லேப்டாப் பயன்படுத்துபவர்களா நீங்கள்? பாதுகாப்பாக வைத்திருக்க முதல்ல இத ஃபாலோ பண்ணுங்க!
கொரோனா தொற்றின் காரணமாக பலர் வீடுகளில் இருந்து பணியாற்றுவதும், ஆன்லைன் வகுப்புகளுக்கும் பெரும்பாலும் லேப்டாப்பை பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர்.
லேப்டாப்பை சரியான நேரத்தில் சார்ஜ் செய்வது, மென்பொருளை முறையாக கையாள்வது போன்ற வழிமுறைகளைப் பின்பற்றினாலே பாதுகாப்பாக வைத்துக்கொள்ள முடியும்.
லேப்டாக்களின் பயன்பாடு சில ஆண்டுகளுக்கு முன்பாக அரிதாக இருந்தது. ஆனால் இன்றைக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஒன்றிரண்டு லேப்டாக்கள் உள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றின் காரணமாக பலர் வீடுகளில் இருந்து பணியாற்றுவதும், ஆன்லைன் வகுப்புகளுக்கும் பெரும்பாலும் லேப்டாப்பைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். எனவே உங்களது லேப்டாக்களைப் பத்திரமாக பார்த்துக்கொண்டாலே எவ்வித இடையூறும் இல்லாமல் நாம் பணியாற்றலாம். இதோ உங்களது லேப்டாக்களை முறையாக பயன்படுத்துவதற்கான சில டிப்ஸ்கள் குறித்து இங்கு தெரிந்துக்கொள்வோம்.
லேப்டாக்களை முறையாக கையாளும் முறை:
லேப்டாப் திரை ரெம்ப சென்சிடிவ் என்பதால் எளிதில் உடையக்கூடியது. எனவே அதில் கீறல் எதுவும் விழாத அளவிற்கு கவனமாகப் பயன்படுத்த வேண்டும். ஒரு சிலர் லேப்டாப் திரையை வேகமாக மூடும் போது திரையில் உராய்வு ஏற்படும். எனவே கவனமாக கையாள வேண்டும். அதுபோல மேசையில் வைத்து இழுப்பது போன்றவற்றை முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
லேப்டாப்பை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இல்லாவிடில் தூசி அதிகளவில் சேர்ந்து லேப்டாப்பில் பாதிப்பு ஏற்படுத்தும். எனவே லேப்டாப் கிளீனிங் கிட் வாங்க முடியவில்லை என்றாலும், வெள்ளைத்துணி கொண்டு தூசி ஏற்படாதவறு பாதுகாத்துக்கொள்ள வேண்டும். குறிப்பாக கீபோர்டு இடுக்கில் உள்ள எந்த பொருளும் சேராதவாறு அவ்வப்போது சுத்தம் செய்யும் வழக்கத்தை நீங்கள் நிச்சயம் மேற்கொள்ள வேண்டும்.
பொதுவாக வீட்டிலிருந்து லேப்டாப்பில் பணிபுரியும் ஒவ்வொருவரும், தூக்கம் வருவதைத் தவிர்க்கும் விதமாக நொறுக்குத்தீனி சாப்பிடும் பழக்கத்தைக்கொண்டிருப்பார்கள். குறிப்பாக சாப்பிட்டுக்கொண்டே பணியாற்றும் போது சாப்பிடும் பொருள்கள் கீபோர்டு இடுக்கில் சென்று விடுவதோடு நம்மால் டைப் செய்ய முடியாத அளவிற்கு பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே லேப்டாப்பை பயன்படுத்திக்கொண்டு சாப்பிட்டு முடித்ததும் அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும்.
மென்பொருள் கையாள்தல்:
முக்கியமாக லேப்டாப் பயன்படுத்தி பணியாற்றும் ஒவ்வொருவரும், வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக ஆன்டிவைரஸ்களை வைத்திருக்க வேண்டும்.
உங்களது லேப்டாப்பில் உள்ள தேவையற்ற டாக்குமென்ட்ஸ், புகைப்படங்கள் போன்றவற்றை டெலிட் செய்துக்கொள்ள வேண்டும்.
இதோடு அப்டேட்டுகளுக்கு ஏற்றவாறு லேப்டாப் மற்றும் கணினியில் ஓ.எஸ் ஆகியவற்றை புதுப்பிக்க வேண்டும். ஒருவேளை வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக நீக்கிவிடவேண்டும்.
மேலும் உங்களது வேலைப் பயன்பாட்டிற்கு ஏற்றவாறு உங்களது கணினி அல்லது லேப்டாப்பின் சேமிப்புத் திறனை தொடர்ந்து நீங்கள் அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். ரேம் அதிகமாக இருக்கும் பட்சத்தில் கணினியின் செயல்திறன் அதிகமாக இருக்கும்.
மற்றொரு முக்கியமான விஷயம் சார்ஜிங்.. மணிக்கணக்கில் நீங்கள் லேப்டாப்பை சார்ஜ் செய்கிறீர்கள் என்றால் விரைவில் உங்களது பேட்டரி செயலிந்துவிடும். எனவே சார்ஜ் முழுமையாக இறங்கிய பின்பாக அல்லது 15 சதவீதம் வரும் போது சார்ஜ் செய்ய வேண்டும். மேலும் முழுமையாக சார்ஜ் ஏறியவுடன் அணைக்க வேண்டும். இதோடு உங்களது சார்ஜ் கேபிள் சரியாக உள்ளதா? என அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.
குறிப்பாக மடிக்கணினியை நேரடி சூரிய ஒளியில் அல்லது சூடானப் பகுதியில் வைக்கக்கூடாது. சாதாரண வெப்பநிலையில் அல்லது குளிர்ச்சியான இடத்தில் வைக்கவேண்டும். இதுப்போன்ற சில வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினாலே உங்களது லேப்டாக்களில் எவ்வித பிரச்சனை ஏற்படாமல் தவிர்க்க முடியும். இதனால் உங்களது பணியில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.