Chamomile Oil : சரும பராமரிப்பு முதல் முடி ஆரோக்கியம் வரை..கெமொமில் எண்ணெயின் மேஜிக்..
Chamomile Oil : கெமொமில் எண்ணெயின் நம்மைகள் என்னென்ன?
கெமொமில் மலர்களில் ஏராளமான நன்மைகள் உண்டு. அதிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயிலும் அப்படியே! இது சமையல் செய்வதற்கு உகந்தது என்று சொல்லப்படுகிறது. மன அழுத்தத்தை குறைக்கும் கெமோமில் தேநீர் பற்றி கேள்விப்பட்டிருப்போம். எண்ணெயும் இதேபோன்ற நன்மைகளைக் கொண்டுள்ளது. முடி, சரும பராமரிப்பு என நீள்கிறது இதன் நன்மைகள். கெமோமில் எண்ணெய் இரண்டு வகைகளில் கிடைக்கிறது; ஜெர்மன் மற்றும் ரோமன். ரோமானிய எண்ணெய் ஆன்டி-இன்ஃபல்மேட்ரி ஆகவும், ஜெர்மன் வகை ஆன்டிசெப்டிக் பண்புகளுக்காவும் அறியப்படுகிறது.
கெமோமில் எண்ணெயின் நன்மைகள்:
சரும பராமரிப்பு:
முகப்பரு மற்றும் எக்ஸிமாவை (Eczema) குறைக்கிறது. இதில் உள்ள ஆன்டி-இன்ஃபல்மேட்ரி பண்புகள் முகப்பரு மற்றும் அதனால் ஏற்படும் தழும்புகளை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும், படிப்படியாக முகப்பரு இருந்ததற்கான அடையாளங்களை குறைக்கும்.
சருமத்தின் ஈரப்பதத்தை தக்கவைக்கிறது:
எண்ணெய் சருமத்தை ஈரப்பதமாக்குவதிலும், புதிய செல்களின் வளர்ச்சிக்கும் இது உதவுகிறது. சருமத்தை புத்துணர்ச்சியாக உணர வைக்கும். மேலும், சருமத்தில் வயதான தோற்றம் ஏற்படாமல் பாதுகாக்கும். இளமையான சருமம் வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தாலாம்.
கருவளையங்களுக்கு டாட்டா:
கெமோமில் எண்ணெயை அன்றாடம் பயன்படுத்துவதன் மூலம், சருமத்தின் நிறம் சீராக இருக்கும். ’even-looking skin tone’ பெற உதவுகிறது. கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களை குறைக்க இதை பயன்படுத்தலாம்.
ஆரோக்கியமான முடி வளர்ச்சி:
பொடுகுத் தொல்லை நீங்க...
கெமோமில் எண்ணெய் இயற்கையிலேயே பொடுகு பிரச்சினைக்கு தீர்வினை கொண்டிருக்கிறது. இந்த எண்ணெயை பயன்படுத்தினால் பொடுகுத் தொல்லையை பெருமளவு குறைக்கிறது. இது பேன் பிரச்சனையையும் தீர்க்கிறது. இது முடியின் வேர்க்கால்களை ஹைட்ரேட் செய்து, உச்சந்தலையில் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்குகிறது. தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து இதை பயன்படுத்தாம். இதனை கொண்டு தலைக்கு ஆயில் மசாஜ் செய்தால் ரிலாக்ஸாக உணரலாம்.
இது முடியை மென்மையாக்குகிறது. முடிக்கு சிறந்த மாய்சரைசராக பயன்படுகிறது. முடியை பளபளப்பாக மாற்றுகிறது. இதை தேங்காய் எண்ணெய்க்கு பதிலாகவும் இதை பயன்படுத்தலாம். பொலிவற்ற, சேதமடைந்த மற்றும் உயிரற்ற முடி இருந்தால் கெமோமில் எண்ணெய் அதை சரி செய்துவிடும்.
மாசு, தூசி போன்ற ஏராளமான சுற்றுச்சூழல் நிலைமைகள் காரணமாக முடி வெடிப்பு ஏற்படுகிறது. இழந்த பிரகாசத்தை மீண்டும் பெற, நீங்கள் கெமோமில் எண்ணெயைப் பயன்படுத்த தொடங்காலாம். ஹேர் வாஷ் செய்த பிறகு ஹேர் சீரம் ஆகவும் பயன்படுத்தலாம்.
ஹேர் கலரிங்:
முடிக்கு கலரிங் செயதால், அதாவது இயற்கையான முறையில், மருதாணி/ ஹென்னா பயன்படுத்தினால், அந்த பேஸ்டில் சில துளிகள் கெமொமில் எண்ணெயைச் சேர்க்கவும். இதனால் முடி பளபளப்புடனும் நல்ல நிறத்துடனும் இருக்கும்.
வலி நிவாரணி:
கெமோமில் எண்ணெய் ஆன்டிஸ்செப்டிக் தன்மை காரணமாக ‘arthritis pain’ க்கு சிறந்த நிவாரணியாக இருக்கும். பாதிக்கப்பட்ட பகுதியில் சிறிது எண்ணெயைப் பயன்படுத்தினால், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். இதனால் வலியும் குறைந்து வீக்கமும் குறையும். ஒற்றைத் தலைவலி மற்றும் சைனஸ் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி வலி நிவாரணம் பெற இதனை பயன்படுத்தலாம்..
மன அழுத்தம் நீங்க:
கெமோமில் தேநீர் பெரும்பாலும் மன அழுத்தத்தை குறைக்கும் மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவுகிறது. இது புத்துணர்ச்சியூட்டும் குணாதிசயங்களைக் கொண்டுள்ளது, கெமோமில் எண்ணெய் மசாஜ்களில் மனம் மற்றும் உடல் வலியை குறைக்கிறது.