மேலும் அறிய

தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் எப்போது? மெத்தனம் ஏன்? அன்புமணி கேள்வி!

நிரந்தர செவிலியர்களுக்கு மாதம் ரூ.62 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் நிலையில்,  தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது- அன்புமணி.

விடியல் அரசா... சுரண்டல் அரசா?  உச்சநீதிமன்ற கண்டனத்திற்குப் பிறகாவது தொகுப்பூதிய செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்று பா.ம.க.  தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:


’’தமிழ்நாட்டில்  தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண்டுகிறது.  செவிலியர்களை அளவுக்கு அதிகமாக உழைப்புச் சுரண்டல் செய்கிறீகள். ஒப்பந்த  செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள்” என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சமூகநீதி பேசும் திமுக அரசு  செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக  வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழக மருத்துவத்துறையில் பத்தாண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதை செயல்படுத்த வேண்டிய அரசு,  அதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போதுதான்  உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

8 ஆயிரம் செவிலியர்கள் நிலை

செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக  உச்சநீதிமன்றம் கூறியிருப்பது முற்றிலும் சரியானது.  2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்  போட்டித்தேர்வு நடத்தித்தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8 ஆயிரம் செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை.

நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத்தான் இவர்களும் செய்கின்றனர். ஆனால், நிரந்தர செவிலியர்களுக்கு மாதம் ரூ.62 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் நிலையில்,  தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களை விட தொகுப்பூதிய செவிலியர்கள் குறைந்த பணியையே செய்வதாகக் கூறி அவர்களின் ஊதியத்தை உயர்த்தவும், பணி நிலைப்பு வழங்கவும் திமுக அரசு மறுத்து வந்தது.

பின்னர் சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் பார்த்திபன், பாரதிதாசன் ஆகியோர் தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை ஆய்வு செய்து, அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என அறிக்கை அளித்த பிறகுதான் அவர்களுக்கு சம ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டது. ஆனால், அதைக் கூட செய்ய திமுக அரசு மறுக்கிறது.

சமூகநீதி சமூகநீதி என்று பேசும் திமுக அரசு, செயல்பாட்டில் அதைக் கடைபிடிப்பதில்லை.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 33,987 பேருக்கு மருத்துவத் துறையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அத்துறையின் அமைச்சர் கூறி வருகிறார். ஆனால், அவர்களில் 6,977 பேர் மட்டும்தான்  மருத்துவத் தேர்வாணையம் மூலம்  தேர்ந்தெடுக்கப்பட நிரந்தரப் பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள சுமார் 27 ஆயிரம் பேரும் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர். இதுவா சமூகநீதி?

செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு அதன் தவறை ஒத்துக் கொண்டு அவர்களை பணி நிலைப்பு  அல்லது  சம வேலைக்கு  சம ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சமூகநீதி என்பதற்கான பொருள் திமுக அரசுக்கு தெரியாது என்பதால் தான் அதைச் செய்யாமல் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்துகிறது. இப்போதாவது தமது உழைப்புச் சுரண்டலையும்,  சமூக அநீதியையும் ஒப்புக் கொண்டு,  தொகுப்பூதிய  செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும்.

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு: 37 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 
அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைவாய்ப்பு: 37 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு! 
TN Govt Job: 4,724 செவிலியர் காலிப்பணியிடங்கள் - தகுதி, வயது வரம்பு, ஊதியம் - முழு விவரங்கள் இதோ
4,724 செவிலியர் காலிப்பணியிடங்கள் - தகுதி, வயது வரம்பு, ஊதியம் - முழு விவரங்கள் இதோ
SBI வங்கியில் 12,000 காலி பணியிடங்கள்? வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அப்டேட்
SBI வங்கியில் 12,000 காலி பணியிடங்கள்? வேலை தேடுபவர்களுக்கு முக்கிய அப்டேட்
SECI Recruitment: மத்திய அரசின் நவரத்னா நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
SECI Recruitment: மத்திய அரசின் நவரத்னா நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Power Cuts Electricity Purchase : மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
மின்வெட்டுக்கு குட்பை.! 2000 மெகாவாட் மின்சாரம் கொள்முதல்- செம பிளான் போட்ட சிஎம் விஜய்
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
நடிகர் அஜித்குமார் கார் ரேஸ்.! சிஎம் விஜய் தொடங்கி வைத்தது ஏன்.? இது தான் காரணம்- தமிழக அரசு அறிக்கை
Vanni Arasu: ”ஆ.ராசா = எச்.ராஜா” .. அமைச்சர் பிறப்பு குறித்து சர்ச்சை பேச்சு.. வெளுத்து வாங்கிய வன்னி அரசு!
Vanni Arasu: ”ஆ.ராசா = எச்.ராஜா” .. அமைச்சர் பிறப்பு குறித்து சர்ச்சை பேச்சு.. வெளுத்து வாங்கிய வன்னி அரசு!
Rasi Palan Today (13-09-2026): இன்று கடகத்துக்கு செம லாபம்.. உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
Rasi Palan Today (13-09-2026): இன்று கடகத்துக்கு செம லாபம்.. உங்களுக்கு நல்ல நாளா? - 12 ராசிகளுக்குமான பலன்கள் இதோ!
CM Vijay Ajith London Video: நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
நண்பா....! ஓடிச்சென்று அஜித்தை கட்டித்தழுவிய CM விஜய்; லண்டனில் ‘தல‘, ‘தளபதி‘ உற்சாக சந்திப்பு.!
CM Vijay London Tour : ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை கொண்டு வருவாரா விஜய்? – லிஸ்ட் போட்டு TRB ராஜா கேள்வி
ஸ்டிக்கர் ஒட்டாமல் புதிய முதலீடுகளை கொண்டு வருவாரா விஜய்? – லிஸ்ட் போட்டு TRB ராஜா கேள்வி
September 17 Holiday : செப்டம்பர் 17-ல் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- வெளியான அறிவிப்பு
செப்டம்பர் 17-ல் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்- வெளியான அறிவிப்பு
Modi Xi Jinping Meet: டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
டெல்லியில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஷி ஜின்பிங் முக்கிய சந்திப்பு; விவாதித்த விஷயங்கள் என்ன.?
Embed widget