UPSC CDS: இந்திய ராணுவத்தின் முப்படைகளில் அதிகாரியாக வேண்டுமா? எப்படி விண்ணப்பிப்பது?
CDS Recruitment: இந்திய இராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிவதற்காக, UPSC சார்பில் நடத்தப்படும் CDS தேர்வுக்கு june 4 ஆம் தேதியே கடைசி நாளாகும்
Combined Defenced Service தேர்வானது இந்திய ராணுவத்தில் அதிகாரிகளாக பணிபுரிவதற்காக நடத்தப்படும் தேர்வு. இந்த தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் UPSC நடத்துகிறது. Iindian Military Academy, Indian Naval Academy, Indian Airforce Academy, Indian Airforce Academy, Officer Training Academy ஆகியவற்றில் சேர்வதற்காக இந்த தேர்வானது நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான தேதி:
மே மாதம் 15 ஆம் தேதி முதல் ஜூன் 4 ஆம் தேதி வரை
தேர்வு நடைபெறு நாள்:
செப்டம்பர் 1
தகுதி:
1. Iindian Military Academy,
19 வயது முதல் 24 வயது ( ஆண்கள் மட்டும் )
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
2. Indian Naval Academy,
19 வயது முதல் 24 வயது ( ஆண்கள் மட்டும் )
பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
3.Indian Airforce Academy
20 வயது முதல் 24 வயது ( ஆண்கள் மட்டும் )
பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும் ( 12 ஆம் வகுப்பில் இயற்பியல் மற்றும் கணிதம் பாடப்பிரிவில் படித்திருக்க வேண்டும் ) அல்லது பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
4.Officer Training Academy
19 வயது முதல் 25 வயது
( ஆண்கள் மற்றும் பெணகள் இருபாலரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் )
ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்
தேர்வு செய்யப்ப்டும் முறை
- எழுத்து தேர்வு
- SSB நேர்முகத் தேர்வு
- மருத்துவ சோதனை
கட்டணம்:
SC/ST/ பெண்கள் தவிர, அனைத்து பிரிவினருக்கும் CDS 2024 தேர்வு விண்ணப்பக் கட்டணம் ரூ. 200ஐ செலுத்த வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
Union Public Service Commission (upsconline.nic.in) என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
முதலில் OTR பதிவு செய்ய வேண்டும்,
அதற்கு, அடிப்படை தகவலான பெயர் , படிப்பு , மின்னஞ்சல், தொலைபேசி உள்ளிட்ட தகவலை பதிவு செய்ய வேண்டும். பின்னர் தொலைபேசி மற்றும் மின்னஞ்சலுக்கு OTR ஐடி மற்றும் கடவுச்சொல் வரும்.
இதை பயன்படுத்தி, மீண்டும் லாக் இன் செய்து, சிடிஎஸ் அகாடமி பயிற்சிகளில் சேர்வதற்கு, விண்ணப்பத்தில் கேட்கப்பட்ட தகவல்களை அளிக்க வேண்டும்
அதில் பெயர், பாலினம், தேசியம் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை நிரப்ப வேண்டும்.
படித்த பாடங்கள் மற்றும் படித்த நிறுவனங்கள் போன்ற கல்வித் தகுதிகளை அளிக்க வேண்டும்.
பின்னர் விருப்பமான அகாடமி மற்றும் கிளையைத் தேர்ந்தெடுக்கவும்.
கடைசி தேதி ஜூன் 4 என்பதால், விண்ணப்பத்தாரர்கள் காலம் தாழ்த்தாது உடனடியாக விண்ணப்பிக்கவும்.
Also Read: Chennai Jobs: இசை படிப்பில் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா? கலாஷேத்ரா பள்ளியில் வேலை - முழு விவரம்!