Job Alert: மாதம் ரூ.60 ஆயிரம் வரை ஊதியம்; யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? பணி விவரத்திற்கு இதைப் படிங்க!
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பின் முழு விவரத்தை இங்கே காணலாம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுச் சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கம் மூலமாக நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மருத்துவ அலுவலர், செவிலியர், பல்நோக்கு சுகாதார பணியாளர் மற்றும் உதவி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.
இப்பணியிடங்களுக்கு ரூ.14,000 முதல் ரூ.60,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 06.03.2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பணி விவரம்
- மெடிக்கல் அலுவலர்- 10
- ஸ்டாஃப் நர்ஸ் 10
- MPHW 10
- உதவி அலுவலர் 10
கல்வித் தகுதி:
- மருத்துவ அலுவலர் (Medical Officer) பணியிடத்திற்கு MBBS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஸ்டாஃப் நர்ஸ் (Staff Nurse) பணியிடத்திற்கு GNM/B.Sc., Nursing படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
MPHW 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதோடு இரண்டு ஆண்டுகள் ’ Multi Purpose Health worker/Health Inspector/Sanitary Inspector Course training பெற்றிருக்க வேண்டும். - உதவி அலுவலர் (Support Staff) பணிக்கு எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்தப் பணியிடங்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு ஏதும் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை.
ஊதிய விவரம்
மெடிக்கல் அலுவலர்- ரூ.60,000
ஸ்டாஃப் நர்ஸ் ரூ.18,000
MPHW ரூ.14,000
உதவி அலுவலர் ரூ.8,500
விண்ணப்பிக்கும் முறை:
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://chengalpattu.nic.in/- என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் ஆவணங்களின் நகல்கலை இணைத்து நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 06.03.2023 மாலை 5 மணி வரை.
அஞ்சல் அனுப்ப வேண்டிய முகவரி
செயற்செயலாளர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் மற்றும் துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள்,
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்
செங்கல்பட்டு - 631 001
மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s39778d5d219c5080b9a6a17bef029331c/uploads/2023/02/2023022071.pdf- என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
மேலும் படிக்க..
Job Alert : மத்திய அரசுப் பணி; 1,793 பணியிடங்கள்; விண்ணப்பிப்பது எப்படி?முழு விவரம்!