மேலும் அறிய

Jobs Alert : வேலை தேடுபவர்களின் கவனத்திற்கு.. அடுத்த வாரங்களில் விண்ணப்பிக்க வேண்டிய பணிகள்! முழு விவரம்!

Jobs Alert : அடுத்த பத்து நாட்களில் விண்ணப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பற்றிய கட்டுரை இது.

நம் எல்லோரும் வேலைவாய்ப்பு செய்திகள் வாசிப்போம்; பார்ப்போம்; ஆனால், எல்லா அறிவிப்புகளுக்கும் கடைசி தேதி எப்போது என்று சொல்ல ஒரு அலாரம் இருந்தா நல்லா இருக்கும், இல்லையா? அப்படியான ஒரு நினைவூட்டல் தொகுப்புதான் இது. இன்னும் பத்து நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் என்னென்ன? அதற்கான தகுதிகள் என்ன? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? எப்படி விண்ணப்பிப்பது? போன்ற தகவல்களை இக்கட்டுரையில் காணலாம். 

டிசம்பர் மாத இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டியவைகள்:

1) தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் :

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் (SPORTS DEVELOPMENT AUTHORITY OF TAMIL NADU) காலியகா உள்ள 97 பயிற்றுனர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது. 

ஊதிய விவரம்:

பயிற்றுனர் பணிக்கு மாதம் ரூ.35,600 முதல் ரூ. 1,12,800  வரை ஊதியம் வழங்கப்படும். 

கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு, பணி அனுபவம் உள்ளிட்ட விவரங்கள் பற்றி அறிந்து கொள்ள https://www.sdat.tn.gov.in/pdf/12.12.2022_cr_Tamil.pdf]' -என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அதிகாரப்பூர்வ வலைதளமான www.sdat.tn.gov.in - என்ற முகவரியின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 30.12.2022

2) தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் தற்காலிக கவுரவ விரிவுரையாளர்கள் பணி:

அரசுக் கல்லூரிகளில்  2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலான் என்பது பற்றிய அறிவிப்பினை உயர் கல்வித்துறை வெளியிட்டிருந்தது. 

பணியிடங்கள் - 4,000

மீதம்  உள்ள 1,895 பணியிடங்களுக்கு மாணாக்கர்களின் நலன் கருதியும் அரசு கல்லூரிகளில் முறையான  கல்வி சூழல் நிலவுவதை உறுதிசெய்யும் நோக்கிலும், தமிழக  முதலமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில்  தற்காலிகமாக 2022-2023 ஆம் கல்வியாண்டிற்கு கவுரவ விரிவுரையாளர்களை நியமிக்க அறிவுறுத்தப்பட்டது. 

பணிநாடுநர்கள் தங்கள் விண்ணப்பித்தினை இணையதளத்தில் பதிவிட வசதியாக http://www.tngasa.in- என்ற இணையதளம் செயல்படுகிறது.

கவுரவ விரிவுரையாளர் பணியில் சேர தகுதி பெற்ற பணிநாடுநர்கள் 29.12.2022 வரை பதிவு செய்யலாம். 

ஊதிய விவரம்: 

மாதந்தோறும் ரூ.20,000/- மதிப்பூதியமாக வழங்கப்படும். 

கவுரவ விரிவுரையாளர்கள் பணி இடங்களுக்கு விண்ணப்பிப்பது குறித்து முழுமையாக அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/TNGAS-GL-Instruction%20Tamil%202.0_15.12.2022_11.23AM%20(1).pdf -என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

பாடம் மற்றும் மாவட்ட வாரியாக காலிப் பணியிடங்களை அறிந்துகொள்ள https://www.tngasa.in/pdf/1895%20Guest%20Lecturer%20Allotment%20District%20Wise.pdf-என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

3) பாரத ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு:

நாட்டின் பொதுத்துறை வங்கியான பாரத் ஸ்டேட் பேங்க் வங்கியில் (SBI- State Bank of India)காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது . துணை மேலாளர் மற்றும் சீனியர் எக்ஸிக்யூடிவ் ஆகிய பணியிடங்கள் SPECIALIST CADRE OFFICER என்ற பிரிவின் கீழ் நிரப்பட உள்ளது. இந்தப் பணிக்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதில் துணை மேலாளர் பணி நிரந்த பணி என்றும், சீனியர் எக்ஸிக்யூடிவ் பணி ஒப்பந்தம் அடிப்படையிலானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஊதிய விவரம் :

துணை மேலாளர் பணியிடங்களுக்கு அடிப்படை மாத ஊதியமாக ரூ.48,170 வழங்கப்படும். மேலும், எஸ்.பி.ஐ.-இன் ஊதிய வரையறை பின்பற்றப்படும்.

சீனியர் எக்ஸிக்யூட்டிவ் பணியிடத்திற்கு ஆண்டு வருமானமாக 24 லட்சம் வரை வழங்கப்படும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2022

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://wpassets.adda247.com/wp-content/uploads/multisite/2022/12/09133523/08122022_GITC-Ad-No.CRPD-SCO-2022-23-24.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

https://bank.sbi/careers - அல்லது https://www.sbi.co.in/web/careers-என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

-----------

4) பாரத ஸ்டேட் வங்கி 

பணி விவரம் :

Sector Creit Specialist (MMGS- III / SMGS- IV)

ஊதிய விவரம் :

MMGS- III - ரூ. 63,840-19,90/5-73,790-2,220/2-78,230

SMGS- IV - ரூ.76,010-2,220/4-84,890-2,500/2-89,890

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2022

இது தொடர்பாக கூடுதல் விவரங்களை https://sbi.co.in/documents/77530/25386736/08122022_Advt.+SCO-2022-23-28.pdf/fa585737-5304-edf0-4efd-03b5ff585f94?t=1670497740645- என்ற லிங்கை கிளிக் செய்து பார்க்கவும்.

