TNUSRB: அரசு வேலைவாய்ப்பு! 621 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!
TNUSRB: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு பற்றிய முழு விவரத்தை இங்கே காணலாம்.
![TNUSRB: அரசு வேலைவாய்ப்பு! 621 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்! Tamil Nadu Uniformed Services Recruitment Board Job 2023 621 post released at tnusrb.tn.gov.in TNUSRB: அரசு வேலைவாய்ப்பு! 621 பணியிடங்கள்; எப்படி விண்ணப்பிப்பது? முழு விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/05/9ee78abe16992d5f5ea8bb7bb171fe481683266632332109_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வேலைவய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா, ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை) பதவிகளுக்கான நேரடி தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணி விவரம்:
காவல் சார்பு ஆய்வாளர்கள்(தாலுகா)
காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை)
காவல் சார்பு ஆய்வாளர்கள் (தமிழ்நாடு சிறப்பு காவல் படை)
ஆண்கள்: 469
பெண்கள் -152
மொத்த பணியிடங்கள் – 621
கல்வி மற்றும் பிற தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மொத்தம் பணியிடங்களில் 20 சதவீத இடங்கள், தமிழ் மொழிவழிக் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட உள்ளது.
வயது வரம்பு:
இதற்கு விண்ணப்பிக்க 20 வயது பூர்த்தியடைந்தவராகவும் 30 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வு குறித்து விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
தேர்வு முறை:
எழுத்து தேர்வு, உடற்தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை, எவ்வித குற்ற வழக்குகளும் இல்லாதவர் என்ற நற்சான்று விசாரணை, ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.
எழுத்துத் தேர்வு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்றும், சரியான தேதி, தேர்வு மையம் தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்பட்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம்:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ரூ.500 கட்டணமாக செலுத்த வேண்டும். Quota மற்றும் துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
எப்படி விண்ணப்பிப்பது?
- தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://tnusrb.tn.gov.in./ என்ற வலைதளபக்கத்திற்கு செல்லவும்.
- ஹோம்பேஜ்- https://cr2022.onlineregistrationform.org/TNU/LoginAction_input.action -என்பதை க்ளிக் செய்யவும்.
- இதில் சுய விவரங்களை பூர்த்தி செய்து முதலில் ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். அதன்பிறகு விண்ணப்ப படிவத்தில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்யவும்.
- விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
- முழு விவரங்களை பூர்த்தி செய்தவுடன் உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்தும் வைத்துகொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி: 30.06.2023
இது தொடர்பாக கூடுதல் அறிவிப்பை https://www.tnusrb.tn.gov.in/pdfs/Notification_en.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் வாசிக்க..
Gold, Silver Price Today : 3 நாட்களில், சவரனுக்கு ரூ.1280.. ராக்கெட் வேகத்தில் எகிறிய தங்கம் விலை..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)