மேலும் அறிய

Red Banana | செவ்வாழை பழத்தில் இருக்கும் எண்ணற்ற பயன்கள்!

ரெட் பனானா என சொல்லப்படும், செவ்வாழை பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும், நோய்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கிறது. மேலும் இதை யாரெல்லாம் எடுத்து கொள்ளலாம், யாரெல்லாம் சாப்பிடகூடாது என தெரிந்து கொள்ளலாம்

பொதுவாக வாழைப்பழத்தில் பல வகைகள் இருக்கிறது. இன்று அதிக அளவில் விற்பனை செய்யப்படுவதும், மற்ற பழங்களை விட விலை அதிகமாக இருப்பதும், இதற்கு தான். இது பழங்களின் ராஜா எனும் சொல்லும் அளவிற்கு ஏராளமான நன்மைகள் இருக்கிறது. இது ரெட் பனானா எனவும் அழைக்கப்படுகிறது.  

இதில் கால்சியம், வைட்டமின் சி, சுண்ணாம்பு சத்து , இரும்பு சத்து , பீட்டா கரோட்டீன் (beta carotene) பொட்டாசியம், நார்ச்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துகள் நிறைந்து இருக்கிறது.

இது என்ன நோய்களை குணப்படுத்துகிறது என தெரிந்து கொள்ளலாம். இதில் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு சிறந்த மருந்தாக இருக்கும். மேலும், பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும், இது உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றும்.

இதில் கால்சியம்சத்து நிறைந்து இருப்பதால், எலும்பு சம்பந்த பட்ட நோய்கள் வராமல் தடுக்கும். மேலும், கர்ப்பிணிகள் தினம் ஒரு பழம் எடுத்து கொள்வதால், தாய்க்கும், சேய்க்கும் தேவையான ஊட்டச்சத்துகள்  கிடைக்கும்.

இதில் பீட்டா கரோட்டின் நிறைந்து இருப்பதால், இது கண் நோய்களை குணப்படுத்தும்.

Red Banana | செவ்வாழை பழத்தில் இருக்கும் எண்ணற்ற பயன்கள்!

மேலும் தொற்று நோய்கள் வராமல் தடுக்கும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்களுக்கு இந்த செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும். ஒரு  முறை சிறுநீரக கல் பிரச்னை வந்தால் மீண்டும் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதனால் அடுத்தடுத்து சிறுநீரக கல் பிரச்சனை வராமல் தடுப்பதற்கு இந்த செவ்வாழை உதவும்.

Red Banana | செவ்வாழை பழத்தில் இருக்கும் எண்ணற்ற பயன்கள்!

வயதான காலத்தில் வரும் நரம்பு தளர்ச்சி பிரச்சனை வராமல் தடுக்கும். அனைத்து வயதினரும், தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடலாம்.

கல்லீரல் வீக்கம், (liver inflammation) மற்றும் சிறுநீர தொற்று (Urinary Tract Infection ) போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

பொதுவாக அனைத்து வாழை பழங்களிலும், ஸ்டார்ச் எனும் மாவுச்சத்து அதிகம் இருக்கிறது. இதனால்,வாழை பழங்கள், அதிக கலோரி கொண்டது. தீவிர உடல் பயிற்சியில்  ஈடுபடுபவர்கள்,மற்றும் மாரத்தான் போட்டிகளில் பங்கு கொள்பவர்கள் அனைவரும், வாழைப்பழத்தை எடுத்து கொள்வார்கள், ஒரு சிறிய துண்டு எடுத்து கொண்டாலும் அதிக ஆற்றலை தரும். அதனால் நீண்ட தூரம் ஓடுவதற்கு உதவியாக இருக்கும். மேலும், இதில் பொட்டாசியம் சத்து நிறைந்து இருப்பதால், தசைகள் வலுவிழக்காமல் இருக்க உதவியாக இருக்கும்.

இதை யாரெல்லாம் சாப்பிட கூடாது என்றால், அதிக கலோரி இருப்பதால், உடல் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்கள் இதை எடுத்து கொள்ள கூடாது. வாரத்திற்கு  1 அல்லது 2 மட்டும் எடுத்து கொள்வது, மற்ற ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவியாக இருக்கும். மேலும், நீரிழிவு நோயாளிகள் இதை எடுத்து கொள்ள கூடாது. இரத்தத்தில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருந்தால் மட்டும் எடுத்து கொள்ளலாம். அதுவும் மருத்துவ ஆலோசனை பெற்று  பின்னர் எடுத்து கொள்ளவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kongu Eswaran on Aadhav Arjuna : ’’ஜாக்கிரதை திருமா!ஆதவ்-ஆல் விசிக உடையும்’’எச்சரிக்கும்  ஈஸ்வரன்Ravichandran Ashwin on CSK : ’’வாழ்க்கை ஒரு வட்டம் மீண்டும் மஞ்சள் ஜெர்சி!’’உணர்ச்சிவசப்பட்ட அஸ்வின்IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL Rahul

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
ஜெயராஜ்-பென்னிக்ஸ் மரணத்தில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த ஸ்டாலின்! இப்போ? - கொதித்தெழும் இபிஎஸ்
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
நாளை பள்ளி, கல்லூரிகளில் இது கட்டாயம்: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு- என்ன தெரியுமா?
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிரப்போகிறது சட்டப்பேரவை” டிசம்பர் 9ஆம் தேதி தொடங்குகிறது கூட்டம்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”அதிமுக கூட்டத்தில் அடிதடி” முன்னாள் அமைச்சர்கள் முன்னிலையிலேயே மோதல்..!
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”ராமதாஸுக்கு வேறு வேலை இல்லை; பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை” - கடுப்பான முதல்வர் ஸ்டாலின் 
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
”தலைமைக்கு நீங்க ஆலோசனை சொல்லாதீங்க” அதிமுக கூட்டத்தில் கடுப்பான நத்தம் விஸ்வநாதன்..!
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
TNPSC: தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை- ’’இதையெல்லாம் செய்தால் விடைத்தாள் செல்லாதது ஆக்கப்படும்’’
Embed widget