IIT -இல் காலியிடங்களுக்கான அறிவிப்பு.. தகுதியுடையவர்கள் இன்றைக்குள் அப்ளை பண்ணுங்க..!
விண்ணப்பத்தாரர்களின் கல்வித்தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் கோரக்பூர் ஐஐடியில் பணிபுரிவதற்கு நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு சம்பளம் ரூ. 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கோரக்பூர் ஐஐடியில் ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், ஆர்வமும் விருப்பமும் உள்ள நபர்கள் நாளைக்குள் (செப்.24) விண்ணப்பித்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அரசினால் கடந்த 1951-ஆம் ஆண்டு இந்திய தொழில்நுட்பக்கழகம் கோரக்பூர் தொடங்கப்பட்டது. மத்திய அரசினால் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றாக உள்ளது. மேலும் தேசிய இன்றியமையா தொழில்நுட்பக் கழகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில் பொறியியல் மற்றும் நுட்பக்கல்வியில் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக உயர்கல்வி நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள பதினைந்து தன்னாட்சி வழங்கப்பட்ட தொழில்நுட்ப கழகங்களில் முதலாவதாக இந்த கோரக்பூர் ஐஐடியில் நிறுவப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படி பல்வேறு சிறப்புகளைக்கொண்டு செயல்பட்டுவரும் இக்கல்லூரிகளில் அவ்வப்போது பல்வேறு வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியாகக்கூடும். இந்த வரிசையில் தற்போது கோரக்பூர் ஐஐடியில் ஆராய்ச்சியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இப்பணிக்கு யார் விண்ணப்பிக்கலாம்? என்னென்ன தகுதிகள் என்பது குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.
கோரக்பூர் ஐஐடியில் ஆராய்ச்சியாளர் பணிக்கான தகுதிகள்:
கல்வித்தகுதி: பொறியியல், மருத்துவத்துறையில் ஏதாவதொரு ஒரு பிரிவில் முதல் வகுப்பில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். எம்.பி பட்டம் இப்பணியில் சேர்வதற்கு ஒரு தகுதியாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட தகுதியும், ஐஐடியில் பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வம் உள்ள நபர்கள், www.iitkgp.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மூலம் நாளைக்குள் அதாவது செப்டம்பர் 24-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக்கட்டணம்: இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு விண்ணப்பக்கட்டணம் ரூபாய் 100 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக பெண்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட அறிவுரைகளின்படி விண்ணப்பிக்கும் நபர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் கோரக்பூர் ஐஐடியில் பணிபுரிவதற்கு நியமனம் செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு சம்பளம் ரூ. 60 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே ஐஐடியில் பணிபுரிய ஆசைப்படும் இளைஞர்கள் உடனடியாக நாளைக்குள் இப்பணிக்கு விண்ணப்பித்து பயன்பெற்றுக்கொள்ளுமாறு வேலைவாய்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.