Job Alert: டிகிரி முடித்தவரா? 2257 பணியிடங்கள்; கூட்டுறவு சங்கங்களில் வேலை செய்ய வாய்ப்பு- முழு விவரம்!
Job Alert: தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையில் உள்ள வேலைவாய்ப்பிற்கான விவரங்களை இங்கே காணலாம்.
![Job Alert: டிகிரி முடித்தவரா? 2257 பணியிடங்கள்; கூட்டுறவு சங்கங்களில் வேலை செய்ய வாய்ப்பு- முழு விவரம்! Tamil Nadu Government Cooperative Society Recruitment 2023 Notification 2257 Job Vacancy Know More Details Job Alert: டிகிரி முடித்தவரா? 2257 பணியிடங்கள்; கூட்டுறவு சங்கங்களில் வேலை செய்ய வாய்ப்பு- முழு விவரம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/14/2a620ebd76c7a73e617953262ba405941699956656075333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் கூட்டுறவு துறையின் கீழ் கூட்டுறவு பண்டகசாலை, நகர கூட்டுறவு வங்கி பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், வேளாண் விற்பனையாளர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் இயங்கி வருகின்றன. இங்குள்ள சங்கங்களில் தற்போது 2257 உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
பணி விவரம்
அரியலூர் - 28
செங்கல்பட்டு - 73
கோவை – 110
சென்னை – 132
திண்டுக்கல் – 67
ஈரோடு – 73
காஞ்சிபுரம் – 43
கள்ளக்குறிச்சி – 35
கன்னியாகுமரி – 35
கரூர் – 37
கிருஷ்ணகிரி – 58
மயிலாடுதுறை – 26
நாகப்பட்டினம் – 8
நீலகிரி – 88
ராமநாதபுரம் - 112
சேலம் – 140
சிவகங்கை – 28
திருப்பத்தூர் – 48
திருவாரூர் – 75
தூத்துக்குடி – 65
திருநெல்வேலி – 65
திருப்பூர் – 81
திருவள்ளூர் – 74
திருச்சி – 99
ராணிப்பேட்டை – 33
தஞ்சாவூர் – 90
திருவண்ணாமலை – 76
கடலூர் – 75
பெரம்பலூர் – 10
வேலூர் – 40
வேலூர் – 40
விருதுநகர் – 45
தருமபுரி – 28
மதுரை – 75
நாமக்கல் – 77
புதுக்கோட்டை – 60
தென்காசி – 41
தேனி – 48
விழுப்புரம் - 47
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை - 2257
கல்வித் தகுதி:
- இளங்கலை பட்டப்படிப்புடன் கூட்டுறவு பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.
- ராணுவத்தில் பணி புரிந்தவர்கள், ராணுவத்தால் வழங்கப்படும் பட்டப்படிப்பு முடிந்தால் விண்ணப்பிக்கலாம்.
- கூட்டுறவு பயிற்சியை பொறுத்தவரை தமிழ்நாடு ஒன்றிய கூட்டுறவு மூலம் நடத்தப்படும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் வழங்கப்படும் கூட்டுறவு பயிற்சி, சென்னை நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மற்றும் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் நடத்தப்படும் உயர் மேலாண்மை பயிற்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு விவரம்
இந்தப் பணியிடங்களுக்கு 18 வயது முதல் 32 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து தேர்வ மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியான விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்து தேர்வு நடைபெறும் நாள்: 24.12.2023
விண்ணப்பிக்கும் முறை:
இந்தப் பணியிடங்களுக்கு அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: ரூ. 500
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01.12.2023
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும். https://www.drbchn.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம்.
உதாரணமாக சென்னை மாவட்ட கூட்டுறவு சங்கத்திற்கான அறிவிப்பை தெரிந்துக் கொள்ள https://cooperativercs.s3.ap-south-1.amazonaws.com/Notification/32_Notification_1.pdf -என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)