கழிவறையில் செல்போன் பயன்படுத்துபவரா? உங்களை தேடி வரும் ஆபத்துகள்!
செல்போன் பயன்படுத்துவதால் இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் கழிவறையில் போன் பயன்படுத்துவதால் தொற்றுநோய்கள் வருவதற்கு கூட காரணமாக அமைத்து விடுகிறது.
ஸ்மார்ட் போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். தூங்குவதற்கு முன் கடைசியாக பார்ப்பது, தூங்கி எழுந்து முதலில் பார்ப்பது ஸ்மார்ட்போன் தான். சாப்பிடும் போது, நடக்கும் போது , வேலை செய்யும் போது, ஏன் கழிவறைக்கு செல்லும் போது கூட ஸ்மார்ட் போன் பயன்படுத்தி கொண்டு இருக்கின்றனர். இருக்கும் இரண்டு கைகளுடன் மூன்றாவது கையாக போன் மாறி விட்டது. ஒரு நாளைக்கு பாதி நேரம் ஸ்மார்ட் போன் உடன் தான் இருக்கின்றனர்.
சிலர் வேலை காரணமாக அதிகமாக போன் பயன்படுத்துகின்றனர். சிலர் நேரத்தை பொழுபோக்குவதற்காக ஸ்மார்ட் போன் பயன்படுத்துகின்றனர். சமூக வலைதள பயன்பாடு அதிகமாகி கொண்டு இருக்கிறது. இப்படி தொடர்ந்து போன் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டு இருக்கிறது. தூக்கமின்மை, குழந்தைகள் போன் பயன்படுத்துவதால் வளர்ச்சி பாதிப்பு, பிறந்தது முதல் செல்போன் பயன்படுத்துவதால் அவர்கள் படிப்பில் பின் தங்கி இருந்தல் போன்ற பிரச்சனைகள் வருகிறது. கழுத்துவலி, மணிக்கட்டு வலி, முழங்கை வலி போன்ற பிரச்சனைகள் வருகிறது. எதையும் நினைவில் வைத்து கொள்ளாமல், ஒரு சின்ன விசயத்திற்கு கூட போன் சார்ந்து இருக்க வேண்டியதாக இருக்கிறது.
செல்போன் பயன்படுத்துவதால் இத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் கழிவறையில் போன் பயன்படுத்துவதால் தொற்றுநோய்கள் வருவதற்கு கூட காரணமாக அமைத்து விடுகிறது.
- சால்மோனெல்லா, இ கோலி பாக்டீரியா, போன்ற தொற்றுநோய்கள் பரவுவதற்கு காரணமாக அமைந்து விடுகிறது. இது அதிகமாக போன் மூலமாக பரவுகிறது..
- செல்போன் வைத்து கொண்டு நீண்ட நேரம் கழிவறையில் அமர்ந்து இருப்பதால், இது மூலம், வருவதற்கு காரணமாக அமைத்து விடும். நீண்ட நேரம் இருக்கையில் அமர்ந்து இருப்பது ஆசன வாயில், அழுத்தத்தை ஏற்படுத்தும். இந்த அழுத்தத்தால், மலசிக்கல் பிரச்சனை வரும். நாளடைவில் இது மூல நோயாக மாறும்.
- ஒரு பிரேக் இல்லாமல் தொடர்ந்து போன் பயன்படுத்துவது போன்று இருக்கும். வேலை இருந்தாலும், கழிவறையில் இருக்கும் போதாவது போன் பயன்படுத்தாமல் ஒரு பிரேக் எடுத்து கொள்ளுங்கள்.
- காலை எழுந்து போனுடன் கழிவறையில் , நீண்ட நேரம் அமர்ந்து இருந்தால், நேரம் விரயம் தான் ஆகும்.
- தவறுதலாக கழிவறையில் போன் விழுந்து விடும் அபாயம் இருக்கிறது.
இப்படி தொடர்ந்து செல்போன் பயன்படுத்த கூடாது. ஒரு நாளைக்கு ஒரு குறிப்பிட்ட நேரம் மட்டும் செல்போன் பயன்படுத்த வேண்டும் என்ற பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள். செல்போனில் மட்டும் தான் வேலை என்று இருந்தால் வேலை நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். அனைத்து நேரமும், செல்போன் வைத்து கொண்டு இருக்காதீர்கள்.