மேலும் அறிய

Changing Job: வந்தாச்சு வருஷக் கடைசி : புதிய வேலைக்கு மாறும் ப்ளான் இருக்கா? இதையெல்லாம் கவனிங்க..!

Changing Job: தற்போதுள்ள வேலையிலிருந்து வெளியேறி புதிய வேலைக்கு செல்ல திட்டமிட்டிருப்பவர்கள், கவனித்தில் கொள்ள வேண்டிய விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

Changing Job: புதிய வேலைக்கு செல்லும் முன்பு நிதி உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கட்டாயம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

வேலை மாறும் சமயம்:

மாத சம்பள வேலைக்குச் செல்லும் ஒவ்வொரு ஊழியருக்கும் இந்த மார்ச் - ஏப்ரல் மாதங்கள் என்பது மிக முக்கியமானதாகும். காரணம் பெரும்பாலான நிறுவனங்களில் இந்த நேரத்தில் தான், ஊழியர்களுக்கான பெர்ஃபாமன்ஸ் போன்ஸ் மற்றும் ஊதிய உயர்வு வழங்குவது போன்ற முக்கிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். அப்படி தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை பொறுத்து தான் ஊழியர்கள் அதே நிறுவனத்தில் தொடரலாமா, வேண்டாமா என்பதையே முடிவு செய்வர். ஒருவேளை நீங்கள் எதிர்பார்த்த போனஸ் மற்றும் ஊதிய உயர்வு கிடைக்கவில்லை என, வேலை மாற முடிவு செய்துவிட்டீர்களா? அல்லது தற்போது இருப்பதை விட சிறந்த அலுவலகத்தில் வாய்ப்பு கிடைத்ததால் வேலையை விடுகிறீர்களா? அப்படி என்றால்,  நீங்கள் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவை கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.

1. உங்களின் நிதி நிலைமை என்ன?

 வேலையை விட்டு விலகுவதற்கு முன் உங்கள் நிதி நிலையைக் கண்டறிந்து மதிப்பிடுவது மிக முக்கியமானதாகும். நோட்டீஸ் பிரியடில் முழு ஊதியம் கிடைக்காவிட்டால் சமாளிக்க முடியுமா என்பன போன்ற, நிதிச் சிக்கல்களை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். சேமிப்புகள் மற்றும் வங்கிக் கணக்குகளில் உள்ள வைப்புத் தொகைகளை அறிந்து, அதற்கேற்றபடி திட்டமிடுதல் அவசியம்.

2. குடும்ப சூழல்:

வேலையை விட்டு விலகும் முடிவு உங்கள் குடும்பம் மற்றும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட சில பணிகளை எவ்வாறு பாதிக்கும் என்பதை ஆலோசியுங்கள்.  காப்பீட்டு திட்டத்திற்கான மாதாந்திர பிரீமியங்கள், கார் கடன்கள் அல்லது வேறு ஏதேனும் நிலுவையில் உள்ள கடன்களை செலுத்துவது குறித்து கவனத்தில் கொள்வது அவசியமாகும். வேலையை விட்டு விலகும் உங்களது முடிவு குடும்பத்தின் அடிப்படைத் தேவைகளைப் பாதிக்காத வண்ணம் திட்டமிடுங்கள்.

3.புதிய வேலையின் தன்மை:

புதிய வேலை உங்களது வளர்ச்சிக்கு சாதகமானதாக இருக்கிறதா, உங்களின் திறமைக்கு ஏற்ப கூடுதல் ஊதியம் பரிந்துரைக்கப்படுகிறதா என்பதை கருத்தில் கொள்ளுங்கள். தற்போதுள்ள அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் சலுகைகளை விட அதிகப்படியான, தொழிலாளர் நலன் சார்ந்த திட்டங்கள் இருக்கின்றனவா என்பதை கேட்டறியுங்கள். தேர்ந்தெடுக்கும் புதிய வேலை துறை சார்ந்து தங்களை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்பதை உறுதி செய்தபிறகே அதனை கிளிக் செய்ய வேண்டும்.

4. தற்போதைய அலுவலக சூழல்:

நிறுவனத்தை விட்டு வெளியேறுவதற்கு முன், வெளியேறுவது சிறந்ததா அல்லது ஒரே வழியா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்வது நல்லது. போதுமான ஊதியம் வழங்கப்படாத சூழலில், சிறந்த சம்பளத்தை வழங்கும் வேலை வாய்ப்பு கையில் இருந்தால், தற்போதைய முதலாளியுடன் கூடுதல் ஊதியத்திற்கு பேச்சுவார்த்தை நடத்தலாம். தற்போதுள்ள அலுவலகத்தில் நண்பர்கள் சூழ இருக்கும் சிலரால்,  புதிய அலுவலகங்களில் உடனடியாக தங்களை முழுமையாக பொருத்திக் கொள்ள முடியாது. அது மோசமான அனுபவமாக மாறலாம். அதற்கேற்றபடி, மனதளவில் உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

5. முறைப்படி வெளியேறுங்கள்: 

மேற்சொன்னவற்றை நினைவில் கொண்டு, சரியான முறையில் அலுவலகத்தில் தெரிவித்து முறைப்படி வெளியேறுங்கள். அது உங்கள் PF கணக்கு போன்றவற்றில் சிக்கல் ஏற்படுவதை தவிர்க்கலாம். அதோடு, எதிர்காலத்தில் தேவைப்பட்டால் மீண்டும் அதே அலுவலகத்தை அணுகும் வகையில் சுமூகமான உறவை பேணவும் உதவும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்PMK MLA Controversy : ’’உங்க வீட்டுல ஆம்பளயே இல்லயா’’ஆபாசமாக பேசிய பாமக MLA..கதறி அழுத பெண்கள்Aadhav Arjuna slams Amit Shah : ‘’அம்பேத்கர் இல்லனா நீங்க இல்லபாத்து பேசுங்க அமித் ஷா’’-ஆதவ் அர்ஜுனா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin:
Udhayanidhi Stalin: "கிறிஸ்தவன், முஸ்லீம், இந்து எல்லாமே நான்தான்" துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
தந்தை உயிரிழப்பு - போலீசுக்கு வந்த ரகசிய தகவல் - மகன் கைது! என்ன நடந்தது?
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
Breaking News LIVE: ஆந்திரா நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு! அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Embed widget