விண்ணப்பிப்பது எப்படி? 

https://bank.sbi/careers - அல்லது https://www.sbi.co.in/web/careers -என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

----

5) அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை :

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Associate, டெக்னிக்கல் உதவியாளார், டிரெய்ண்ட் அலுவலக அதிகாரி உள்ளிட்ட  பணிக்கு விண்ணக்கலாம்.

ஊதிய விவரம்: 

Project Associate - ரூ.32,500
டெக்னிக்கல் உதவியாளார்- ரூ.20,000
டிரெய்ண்ட் அலுவலக அதிகாரி - ரூ. 100 / ஒரு மணி நேரம்

விண்ணப்பிக்க மற்றும் முழு விவரத்திற்கு https://www.annauniv.edu/pdf/advertisement_chemical_engg.pdf - என்ற இணைப்பை கிளிக் செய்யவும். 

விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.12.2022

-----

6) புதுச்சேரி - அரசு வேலைவாய்ப்பு 

புதுச்சேரியில் Department of Personnel and Administrative Reforms-PW துறையில் உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் 29-ஆம் தேதியே கடைசி நாளாகும்.

பணி விவரம்:

Lower Division Clerk -165
Store Keeper Grade III - 55

மொத்த பணியிடஙகள்  - 220

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க https://recruitment.py.gov.in/ - என்ற இணையதள முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://recruitment.py.gov.in/recruitment/LDCSK2022/notification - என்ற லிங்கை கிளிக் செய்யவும்.  

விண்ணப்பிக்க கடைசி தேதி: 29.12.2022

-----

வரும் ஜனவரி (2023) மாதம் இரண்டு வாரங்களில் விண்ணப்பிக்க வேண்டிய வேலைவாய்ப்புகள்:

1) இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில்

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சிலின் (Indian Council of Medical Research) தேசிய புற்றுநோய் தடுப்பு  மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ICMR- National Institute of Cancer Prevention and Research) காசநோய் ஏற்படுவதை குறைப்பதற்கும் அது தொடர்பான விழிப்புணர்வு செயல் விளக்கத் திட்டத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்: 

Project Junior Medical Officer- ரூ.60,000
Project Health Assistant  -ரூ.17,000
Project Field Assistant- ரூ.17,000
Project X-ray Technician  -ரூ.18,000

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://nicpr.icmr.org.in/ -என்ற இணையத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க http://14.139.224.12/nicprform/- என்ற லிங்கை கிளிக் செய்யவும்.

இது தொடர்பாக கூடுதல் விவரங்களுக்கு https://nicpr.icmr.org.in/images/ProjectJunior_Advt_12_12_22.pdf-என்ற லிங்கில் காணலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 02.01.2023

------

2) தமிழ்நாடு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை வேலைவாய்ப்பு :

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெண்களுக்கு எதிரான 'குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005' என்ற திட்டத்தின் கீழ் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது.  இதற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இதற்கு மாத ஊதியமாக ரூ.30,000 வழங்கப்பட உள்ளது. 

விண்ணப்ப படிவத்தை டவுன்லோடு செய்ய : https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2022/12/2022122125.pdf -

விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.02.2023

மொத்தம் எத்தனை காலி பணியிடங்கள், வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு உள்ளிட்டவற்றை அறிவிப்பின் விவரத்தினை https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2022/12/2022122125.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

-----

3) சென்னை - அஞ்சல் அலுவலக வேலைவாய்ப்பு

இந்திய அஞ்சல் துறையின் கீழ் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தமிழ்நாடு அஞ்சல் அலுவலகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கு வேலைவாய்ப்பு.

ஊதிய விவரம்:

 தேர்ந்தெடுக்கப்படுவர்களுக்கு மாத ஊதியமாக ரூ.19,900 முதல் ரூ. 63,200 வரை வழங்கப்படுகிறது. 

அறிவிப்பின் முழு விவரத்தை https://www.indiapost.gov.in/VAS/Pages/Recruitment/IP08122022_MMS_Eng.pdf- என்ற லிங்க் மூலம் காணலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சலில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்: 9.1.2023

-----

4) இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் வேலைவாய்ப்பு (Small Industries Development Bank of India (SIDBI))

இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியில் காலியாக உள்ள 100 ’கிரேடு ஏ' உதவி மேலாளர்  பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது

ஊதிய விவரம்:

இந்த பணிக்கு தொடக்க ஊதியமாக ரூ. 28,150 ஆக வழங்கப்படும். மேலும், திறன் அடிப்படையில் ரூ.70,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்,  இந்த வேலைவாய்ப்பு குறித்த கூடுதல் விபரங்களை https://sidbi.in/files/careers/SIDBI_Officers_GR'A'_General_Stream_2022.pdf- என்ற இணையதளப்பக்கத்தின் வாயிலாக முழுமையாக அறிந்துக்கொள்ளலாம். 

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளின் முழு விவரத்தை அறிய அறிவிப்பிற்கனா இணைப்பை கிளிக் செய்து காணலாம். விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. ஆல் தி பெஸ்ட்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget