Job Alert: வேலை வேண்டுமா? நர்சிங் படிப்பு தேர்ச்சி அடைந்துவிட்டீங்களா? விண்ணப்பிப்பது எப்படி?
திருவண்ணாமாலையில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரத்தினை இக்கட்டுரையில் காணலாம்.
திருவண்ணாமாலை மாவட்டத்தில் தேசிய நலவாழ்வு குழுமத்தின் கீழ் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் காலியாக உள்ள ED Secetary பணியிடம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக பணிபுரிய விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்
ED Secetary (Emergency Medicine Department Secretary
கல்வி மற்றும் பிற தகுதிகள் :
இந்த பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ அல்லது இளங்கலை நர்சிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Indian Nursing Council – ல் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்:
இதற்கு மாத ஊதியமாக ரூ.14,000 வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கு விண்ணபிக்க தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து நேரிலோ அல்லது அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் தகுதி உடைய ஆவண நகல்களுடன் மாவட்ட நலவாழ்வு
சங்கம், திருவண்ணாமலை அலுவலகத்தில் 15.05.2023 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கப்படவேண்டிய ஆவணங்கள்
1. பட்டப்படிப்பு/பட்டயப் படிப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
2. இருப்பிடச் சான்று
3. சாதிச்சான்று
4. மாற்றுத்திறனாளி/கணவனால் கைவிடப்பட்டவர்/மூன்றாம் பாலினத்தவர் சான்று
5. கொரோனா பெருந்தொற்று காலத்தில் பணிபுரிந்தமைக்கான சான்று அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து இருப்பின் சம்மந்தப்பட்ட மாவட்ட துறை தலைவரிடம் (DDHS/JDHS/DEAN) சான்று சமர்ப்பிக்கவும். தனியார் மருத்துவனையில் பணிபுரிந்து இருப்பின் இணை இயக்குநர் சான்று சமர்பிக்கவும்.
6. TNNMC பதிவுச்சான்று
நிபந்தனைகள்:
1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது மேலும் எந்த நேரத்திலும் பணியிலிருந்து
விடுவிக்கப்படலாம்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி-
நிர்வாக செயலாளர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
பழைய அரசு மருத்துவனை யளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை.
கவனிக்க..
காலி பணியிடங்கள் நியமனம் செய்வது மாறுதலுக்குட்பட்டது.
இனசுழற்சி வாயிலாக காலி பணியிடங்கள் நியமனம் செய்யப்படும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.05.2023
இது தொடர்பான முழு அறிவிப்பினை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம்.
மேலும் வாசிக்க..
Madurai: கள்ளழகர் சித்திரை திருவிழாவிற்கு வந்த 40 வயது நபர் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு