மேலும் அறிய

TN MRB Recruitment 2023:ரூ.71,000 மாத ஊதியம்; எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி!

TN MRB Recruitment 2023: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தின் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வரும் 18-ம் தேதி கடைசி நாள்.

தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில் மருந்தாளுநர் (Pharmacist) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பை வெளியிடப்பட்டிருந்தது. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுநாள் (18/12/2023) கடைசி நாள். 

தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் இதர மருத்துவப்பணியாளர்கள் சீனியாரிட்டி முறையில் தேர்வு செய்யும் நடைமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர்  கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் அரசு மருத்துவமனைக்குத் தேவையாக அனைத்துப் பணியாளர்களையும் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றால், மருத்துவப்பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வில் தேர்ச்சிப்பெற்றால் மட்டுமே பணியில் சேர முடியும் என அரசாணை வெளியிடப்பட்டதோடு தற்போது நடைமுறையில் உள்ளது. இதோடு சில பணிகளுக்கு தேர்வு இல்லாமலும் பணியமர்த்தப்படுவார்கள் என்று உள்ளது. இந்நிலையில் தற்போது சித்தா, ஆயுர்வேதம், ஹேமியோபதி போன்றவற்றில் காலியாக உள்ள மருந்தாளநர் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே இந்நேரத்தில் இதற்கான தகுதி? விண்ணப்பிக்கும் முறை குறித்து இங்கே தெரிந்துகொள்வோம்.

பணி விவரம்

மருந்தாளர் (சித்தா) 

மருந்தாளுநர் ( ஆயுர்வேதம்) 

மருந்தாளுனர்( யுனானி) 

கல்வித் தகுதி :

இதற்கு விண்ணப்பிக்க +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ) Diploma in Indian System of Medicine / Diploma in Pharmacy in Unani/  Diploma in Integrated Pharmacy/ Diploma in Pharmacy in Siddha / Diploma in Pharmacy in Ayurveda  ஆகிய படிப்புகளில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக் கல்வி பயின்றிருக்க வேண்டும். 

ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு  ரூ.35,400 முதல் ரூ. -1,30,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-11)

வயது வரம்பு விவரம் :

இந்த பணியிடங்களுக்கு 01/07/2023  18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 

தேர்வு செய்யும் முறை:

மேற்கண்ட முறைகளில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு எழுத்துத்தேர்வு, தனிப்பட்ட நேர்காணல் மற்றும் ஆவண சரிப்பார்ப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி :18.12.2023

 இந்த வேலைவாய்ப்பு தொடர்பான கூடுதல் விவரங்களை https://www.mrb.tn.gov.in/pdf/2023/UNANI_Notification_2023.pdf / https://www.mrb.tn.gov.in/pdf/2023/Ayurveda_Notification_2023.pdf/ https://www.mrb.tn.gov.in/pdf/2023/Siddha_Notification_2023.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.

லேப் டெக்னீசியனா நீங்கள்?

N MRB Recruitment 2023: தமிழ்நாடு மருத்துவ வாரியத்தில்  உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை  மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் ( Tamil Nadu Medical Service Recruitment Board - MRB) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இம்மாதம் 18-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

TN MRB Recruitment 2023:ரூ.71,000 மாத ஊதியம்; எம்.ஆர்.பி. வேலைவாய்ப்பு -  விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி!

பணி விவரம்:

ECG Technicain

மொத்த பணியிடங்கள் - 10

கல்வித் தகுதி :

இதற்கு விண்ணப்பிக்க அரசு மருத்துவக் கல்லூரி அல்லது மருத்துவக் கல்லூரி இயக்குநரகம் அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஓராண்டுகால Medical Laboratory Technology படிப்புகளில்  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 10+2 என்ற வகையில் பள்ளிக்கல்வி பயின்றிருக்க வேண்டும். 

அதோடு, Electro Cardiogram /  Treadmill Technician சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: 

இந்தப் பணியிடத்திற்கு  ரூ. 19,500 முதல் ரூ. 71,900  வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.  (Pay Matrix Level-1)

பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஆரம்ப கால ஊதியமாக ரூ.13,000 வழங்கப்படும், இரண்டு ஆண்டுக்கும் 5 சதவீத ஊதிய உயர்வு அளிக்கப்படும்.

இரண்டு ஆண்டு பணிக்கு பிறகு ரூ.19,500 மாத ஊதியமாக வழங்கப்படும்.

வயது வரம்பு விவரம் :

இந்த பணியிடங்களுக்கு 01/07/2023  18 வயது பூர்த்தியடைந்தவராக இருக்கலாம். வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளின் விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம். 

தேர்வு செய்யப்படும் முறை :

 இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு, 12 - ஆம் வகுப்பு மற்றும் சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இதில் பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும். இதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை :

இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/  - என்ற இணையதள முகவரி மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் :

பொதுப் பிரிவினருக்கு ரூ. 600, பட்டியலின/ பழங்குடியின பிரிவினருக்கு ரூ. 300 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.12.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.mrb.tn.gov.in/notifications.html - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும். 

வேலைவாய்ப்பு குறித்த தகவல்களை அறிய எம்.ஆர்.பி. அதிகாரப்பூர்வ வலைதளம் -https://www.mrb.tn.gov.in/notifications.html

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதிTirupati Stampede |  Pawan  VS Jagan Mohan டவுன் டவுன் ஜெய் ஜெய் கோஷம் போர்களமான திருப்பதி HOSPITALSeeman Periyar Issue : Vadakalai Vs Thenkalai fight : வடகலை Vs தென்கலை”யார் பெரியவா..?”களேபரமான காஞ்சிபுரம் கோயில்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
PM Modi: ”நான் மனிதன்தான்; கடவுள் இல்லை.” பிரதமர் மோடி பாட்காஸ்ட் உரையில் சொன்னது என்ன?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Erode East By Election: ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல்; தி.மு.க.வா? காங்கிரசா? நாளை வேட்பாளர் அறிவிப்பு?
Donald Trump: தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
தப்பித்த டொனால்டு டிரம்ப்: அதிபர் பதவிக்கான சிக்கலில் இருந்த வழக்கில் விடுவிப்பு.!
Actor Ajith:
Actor Ajith: "இனி நடிக்கமாட்டேன்" அஜித் தந்த ஷாக்! பேரதிர்ச்சியில் ரசிகர்கள்
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
நேற்று ”யார் அந்த சார்” பேட்சுடன் அதிமுக; இன்று ”இவன்தான் அந்த சார்” பலகையுடன் திமுக: பரபரப்பில் சட்டப்பேரவை
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Pongal Holidays: பொங்கலுக்கு இந்த 2 நாளும் விடுமுறை: புதுச்சேரி அரசு அறிவிப்பு
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
Tim David: RCBடா! பிக்பாஷ் லீக்கில் பொளந்து கட்டிய டிம் டேவிட்! IPL-க்கு ட்ரெயிலரா?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
விவசாயிகளே! காட்டுப்பன்றிகளை இனி சுட்டுத் தள்ளலாம் - யாருக்கு அந்த அதிகாரம்?
Embed widget