மேலும் அறிய

TNHRCE Recruitment 2023: திருச்செந்தூர் கோயிலில் வேலைவாய்ப்பு; ரூ.52 ஆயிரம் சம்பளம் - உடனே விண்ணப்பிங்க!

TNHRCE Recruitment 2023: திருச்செந்தூர் கோயிலில் உள்ள வேலைவாய்ப்பு குறித்த முழு விவரம் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள  பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதி உள்ள இந்து சமயத்தைச் சார்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.  காலிப்பணியிடங்களின் விவரங்கள் மற்றும் இதர விவரங்களை இக்கட்டுரையில் காணலாம். இதற்கு விண்ணப்பிக்க வரும் 30-ம் தேதி கடைசி தேதியாகும்.

பணி விவரம்:

உதவி மின் கம்பியாளர் 

கல்வித் தகுதி

இந்தப் பணிக்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் வழங்கப்பட்ட மின்/ மின் கம்பி பணியாளர் தொழில் பயிற்சி நிறுவன சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மின் உரிமம் வழங்கல் வாரியத்திடமிருந்து ‘H' சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்

இதற்கு தேர்வு செய்யப்படுவர்களுக்கு Pay Matric level 18-ன் படி ரூ.16,600 முதல் ரூ.52,400 வரை மாத ஊதியம் வழங்கப்படும். 

இதர நிபந்தனைகள்

இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டைச் சார்ந்தவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பு குறித்து தெரிவிக்கப்படும். 

விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

அஞ்சலில் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:

இணை ஆணையர்/செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்,

திருச்செந்தூர் - 628215,

தூத்துக்குடி மாவட்டம்.

தொலைப்பேசி எண் : 04639-242221.

https://hrce.tn.gov.in/hrcehome/index.php - என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் - 30.10.2023 மாலை 05.45 மணி வரை

இது குறித்த முழு விவரத்திற்கு https://drive.google.com/file/d/19vZrd03fzGM3bIzQWyI3iyD4H4CLePcs/view - என்ற லிங்கை க்ளிக் செய்து காணலாம்.

அலுவலக உதவியாளார் வேலைவாய்ப்பு

திருப்பத்தூர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பிரிவில் உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்தப் பணியிடம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது. 

பணி விவரம்:

அலுவலக உதவியாளார் 

பணியின் தன்மை

அலுவலக தலைவர், பிரிவு தலைவர், பணியாளர்களின் உடனிருத்தல் கோப்புகள் எடுத்து செல்லுதல் மற்றும் பிற அலுவலக பணிகள் செய்தல்.

மொத்த காலி பணியிடங்கள் -11

கல்வித் தகுதி:

மேலே குறிப்பிடப்பட்டுள்ள பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. 

வயது வரம்பு:

இந்தப் பணியிடங்களுக்கு பொதுப்பிரிவு பிரிவினருக்கு 32 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். பட்டிலின பிரிவினர் /பழங்குடியின பிரிவினர், ஆதரவற்ற விதவை உள்ளிட்டோருக்கு அரசு விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

அலுவலக உதவியாளர் -  ரூ.15,700/- ரூ. 58,100 (1300 GP)

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள்:

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

5. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/- அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10*4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும். 

அஞ்சல் அனுப்பப்பட வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி),

ஊரக வளர்ச்சி அலகு, மூன்றாவது தளம் (E-பிளாக்)

மாவட்ட ஆட்சியரகம், 

திருப்பத்தூர் - 635 601

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி நேர்காணல் கடிதம் (Call Letter) பின்னர் அனுப்பி வைக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்ய https://tirupathur.nic.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:  31.10.2023 மாலை 05.45 வரை 

அதிகாரப்பூர்வ வலைதள முகவரி- https://cdn.s3waas.gov.in/s37f6ffaa6bb0b408017b62254211691b5/uploads/2023/09/2023093062.pdf - என்ற லிங்கை கிளிக் செய்து அறிவிப்பின் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம்.


 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget