Job Alert: 10, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை; நாளைக்குள் விண்ணப்பிங்க!
Tamil Nadu Civil Supplies Corporation Jobs :மதுரை மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
![Job Alert: 10, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை; நாளைக்குள் விண்ணப்பிங்க! Tamil Nadu Civil Supplies Corporation Job Vacancy Madurai Seasonal Helper Watchman Bill Clerk Check Salary Other Details Job Alert: 10, 12-ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்; நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் வேலை; நாளைக்குள் விண்ணப்பிங்க!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/09/2b11124aa34fcdd9cef0a99579ec2ac91673261530944333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மதுரை மண்டல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தில் நெல் கொள்முதல் பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தற்காலிக பருவகால பணிக்குப் பட்டியல் எழுத்தர், உதவுபவர் பணியிடங்களுக்குப் பெண்கள் மற்றும் ஆண்கள் மற்றும் காவலர் பணியிடங்களுக்கு ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பணி விவரம்:
- பருவகால பட்டியல் எழுத்தர்
- பருவகால உதவியாளர்
- பருவகால காவலர்
வயது வரம்பு :
இந்தப் பணிகளுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 32 ஆகும். வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக அறிவிப்பில் விரிவான தகவல்கள் உள்ளன.
கல்வித்தகுதி:
பட்டியல் எழுத்தர் பணிக்கு இளநிலை அறிவியல் / வேளாண்மை மற்றும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பருவகால உதவியாளர் பணிக்கு 12- ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காவலர் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் தங்களில் தகுந்த சான்றிதழ்களின் நகல்களுடன் சுய விவரப்படிவத்தை தபால் மூலம் அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மண்டல மேலாளர்,
மண்டல அலுவலகம்,
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம்,
10, குருவிக்காரன் சாலை,
அண்ணாநகர்,
மதுரை - 20.
குறிப்பு :
விண்ணப்பிக்கப்படும் பதவியின் பெயரை விண்ணப்ப உறையிலும் மற்றும் விண்ணப்பத்திலும் தெளிவாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கவும். ஒரு நபர் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள். ஒன்றுக்கு மேற்பட்ட பதவிக்கு ஒரே நபரது விண்ணப்பங்கள் பெறப்பட்டால் நிராகரிக்கப்படும்.
நேர்காணல் நடைபெறும் நாள்:
நேர்காணலுக்கான கடிதம் கிடைக்கவில்லை என்றாலும் விண்ணப்பதார்கள் தகுந்த சான்றிதழ்களுடன் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்.
நேர்காணலுக்கு கல்வி சான்றிதழ், ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இருப்பிடம் தொடர்பான அசல் சான்றிதழ்களை எடுத்து செல்ல வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 10.01.2023.
அறிவிப்பின் விவரம் - file:///C:/Users/jansi/Downloads/TNCSC%20Madurai%20Recruitment%202023%20450%20Seasonal%20Bill%20Clerk%20Posts%20(2).pdf
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)