்டும். சிறுவனின் வயிற்றில் கையை வைத்து அந்த நபர் பார்க்கர், பார்க்கர் (சிறுவனின் பெயர்) என்று கூறி எழுப்ப முயன்றால் அந்த நாய் தனது கையைக் கொண்டு தட்டிவிடுகிறது.அந்த ஹஸ்கி ரக நாய்க்குட்டியின் பெயர் மில்பெர்ட். ஒவ்வொரு முறை சிறுவனை எழுப்ப முயலும் போது மில்பெர்ட் அதையே செய்கிறது. பின்னர் சிறுவன் துயில் கலைந்து எழுகிறான். எழுந்தவுடன் அவன் தேடுவது ஹஸ்கி நாய்க்குட்டியை தான். அதுவும் சிறுவனின் முகத்தில் தனது நாவால் நக்கி அன்பை வெளிப்படுத்துகிறது. இருவருக்கும் எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு. அன்பைத் தவிர மில்பெர்ட் நாய்க்குட்டிக்கும் எதுவும் தெரியாது, சிறுவனுக்கும் எதுவும் தெரியாது.
milperthusky என்ற இன்ஸ்டாகிராம் புரஃபைல் சென்று பார்த்தால் பார்க்கரும், மில்பெர்டும் சிறுவயதில் இருந்து பகிர்ந்து கொண்ட அன்பின் வெளிப்பாடு வீடியோக்கள் உள்ளன. நிச்சயமாக மனதுக்கு இதமாக இருக்கும்.
மில்பெர்ட் ஹஸ்கியைப் போலவே மீகா தி ஹஸ்கி என்ற ஹஸ்கி வகை நாயும் இணையத்தில் மிகவும் பிரபலம். அந்த நாய்க்குட்டி பேசுவதுபோலவே செய்யும் அலப்பறைகளைக் காண்பதற்காக இணையத்திற்கு வருபவர்களும் ஏராளம்.
வீடியோவைக் காண:
View this post on Instagram