மேலும் அறிய

TNPSC Recruitment: ரூ.2 லட்சம் மாத ஊதியம்; டி.என்.பி.எஸ்.சி. வேலை! விண்ணப்பிக்க நாளையே கடைசி!

TNPSC Recruitment: தமிழ்நாடு அரசுப் பணி தேர்வாணையத்தின் வேலைவாய்ப்பு குறித்து முழு விவரத்தை இங்கே காணலாம்.

தமிழ்நாடு கருவூலங்கள் மற்றும் கணக்குப் பணிகள் மற்றும் வாரியங்கள் / நிறுவனங்களில் அடங்கிய ஒருங்கிணைந்த கணக்குப் பணிகள் பதவிகளுக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க  நாளையே (டிசம்பர்,8-ம் தேதி) கடைசி தேதி.

TNPSC Recruitment:  ரூ.2 லட்சம் மாத ஊதியம்; டி.என்.பி.எஸ்.சி. வேலை! விண்ணப்பிக்க நாளையே கடைசி!

பணி விவரம்

  • கணக்கு அலுவலர் நிலை - III
  • கணக்கு அலுவலர்
  • மேலாளர் நிலை III
  • முதுநிலை அலுவலார் (நிதி)
  • மேலாளர் (நிதி)

மொத்த பணியிடங்கள் - 52

கல்வித் தகுதி

  • கணக்கு அலுவலர் நிலை - III பணிக்கு விண்ணப்பிக்க Chartered Accountants (CA) / Cost Accountants (ICWA) படிப்பில் தேர்த்தி பெற்றிருக்க வேண்டும்.
  • கணக்கு அலுவலர் பணிக்கு, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் நிலை மூன்று, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் முதல்நிலை அலுவலர் (நிதி) ஆகிய பணிகளுக்கு C.A., ICWA படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பதியாளர் கூட்டமைப்பு நிறுவனத்தில் மேலாளர் நிதி பணிக்கு C.A inter / ICWA(CMA) inter தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க 10+2 தேர்ச்சி பெற்ற பின் நிர்ணயிக்கப்பட்ட கல்வித் தகுதியினை பெற்றிருக்க வேண்டும். 

உடற்தகுதி சான்றிதழ்

பணி நியமனத்திற்காக தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் உடற்தகுதிச் சான்றிதழைச் சமர்பிக்க வேண்டும்.

ஊதிய விவரம்

  • கணக்கு அலுவலர் நிலை - III - ரூ56,900 - ரூ.2,09,200/-
  • கணக்கு அலுவலர் - ரூ56,900 - ரூ.2,09,200/-
  • மேலாளர் நிலை III - ரூ56,900 - ரூ.2,09,200/-
  • முதுநிலை அலுவலார் (நிதி) - ரூ56,900 - ரூ.2,09,200/-
  • மேலாளர் (நிதி)- ரூ.37,700 - ரூ.1,38,500/-

விண்ணப்பக் கட்டணம்: 

நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150

எழுத்துத் தேர்வு - ரூ.100

தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்: 

TNPSC Recruitment:  ரூ.2 லட்சம் மாத ஊதியம்; டி.என்.பி.எஸ்.சி. வேலை! விண்ணப்பிக்க நாளையே கடைசி!

ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:

விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.

எழுத்துத் தேர்வு மையங்கள்:

இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்: 

TNPSC Recruitment:  ரூ.2 லட்சம் மாத ஊதியம்; டி.என்.பி.எஸ்.சி. வேலை! விண்ணப்பிக்க நாளையே கடைசி!

எப்படி விண்ணப்பிப்பது?

www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கியமான நாட்கள்:

TNPSC Recruitment:  ரூ.2 லட்சம் மாத ஊதியம்; டி.என்.பி.எஸ்.சி. வேலை! விண்ணப்பிக்க நாளையே கடைசி!

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.12.2023

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://www.tnpsc.gov.in/Document/english/25_2023-%20Eng.pdf - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
Fengal Cyclone Landfall: கரையை கடக்க ஆரம்பித்த ஃபெஞ்சல் புயல்: எங்கு ரெட் அலர்ட்? எங்கு ஆரஞ்சு அலர்ட்?
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal: வட சென்னையை வதைத்த ஃபெஞ்சால்! தண்ணீரில் தவிக்கும் மக்கள் கண்ணீர்! தீர்வு எப்போது?
Fengal Cyclone LIVE:  ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Fengal Cyclone LIVE: ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Red Alert: மக்களே அலர்ட்.! இன்று மாலைவரை 8 மாவட்டங்களில் அதிகனமழை இருக்கு.!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
Fengal Cyclone: கொட்டும் மழை; பயணிகளே இதை உடனடியா செய்ங்க- சென்னை மெட்ரோ எச்சரிக்கை!
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
கனமழை எதிரொலி: அம்மா உணவகங்களில் இலவச உணவு: எப்போது? எவ்வளவு நாட்கள்? - முதலமைச்சரின் அறிவிப்பு
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
ஃபெஞ்சல் புயல் : சுளுக்கு எடுக்கும் சூறாவளி காற்று... சாலையில் விழும் மரங்கள்; ஸ்தம்பிக்கும் ECR
Embed widget