VOC Port Trust Recruitment 2023: எம்.பி.பி.எஸ். படித்தவரா? ரூ.1 லட்சம் மாத ஊதியம்; தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை - முழு விவரம்!
VOC Port Trust Recruitment 2023: தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தூத்துக்குடியில் உள்ள வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் (VOC Port Trust ) அலுவலகத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist)
மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary)
வயது வரம்பு:
இந்தப் பணிகளுக்கு விண்ணபிக்க 42 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
கல்வி மற்றும் பிற தகுதிகள்
- இணை முதன்மை மருத்துவர் MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுகலை பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
- மூத்த உதவி செயலாளர் பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்கும் துறைகளில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.
- Absorption / Deputation முறையில் இந்தப் பணிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
பணி காலம்:
இந்த பணிக்கு தேர்வு செய்யப்படுவர் இரண்டு ஆண்டுகால ஒப்பந்தம் அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்படுவர். தேவையெனில் பணிகாலம் நீட்டிக்கப்படும்.
ஊதிய விவரம்:
அரசு விதிகளின்படி ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.60,000 முதல் 1,80,000 வரை இதற்கு ஆரம்ப கால ஊதியமாக வழங்கப்படும். (ரூ.20,600-46,500 prerevised / ரூ. 10750-16750 pre-pre-revised))
எப்படி தேர்வு செய்யப்படுவர்:
இதற்கு கல்வித் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்,
விண்ணப்பிப்பது எப்படி?
இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். https://www.vocport.gov.in/ - என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
கவனிக்க..
இந்த துறைமுகத்தில் பயிற்சித் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இணையதளத்தில் உள்ள விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
The Secretary,
V.O.Chidambaranar Port Authority,
Administrative Office Building,
Harbour Estate,
Tuticorin – 628 004.
இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு https://www.vocport.gov.in/applications.aspx - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.01.2024
இணை முதன்மை மருத்துவர் (Deputy Chief Medical Officer Specialist) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/DyCMO%20spl%2024-11-2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.
மூத்த உதவி செயலாளர் ( Senior Assistant Secretary) - https://www.vocport.gov.in/port/UserInterface/PDF/Filling%20up%20of%20the%20post%20SRAS%20absorption%20deputation.PDF - என்ற இணைப்பை க்ளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை காணலாம்.
பாரத ஸ்டேட் வங்கியில் 8,282 பணியிடங்கள்
பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள ஜூனியர் அசோசியேட்- Junior Associate (Customer Support & Sales) அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணி விவரம்
ஜூனியர் அசோசியேட் ( Junior Associate )
நாடு முழுவதும் உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைகளில் க்ளர்ரிக்கல் க்ரேட் நிலையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க அந்தந்த உள்ளூர் மொழியில் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
மொத்த பணியிடங்கள் - 8,282
குஜராத், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, லடாக், தமிழ்நாடு,புதுச்சேரி, தெலங்கானா, மேற்கு வங்காளம்,சிக்கிம்,. அசாக்ம், மிசோரம். திரிபுரா. பீகார், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள வங்கி கிளைகளில் இந்த வேலைவாய்ப்பின் மூலம் தகுதியான நபர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தமிழ்நாடு வட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் - 171
கல்வி மற்றும் தகுதிகள்
இதற்கு விண்ணப்பிக்க அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இருந்து ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கல்லூரி இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தெரிவு செய்யும் முறை:
இதற்கு முதல் நிலை தேர்வு, முதன்மை தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிப்பது எப்படி? - மேலும் வாசிக்க..