UIIC Recruitment 2024: டிகிரி முடித்தவரா? ரூ.88,000 ஊதியம்; அரசு காப்பீட்டு நிறுவனத்தில் வேலை - முழு விவரம்
UIIC Recruitment 2024: யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை காணலாம்.
மத்திய அரசு நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் காலியாக உள்ள 300 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்கு விண்ணப்பிக்க வரும் சனிக்கிழமை (ஜனவரி, 06, (2024) தேதி கடைசி தேதி.
பணி விவரம்
நிர்வாக அதிகாரி (Administrative Officer Scale 1)
மொத்த பணியிடங்கள் - 250
கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 10+2+3 என்ற முறையில் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு தொடக்க ஊதியமாக ரூ.88,000/- வழங்கப்படும்.
( ரூ.. 50925-2500(14)- ரூ.85925-2710(4)- ரூ.96765)
வயது வரம்பு விவரம்
இதற்கு விண்ணப்பிக்க 30.09.2023 -ன் படி 21 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை
எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகியவற்றின் அடிப்படையில் இதற்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்ப கட்டணம்
விண்ணப்பிப்பது எப்படி?
https://uiic.co.in/recruitment/details/15004 - - என்ற இணையதள முகவரி மூலம் தேவையான தகவல்களை பதிவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கிய தேதிகள்
இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://uiic.co.in/sites/default/files/uploads/recruitment/Recruitment%20of%20AO%20Scale%20I.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 23.01.2024
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் சப்- இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், ரயில்வே பாதுகாப்பு துறை, ரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ஆகிய பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பை ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
Sub-Inspectors (Exe.) - 250
Constables (Exe.) - 2000
இரயில்வே பாதுகாப்பு படை ( Railway Protection Force (RPF)) ,இரயில்வே பாதுகாப்பு சிறப்பு படை ( Railway Protection Special Force (RPSF)) இரண்டு பிரிவுகளில் தகுதியானவர்கள்
மொத்த பணியிடங்கள் - 2,250
கல்வித் தகுதி:
- உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) பணிக்கு அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- கான்ஸ்டபிள் பணிக்கு 10-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பள்ளியில் 10+12 -வது என்ற முறையில் படித்திருக்க வேண்டும்.
- அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு காலிப் பணியிடங்களில் 10 சதவீதமும், பெண்களுக்கு 15 சதவீதமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு
- சப்-இன்ஸ்பெக்டர் (எக்ஸியூடிவ்) பணிக்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.
- கான்ஸ்டபிள் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் 25 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது குறித்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தெரிவு செய்யும் முறை
இதற்கு விண்ணப்பித்தவர்கள் மூன்று தகுதித் தேர்வுகளின் அடிப்படையில் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். கம்யூட்டர் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
கம்யூட்டர் தகுதித் தேர்வு பாடத்திட்டம்
உடற்தகுதித் தேர்வு பாடத்திட்டம்
PET தேர்வு பாடத்திட்டம்
விண்ணப்ப கட்டணம், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு மையங்கள் உள்ளிட்ட தகவல்கள் குறித்த முழு விவரங்களை https://indianrailways.gov.in - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்