SDAT Recruitment: விளையாட்டு வீரர்களா? தமிழ்நாடு அரசு வேலை விண்ணப்பிக்கலாம்? - முழு விவரம்
SDAT Recruitment: சர்வதேச விளையாட்டு வீரர்கள் வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றி காணலாம்.
சர்வதேச, தேசிய போட்டிகளில் பதக்கம் பெற்ற வீரர், வீராங்கனையர், அரசு வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க, வரும், 31ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரத்தை இங்கே காணலாம். ஒலிம்பிக் மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கம் வென்ற, தமிழக வீரர், வீராங்கனையரை ஊக்கப்படுத்தும் வகையில், அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில், 3 சதவீத இட ஒதுக்கீட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
2018 ஜனவரி முதல் சர்வதேச போட்டிகள், கோடைக்கால ஒலிம்பிக், காமன்வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, உலக, காமன்வெல்த், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றவர்கள், வெற்றி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் .
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச விளையாட்டு கூட்டமைப்பால் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுதோறும் நடத்தப்படும் உலக சாம்பியன்ஷிப் போட்டிகள். 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஆண்டுக்கு ஒருமுறை 10சி ஆல் அங்கீகரிக்கப்பட்ட ISF -ன் கீழ் நடத்தப்படும் காமன்வெல்த் சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்.
4 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது 10சி -ல் அங்கீகரிக்கப்பட ISF கீழ் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆசிய சாம்பியன்ஷிப்கள் போட்டிகள்...
சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டு குழுவால் ஏற்பாடு செய்யப்பட்ட உலக விளையாட்டுகள் மற்றும் காது கேளாதோர் விளையாட்டுகள்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சீனியர் அளவிலான மாநில சாம்பியன்ஷிப் போட்டிகள் மட்டுமே தகுதியான போட்டிகளாக கருதப்படும்.
சர்வதேச பார்வையற்றோர் விளையாட்டு சங்கம், காது கேளாதோருக்கான சர்வதேச விளையாட்டுகளில் பங்கேற்றோரும், வெற்றி பெற்றோரும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு
விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட, மாநில அளவிலான சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம். n இதற்கு அனைத்து தகுதிகளுடன், 40 வயதிற்கு உட்பட்டோராக இருக்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பங்களை, www.sdat.tn.gov.in எனும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து,.
இதற்கு இணையதளம் வழியாகவோ, சென்னை தலைமை அலுவலகத்தில் நேரிலோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி - 30.10.2023
டி.என்.பி.எஸ். வேலைவாய்ப்பு
தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பணிகளில் அடங்கிய இராணிப்பேட்டைகால்நடை நோய் தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION) வெளியிட்டுள்ளது.
பணி விவரம்
ஆராய்ச்சி உதவியாளர்
மேலாளார்
கல்வித் தகுதி
ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு . M.V.Sc., (Micro-biology, Pathology, Parasitology, Dairy Micro-biology
and Animal Biotechnology) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை மொழிப்பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
மேலாளர் பணிக்கு கால்நடை மருத்துவப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்
ஆராய்ச்சி உதவியாளர்- ரூ.56,100 - 2,05,700
மேலாளர் பணி - ரூ.55,500 - ரூ.1,75,700/-
வயது வரம்பு விவரம்
விண்ணப்பக் கட்டணம்:
நிரந்தரப் பதிவுக்கட்டணம் - ரூ.150
எழுத்துத் தேர்வு - ரூ.120
தேர்வுக் கட்டணச் சலுகை/ விலக்கு விவரம்:
ஒரு முறை பதிவு / நிரந்தரப்பதிவு:
விண்ணப்பதாரர்கள் நிரந்தரப் பதிவுக்கட்டணமாக ரூ.150/-ஐ (ரூபாய் நூற்று ஐம்பது மட்டும்) செலுத்தி தங்களது அடிப்படை விவரங்களை நிரந்தரப்பதிவில் (OTR) கட்டாயமாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இந்த நிரந்தர பதிவு முறை பதிவு செய்த நாளிலிருந்து 5 வருட காலத்திற்கு செல்லத்தக்கதாகும். அதன் பிறகு உரிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்தி இதனை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நிரந்தரப் பதிவானது எந்த ஒரு பதவிக்கான விண்ணப்பமாக கருதப்படமாட்டாது. விண்ணப்பதாரர் தேர்வு எழுத விரும்பும் ஒவ்வொரு தேர்விற்கும் தனித்தனியே இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு நிரந்தரப் பதிவுக்கான பதிவுக் கட்டணம் இந்த நியமனத்திற்கான விண்ணப்பம் / தேர்வுக் கட்டணம் அல்ல. விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும்போது செலுத்த வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய ஒரு நிரந்தரப் பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும்.
எழுத்துத் தேர்வு மையங்கள்:
இந்தப் பணியிடத்திற்கான தேர்வு சென்னை, மதுரை, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் முறை:
இதற்கு எழுத்துத் தேர்வு, நேர்காணல்/ வாய்மொழித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத் தேர்வு பாடத்திட்டம்:
எப்படி விண்ணப்பிப்பது?
www.tnpscexams.in / www.tnpsc.gov.in - ஆகிய இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முக்கியமான நாட்கள்:
விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.10.2023
அறிவிப்பின் முழு விவரத்திற்கு https://tnpsc.gov.in/Document/tamil/16_2023__TAM.pdf -என்ற லிங்க்கை கிளிக் செய்யவும்.